Breaking News

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பணிகளால் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது

நிர்வாகி
0
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பணிகளால் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது
62-வது நிறுவன தினம்: மேலப்பாளையம் மாநாட்டில்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

மேலப்பாளையம், மார்ச்.12-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பணிக ளால் சமுதாயத்தில் எழுச்சி யும், மறுமலர்ச்சியும் ஏற் பட்டுள்ளதாகவும், மாநாட்டிற்கு வாழ்த்துச் செ
 ய்தி அனுப்பிய முதல்வர் கலைஞருக்கும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கும் நன்றி தெரி வித்துக் கொள்வதுடன் பென்னாகரம் இடைத் தேர்தலில் திமு.க. வெற்றிக் காக முஸ்லிம் லீகினர் தீவிர மாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.
மேலப்பாளையம் மாநாட்டில் நிறைவுரை யாற்றிய போது அவர் குறிப் பிட்டதாவது-


இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நினைவு தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக மிக எழுச்சியுடன் இன்று காலை யிலிருந்து தொடர்ந்து நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது. மாநாடு நடைபெறும் இந்த திருநெல்வேலி மாவட்டம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகோடு அதன் வர லாற்றோடு பின்னிப் பிணைந்த மாவட்டமாகும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வரலாற்றை எழுதும் போது திருநெல்வேலி மாவட்டத்தை தவிர்த்து எழுத முடியாத அளவிற்கு அதன் ஒவ்வொரு சாதனை யிலும் இந்த மாவட்டத் திற்கு பங்கு இருக்கிறது.

