Breaking News

துபாயில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாடு

நிர்வாகி
0
மார்ச் 18, 19 மற்றும் 20-ம் தேதிகளில் சர்வதேச அமைதி மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமிய அறிஞர்கள் வருகைப் புரிந்து இஸ்லாமிய கொள்கையைப் பற்றியும், அதன் சிறப்புகளைக் குறித்தும் சொற்பொழிவாற்றினர்.
சர்வதேச மார்க்க அறிஞர்கள் மஸ்ஜித் ஹரமின் இமாம் அப்துல் ரஹ்மான் சுதைஸ், குவைத்திலிருந்து ஷேக் மிஷரி ராஸித் அல் எஃப்ஸி, எகிப்திலிருந்து டாக்டர் ஹூசைன் ஹமத் ஹசன், அமெரிக்காவிலிருந்து யூசுப் எஸ்டஸ், யாசிர் காதி, இங்கிலாந்திலிருந்து அப்துல் ரஹீம் கிரீன், மலேசியாவிலிருந்து ஷேக் ஹூசைன் யீ, இந்தியாவிலிருந்து டாக்டர். ஜாகிர் நாயக், எம்.எம்.அக்பர், அஹ்மத் ஹமத், மாயன் குட்டி மாதர், தென் ஆப்ரிக்காவிலிருந்து ஜெய்ன் பிகா, கனடாவிலிருந்து சையத் ராகே ஆகிய அறிஞர்கள் கலந்துக் கொண்டு சொற்பொழிவாற்றினர்.


நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முஸ்லிமல்லாதவர்கள் பலரும் மார்க்கத்தை விளங்கி இஸ்லாமிய கொள்கையை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

அமீரகத்திலுள்ள பல்வேறு இஸ்லாமிய வங்கிகளும், வர்த்தக நிறுவனங்களும் தங்களின் நிறுவனங்களின் பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கடைகளை அமைத்திருந்தன. தமிழகத்திலிருந்து அல்-ஃபஜர், இண்டர்நேஷனல் இஸ்லாமிக் ஸ்கூல் ஆகிய சர்வதேச பள்ளிகளின் விளம்பரங்கள் பொருட்காட்சியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி தொடர்பான விபரங்கள் அவ்வப்போது WWW.PEACHCONVENTION.COM என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டன

- ஹூசைன் பாஷா

Share this