Breaking News

கொள்ளுமேடு தீ விபத்தில் 9 கடைகள் எரிந்து சாம்பலானது

நிர்வாகி
0
காட்டுமன்னார்கோவில் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 9 கடைகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.

தீப்பிடித்து எரிந்தது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொள்ளுமேடு கடை தெருவில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு திடீரென கடை தெருவில் இருந்த ஷேக் முஜிப் என்பவரது டீக்கடை தீப்பிடித்து எரிய தொடங்கியது.

தொடர்ந்து பக்கத்தில் இருந்த அப்துல்லாவுக்கு சொந்தமான டீக்கடை, ரகமதுல்லா விறகு கடை, அன்வர் தீனின் இறைச்சி கடை, உபைது என்பவரது சைக்கிள் கடை, பஷீர்முகமதுவின் காய்கறி கடை, முகமது ïனுஸ் கோழி மற்றும் காய்கறி கடை, அப்துல் குத்தூஸ் பெட்டிக்கடை, ஜக்கரியா இறைச்சிக்கடை ஆகிய 9 கடைகளில் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது.

9 கடைகள் சேதம்

இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் அவர்களால் முடியவில்லை. தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரிந்தது. அதையடுத்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

அதற்குள் 9 கடைகளில் இருந்த மேஜை, நாற்காலி, காய்கறி, சைக்கிள் , கோழி, விறகு உள்பட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.இவற்றின் மொத்த சேதமதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.தீ விபத்து பற்றி அறிந்ததும் சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ராமச்சந்திரன், வருவாய் அதிகாரி புகழேந்தி , கிராம நிர்வாக அதிகாரி பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் அமானுல்லா, துணை தலைவர் சாதுல்லா , நத்தமலை ஊராட்சிமன்ற தலைவர் சுசீலா உத்திராபதி மற்றும் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு தல் கூறினர்.

நிவாரண உதவி

மேலும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சண்முகம், பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி, வைத்தியநாதன், கண்ணன் ,மாவட்ட கவுன்சிலர் சிவகாமசுந்தரி கண்ணன், மாவட்ட பிரதிநிதி உத்திராபதி மற்றும் தி.மு.க.வினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினர்.
கொள்ளுமேடு தீயின் கோரக்காட்சிகள்...

Share this