காயிதெ மில்லத் பிறந்த மண்
நமது இயக்கத்தின் நிறுவனத்தலைவர் கண்ணி யத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களை தந்த மாவட்டம் இந்த மாவட் டம் அவர்கள் பிறந்து வளர்ந்து சமுதாயத்திற்கு பல சேவைகளை செய் வதற்கு அடித்தளமிட்ட மாவட்டம் இந்த மாவட் டம்.
முஸ்லிம் லீக்
சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள்
முஸ்லிம் லீகிற்கு ஏராள மான எம்.எல்.ஏக்களை (சட்டமன்ற உறுப்பினர் களை) தொடர்ந்து தந்து வந்த மாவட்டம் இந்த மாவட்டம். வேலூர் தொகுதி முஸ்லிம் லீகிற்கு நாடாளுமன்ற உறுப்பி னரை தொடர்ந்து தருவது போல் தொடர்ந்து நாடா ளுமன்ற உறுப்பினர்களை யும், சட்டமன்றத்திற்கு பல உறுப்பினர்களை தொடர்ந்து தந்துள்ளது திருநெல்வேலி மாவட்டம்.
கடையநல்லூரிலிருந்து சாகுல் ஹமீதையும், பாளையங் கோட்டையிலி ருந்து ரவணசமுத்திரம் பீர் முஹம்மதுவையும், கோதர் முகைதீன், சம்சுல் ஆலம் போன்ற பல முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் சமுதாயத்திற்கு நிறைந்த சேவை புரிந்துள்ளனர்.
அதேபோன்று கண்ணி யத்திற்குரிய காயிதெ மில்லத், கே.டி.எம். அஹமது இப்ராஹீம், ஏ.கே. ரிபாயி சாஹிப் ஆகி யோர் நாடாளுமன்ற உறுப் பினர்களாக இருந்து சமு தாயத்திற்கு சேவையாற்றி யுள்ளனர்.
நெசவோடு சேர்த்து
திருக்குர்ஆன் மனனம்
அரசியலில் மட்டும் அல்லாமல் ஆன்மீகத்தி லும் இந்த மாவட்டம் குறிப்பாக மேலப்பாளை யம் மார்க்கக் கோட்டை யாக திகழ்ந்து வந்துள்ளது. பல இறைநேசச் செல்வர் கள் இந்த மண்ணிலிருந்து மார்க்க சேவை புரிந் துள்ளனர். இங்குள்ள முஸ்லிம்களில் பெரும் பாலானோர் நெசவுத் தொழில் மேற்கொள்ளக் கூடியவர்களாக திகழ்ந்த போதிலும், நெசவுக்காக துணியை நெய்யும்போது கூடவே திருக்குர்ஆன் வச னங்களையும் தங்கள் நெஞ்சங்களில் நெய்யக் கூடியவர்களாக திகழ்ந்து வந்த காரணத்தால் இந்த மாவட்டத்திலிருந்து ஏராளமான ஹாபிஸ்கள் திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் நாட்டில் பல பகுதிகளுக்கும் சென்று மார்க்க சேவை புரிந்துள் ளனர்.
தமிழகத்திலே இரண்டு பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை சமுதாயம் பெற்ற ஒரே மாவட்டம் இந்த மாவட்டம்தான். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கனி சாஹிப் கோழிக்கோடு பல் கலைக் கழகத்தில் துணை வேந்தராக பொறுப்பேற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கோழிக் கோட்டிலே பல்கலைக் கழகம் அமைக்கப்பட்ட தும் அதன் துணைவேந் தராக பொறுப்பேற்க தகுதி யான ஒருவரை நாட்டின் பல பகுதிகளிலும் தேடி அலைந்து கடைசியில் மேலப்பாளையத்தில் சம்சு கனியை கண்டு பிடித்து அழைத்துச் சென்றார் கேரள மாநில கல்வி அமைச்சராக இருந்த சி.எச். கோயாசாஹிப் அவர்கள்
அதேபோன்று சென்னை பல்கலைக்கழகத் தின் துணைவேந்தராக பணியாற்றிய சாதிக் அவர்கள் இந்த மாவட் டத்தைச் சேர்ந்தவர்தான். இதுவரை முஸ்லிம் சமுதா யத்திலிருந்து நான்கு பேர் வேளாண் துறைக்கு ஒரு வரும், மருத்துவப் பல் கலைக்கழகத்திற்கு டாக்டர் மீர் முஸ்தபா உசேனும் பதவி வகித்திருந் தாலும் ஒரே மாவட்டத் திலிருந்து இரண்டு பேர் வந்த பெருமை திரு நெல்வேலிக்கு சேரும்.
இப்படி கல்வியிலும் , மார்க்க சேவையிலும் குர்ஆன் மனனத்திலும் மற்ற பல மாவட்டங்க ளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் திருநெல்வேலி மாவட்டம் மேலப் பாளையத்தில் நடை பெறும் இந்த சமுதாய எழுச்சி மாநாடு நிச்சயம் சமுதாயத்தில் ஒரு மலர்ச்சியை உருவாக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
சமுதாயத்தின்
மறுமலர்ச்சி
1948 மார்ச் 10-ம் தேதி இந்த இயக்கம் துவங்கப் பட்டபோது இந்த இயக் கத்தில் இணையக் கூடிய நிலையில் அன்றைய சமுதாய மக்கள் இல்லை. இந்த இயக்கத்தில் இருந்த பல பேர் வெளியேறி செல்லக்கூடிய சூழ்நிலை தான் அன்று இருந்தது. முஸ்லிம் லீக் என்று சொல்லவே பயந்த நிலையி லேயே பலரும் இருந்துள் ளனர். அப்படிப்பட்ட சூழ் நிலையில்தான் எவர் வந்தா லும், வராவிட்டாலும் நான் ஒருவன் உயிருடன் இருக் கும் வரையிலாவது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இந்த மண்ணில் இருந்தே தீரும் என்று கண்ணியத்தென்றல் காயிதெ மில்லத் பிரகட னப்படுத்தினார். அவ்வாறே பிரசாரங்களை மேற் கொண்டார். அதன் விளை வாக சமுதாயத்தில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட் டது.
இயக்கம்தொடங்கப்பட்டு சுமார் 15 ஆண்டு காலத் திற்கு பின்னர் 1962-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போதுதான் இயக்கத்திற்கான முழுமை யான அங்கீகாரம் சமுதாய மக்களிடமிருந்து கிடைக் கத் துவங்கியது. அதன் பின்னரே பலரும் முஸ்லிம் லீகில் தங்களை இணைத் துக் கொள்ளவும் இயக்கம் குறித்து வெளிப்படையாக பேசவும் துவங்கினர். அது மெல்ல மெல்ல வளர்ந்து இன்று மிக எழுச்சியுடன் காணப்படுகிறது.
ஆண்டுதோறும்
ஐந்து நிகழ்ச்சிகள்
முஸ்லிம் லீகின் பணிகளை விரிவான முறை யில் எடுத்துச் சொல்லவும், ஒட்டு மொத்த சமுதாய மக்களும் இந்த இயக் கத்தின் பின்னால் அணி வகுக்க செய்யும் நோக்கிலும் சீரிய திட் டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. ஆர்ப்பாட்டம் - போராட்டத்தின் மூலம் நாம் கட்சியை வளர்க்க வில்i ல. ஆக்கப்ப+ர்வ மான வழிமுறைகளில்தான் நாம் கட்சியை வளர்ப்ப தோடு சமுதாயத்திற்கு நன்மை களை பெற்றுத் தர முடியும் என்பதை உணர்ந்து மத்திய - மாநில அரசுகளோடு நல்லுறவு பேணும் வகையிலேயே முஸ்லிம் லீகின் செயல் பாடுகள் அமைந்துள்ளன. நாம் வகுத்த சீரிய திட்டத் தின்படி - எடுத்த தீர்மா னத்தின்படி ஆண்டுக்கு ஐந்து நிகழ்ச்சிகளை மாநில அளவில் மேற்கொள்ள முடிவு செய்த தன்படி முதல் நிகழ்ச்சியாக முஸ்லிம் லீக்பேச்சாளர் பயிற்சி முகாமை தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.
இரண்டாவதாக முஸ்லிம் லீக் நிறுவன தினத்தை ஆண்டுதோறும் மாநிலம் தழுவிய மாநாடாக நடத்த முடிவு செய்ததன்படி இன்று இந்த மறுமலர்ச்சி மாநாடு இங்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
மூன்றாவதாக காயிதெ மில்லத் அவர்கள் பிறந்த தினமான ஜூன் 5-ஐ கல்வி விழிப்புணர்வு மாநாடாக கொண்டாட முடிவு செய்யப்பட்டதன்படி அந்த நிகழ்ச்சியும்,
நான்காவதாக சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது பிறந்த அக்டோபர் 4-ஐ சமூக நல்லிணக்க மாநாடா கவும் சமுதாய மக்களை மஹல்லா ஜமாஅத்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆண்டுக்கொரு முறை மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடும் நடத்தும் வகையில் ஏற்பா டுகள் செய்யப்பட்டு, அது தொடர்பான பணிகள் நடைபெற உள்ளன.
இப்படி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை ஆக்கப்ப+ர்வமான வகை யில் வளர்க்கவும் சமுதாய மக்களுக்கு அதிகமான நன்மைகள் பெற்றுத்தரவும் நாம் அனைவரும் முயற்சி களில் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
பென்னாகரத்தில்
தீவிரப் பிரச்சாரம்
நடைபெற உள்ள பென்னாகரம் இடைத் தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித் துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. அதேபோன்று மத்தியில் ஐக்கிய முற் போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை பிரச் சாரம் செய்யவும், சமுதா யத்திற்கு உரிய நன்மை களை பெற்றுத் தரவும் முஸ்லிம் லீகினர் ஒவ்வொ ருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். இன்றைய சமு தாய மறுமலர்ச்சி மாநாட் டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச் சர் மு.க. அழகிரி அவர்க ளுக்கும் அவர் பங்கேற்கும் வகையில் அனுமதி வழங்கி யும் மாநாடு சிறக்க வாழ்த் துச் செய்தி அனுப்பியும் நம்மைப் பெருமைப்படுத் திய முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் இம் மாநாடு சிறக்க பல வகையி லும் உற்ற துணையாக இருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நமது நன்றியையும் தெரி வித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தமது நிறைவு உரையில் குறிப்பிட்டார்.


முஸ்லிம் லீக் மாநாட்டில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேச்சு
கலைஞர் வழியில் முஸ்லிம்களுடன் நட்பைத் தொடருவேன்


மேலப்பாளையம், மார்ச்.12-
கலைஞர் வழியில் இஸ்லாமிய மக்களுடன் நட்பை தொடருவேன் என்று மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறினார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஜின்னா திடலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாடு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முதலில் முஸ்லிம் பெண்கள் விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடந் தன. மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ். டி. சந்தை முக்கில் சமூக நல்லிணக்க பேரணி தொடங்கி, ஜின்னா திடலை அடைந்தது.
அதைத் தொடர்ந்து சமுதாய மறுமலர்ச்சி மாநாடு தொடங்கியது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரி யர் கே.எம். காதர் முகை தீன் தலைமை தாங்கினார். மாநாட்டுக் குழு தலைவர் துராப்ஷா மாநாட்டை தொடங்கி வைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் வாழ்த்திப் பேசினார்.
மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை மந்திரி மு.க.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப் போது அவர் கூறியதா வது:-
வாக்காளர்களுக்கு நன்றி
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலப் பாளையம் நகருக்குள் நுழையும் போது மனதில் ஒரு நினைவு தோன்றியது. கடந்த 2006-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி பாளைங்கோட்டை தொகுதி என்ற பெருமை மனதில் வந்தது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட டி.பி.எம். மைதீன்கான் இன்று அமைச்சரவை யிலும் இடம் பெற்று உள்ளார்.
இந்த மாநாடு மூலம் பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்.
வாக்குறுதிதான் முக்கியம்
பாராளுமன்றத்தில் முக் கியமான மசோதாவான மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப் பட்டு உள்ளது. மாநிலங் களவையில் வெற்றி பெற்று விட்டதால் மக்களவை யிலும் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் விமான நிலையத்துக்கு புறப்பட்டேன்.
அப்போது சகோதரி கனிமொழியும், தயாநிதி மாறனும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களவையில் மசோதா நிறைவேறும் போதும் நான் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். என்னுடைய ஒரு ஓட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர்களிடம் கூறினேன். அதனால் என்னுடைய பதவி பறிபோனால் கூட பரவா யில்லை. எனக்கு மக்கள் நலன்தான் முக்கியம், முஸ்லிம் லீக் நண்பர்க ளுக்கு கொடுத்த வாக்கு தான் முக்கியம் என்று புறப் பட்டு வந்தேன்.
கலைஞர் வழியில் நட்பு
என்னுடைய தந்தை கலைஞர் உங்களோடு எந்த அளவுக்கு அன்பை பகிர்ந்து கொண்டாரோ, அதே போல் நானும் உங்களோடு நட்பை, அன்பை பகிர்ந்து கொள் வேன். என்னுடைய தந்தை வழியில் இஸ்லாமிய மக்களுடன் நட்பைத் தொடருவேன்.
1948-ம் ஆண்டு முஸ்லிம் லீக் கட்சி தொடங்கப் பட்டபோது காயிதெ மில்லத் அவர்களை சிறு வயதில் 3 முறை பார்த்து உள்ளேன். அண்ணா, கலைஞர், காயிதெ மில்லத் ஆகியோர் ஒன்றாக உட் கார்ந்து பேசியது என்னு டைய நினைவில் உள்ளது.
காயிதே மில்லத்தின் பேரன் அப்துல் ஹக், நான் படித்த கிறிஸ்தவ பள்ளி யில் படித்தார். நான் 8-ம் வகுப்பு படித்த போது என்னுடைய தம்பி ஸ்டா லினும், அப்துல் ஹக்கும் 7-ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தனர். படிப்பை முடித்த பிறகும் எங்க ளுடைய நட்பு தொடர்ந் தது.
காயல்பட்டின மக்கள்
திருச்செந்தூர் இடைத் தேர்தலின் போது மற்ற இடங்களில் இருந்ததை விட காயல்பட்டினத்தில் அதிக வரவேற்பு இருந்தது. அதற்கு இஸ்லாமிய மக் களுக்கும் கலைஞருக்கும் உள்ள நட்புதான் காரணம். அவர் நீதி கேட்டு நடை பயணம் மேற்கொண்ட போது நானும் உடன் சென்று இருக்கிறேன். கலைஞர் காயல்பட்டினத் தில் காலடி எடுத்து வைத்தபோது, பெண்கள் மலர் தூவி வரவேற்றதை நான் இன்னமும் மறக்கவே இல்லை.
திருச்செந்தூர் தொகுதி யில் 45 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில், காயல்பட்டி னத்தில் மட்டும் 12 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்தது. ஆனால் அந்த ஊரில் 70 சதவீதம் மட்டுமே ஓட்டு பதிவு ஆகியது, சற்று கோபம் தான். அதிக ஓட்டுப் பதிவாகி இருந்தால் கூடு தல் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அமைந்திருக்கும்.
கலைஞர் மீதும், தி.மு.க. மீதும், என் மீதும், இஸ் லாமிய மக்கள் வைத்து இருக்கும் அன்பு கலைஞரை 100 ஆண்டு காலம் வாழச் செய்யும். அவரை தொடர்ந்து முதல்-அமைச்சராகவே இருக்கச் செய்யும். உங்களுக்காக தொடர்ந்து நல்ல பணியை செய்து கொண்டே இருப்பார்.
தி.மு.க. செய்த நன்மைகள்
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் கலைஞரும், தி.மு.க.வும் செய்த சலுகை களை கூறுகிறேன். 1947 முதல் 62 வரை தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த வர் அமைச்சராக இல்லாத நிலை யில் அண்ணா தனது முயற்சியில் கடையநல்லூர் மஜீத்தை அமைச்சரவை யில் இடம் பெறச் செய் தார். அப்துஸ் சமதை திமுக தான் மாநிலங்களவை எம். பி.யாக்கியது.
தென்காசி இடைத் தேர்தலில் நெல்லை கதிரவனை வெற்றி பெறச் செய்தது, கவுஸ் பாட்சா, பெரியகுளம் மேத்தாவை எம்எல்ஏ ஆக்கியது, ஜின்னாவை மாநிலங் களவை உறுப்பினராக்கி யது, ரகுமான்கானை சிறு சேமிப்பு துறை தலைவ ராக்கியது, சாதிக் பாட் ஷாவை அமைச்சராக்கி யது, சல் மாவை சமூக நலத்துறை தலைவியாக்கி யது. இவை அனைத்தும் திமுக தான் செய்தது. தற்போது மைதீன் கானை அமைச்சராக்கியுள்ளோம்.
மிலாது நபிக்கு விடு முறை அறிவித்தது தி.மு.க. தான். அடுத்து வந்த அரசு அதை ரத்து செய்த போதும் மீண்டும் விடு முறை அறிவித்தோம். சென்னை மகளிர் கல்லூ ரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டினோம். வக்பு வாரிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கியதோடு சொத் துக்களை பராமரிக்க ரூ.40 லட்சமும் ஒதுக்கினோம்.
குலுக்கல் முறையில் ஹஜ் பயணத்திற்கு அனுப் பியதை கைவிட்டு விண் ணப்பித்த அனைவரையும் திமுக அரசு அனுப்பியது. உருது அகடமி, காயிதே மில்லத் மணி மண்டபம், உமறுப்புலவர் மணிமண்ட பம் ஆகியவை அமைக்க ஏற்பாடு செய்தது திமுக. உலமா நல வாரியம் தந்த தும் கலைஞர் ஆட்சி தான். எனவே தமிழக முதல்வ ருக்கு முஸ்லிம்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண் டும்.
மீண்டும் உங்களை சந்திக்க வாய்ப்பு வரும். அப்போது சந்திக்க நிச்சயம் வருவேன்.
இவ்வாறு மத்திய மந்திரி மு.க.அழகிரி பேசினார்.
மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப+ங்கோதை, மேயர் ஏ.எல்.சுப்பிரமணி யன், தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., அப்பாவு எம்.எல்.ஏ. டாக் டர் எம்.கே.எம்.முகமது ஷாபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செய்யது முகம்மது நன்றி கூறினார்.

Tags: மாநாடு முஸ்லிம் லீக்

Share this