Breaking News

தமிழக சிறைவாசிகளின் வழக்கின் முழு விபரம் பார்வை....

நிர்வாகி
0
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



CHARITABLE TRUST FOR MINORITIES

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.....

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் சிறுபான்மை அறக்கட்டளை(CTM)-ன் சார்பாக அனுப்பிடும் மெயிலை ஆழ்ந்து படித்து உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கிடுவீராக‚

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் (High Court) தீர்ப்பு வழங்கி இன்றோடு நான்கு மாதங்களாகின்றன. இவ்வழக்கிலுள்ள எஞ்சியவர்களையும் உச்ச நீதிமன்றத்தின் (Supreme Court) மூலம் விடுவித்திடுவதற்குண்டான எந்த ஏற்பாடுகளும், முகாந்திரமும் இல்லாமையால் செய்திடவில்லை என்பதே உண்மையாகும். விடுதலையின் முயற்சிக்கு அடிப்படை தேவையாக இருக்கும் பொருளாதாரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதனால் முதல்கட்டப் பணிகளைக் கூட செய்யமுடியாமல் அறக்கட்டளை அவதிப்படுகிறது.

ரூ. 70 லட்சம் வரை செலவழித்து சிறப்பான வழக்கறிஞர்களை நியமித்து முயற்சி செய்ததன் காரணமாக உயர்நீதிமன்றத்தின் (High Court) மூலம் 23 சகோதரர்கள் விடுதலையடைய வல்லான் அல்லாஹ் வழிவகுத்தான். அதுபோல மீதமுள்ளவர்களையும் விடுவித்திடும் பொறுப்பை அறக்கட்டளை நன்கு உணர்ந்துள்ளது. ஆனாலும் பொருளாதாரமின்மையால் என்ன செய்வதென அறியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றது. அடிமைத்தனத்திலிருந்து அகற்றிட பொருளாதாரம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக ஆண்டுக்கணக்கில் சிறைக்கொட்டடியில் சொல்லொண்ணா துன்ப துயரங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். தொடர்கதையாகிப் போன இச்சோகத்தை முடிவுற முடியாமல் இருக்கின்றதே‚ நாம் என்ன ஒன்றுக்கும் உதவாத சமூகமா? வலிமையற்ற பலகீனமான சமூகமா? வளம் எதுவுமற்ற வறுமையில் வாடும் சமூகமா?



இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏறத்தாழ உலகம் முழுவதும் 150 கோடி மக்கள் தொகை கொண்ட வலிமை வாய்ந்த சமூகமாக காட்சியளிக்கிறோம். உலகில் நான்கில் ஒருவர் முஸ்லிமாக இருந்து வருகிறார்கள். நீர்வளம், நிலவளம், பொருள்வளம், கனிமவளம், தாதுவளம், எண்ணெய் வளம் என அனைத்து வளங்களும் நிறைவாகவும், தேவைக்கு மேல் அதிகமாகவும் பெற்றிருக்கக்கூடிய வளம் நிறைந்த சமூகமாக திகழ்கிறது முஹம்மதே உம்மத்தியா. மொராக்கோவிலிருந்து இந்தோனேசியா வரை பரந்து விரிந்த ஓர் நீண்ட எல்லைக்கு நாம் சொந்தக்காரர்களை இத்துனை இருந்தும் என்ன பயன்? எதுவும், யாருக்கும் முறையாக, சரியாக பயன்பாட்டிற்கு பயன்படுத்திட முடியா துரதிர்ஷ்டசாலிகளாக இருந்து வருகிறோம்.

ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து ஓர் ஒருமைப்பாட்டுடன் ஓர் தலைமையின் கீழ் வாழ்ந்தால் மட்டுமே இவ்வளங்களை நமக்கு வசப்படுத்தி தருவான் வல்லான் அல்லாஹ். பிரிவுகளும், பிளவுகளும், குழுமனப்பான்மைகளும் உம்மத்தில் நிலைத்திருக்கும் காலம் வரை நி‡மத்துகளை ஒரு போதும் நாம் அனுபவித்திட முடியா துரதிர்ஷ்டசாலிகளாகத்தான் இருப்போம்;. இந்நிலையினை மீட்டி மீளாய்வு செய்து உம்மத்தின் உயர்வுக்கும் மேன்மைக்கும் என்ன வழி என அனைவரும் சீரியஸாக சிந்திக்க வேண்டுகிறோம்.

அநியாயங்களும், அநீதிகளும், அடக்குமுறைகளும், அக்கிரமங்களும் நாளுக்கு நாள் அதிகமாக தலைவிரித்தாடுகின்றன. தட்டிக்கேட்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள கைரே உம்மத் - மூலையில் முடங்கி கிடக்கின்றது.

நமக்கெதற்கு வீண்வம்பு? யாரோ ‚ எப்படியோ எக்கேடு கெட்டுப் போனால் என்ன? என வெறுமனே இருந்தால் குவாண்டனாமா, ஆபூகிரைப், கோவை சிறைகளிலிருந்து முஸ்லிம்களின் முனகல் சத்தங்கள் போன்ற துன்பவியல் சம்பவங்கள் ஏதுவும் இருந்திட வாய்ப்பில்லையே‚ அனைவரும் நிம்மதியாக சுகமாக வாழ்ந்திடலாமல்லவா?

வாழ்ந்திடலாம். மறுமை என்று ஒன்று இல்லாவிட்டால் ஒரே வாழ்வான உலகை நாசமாக்கிட யார் தான் விரும்புவார்கள்? நம் எலும்புகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனாலும் உயிர் கொடுத்து எழுப்பி மஹஷரில் நிற்க வைத்துவிடுவான் வல்லான் அல்லாஹ் என்ற ஆழமான நம்பிக்கையும் அச்சமும் தான் ஓர் இறை நம்பிக்கையாளனை செயல்பட வைக்கின்றது. உயரிய நோக்கத்தின்பால் படைக்கப்பட்டிருக்கின்றான் மனிதன். அதனை உணர தலைப்பட்டவனே ‚ நீதியை நிலைநாட்டிடுவதே தன் இலட்சியமாக மரணம் வரை துடிப்புடன் செயல்படுகிறான். அநீதிகளைக் கண்டு அடங்கிப் போகாமல் ஆர்த்தெழுகிறான். அல்லாஹ்வின் உயரிய படைப்பான இம்மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவு, வீரம், பலம், செல்வம், திறமை ஆகிய நி‡மத்துக்களை ஓர் இறை நம்பிக்கையாளன் சுயநலமாக பயன்படுத்திட தலைப்படமாட்டான். விசுவாசமான அடிமைகள் அவன் வழங்கிய அனைத்தும் அமானிதங்கள். அதை செலவழிக்க வேண்டிய நேரத்தில் செலவழிக்க வேண்டும். பயன்படுத்திடவேண்டிய நேரத்தில் பயன்படுத்திட வேண்டும் தவறிவிட்டால் அல்லது சுயநலக்காரனாக ஆகிவிட்டால் இரப்புல் ஆலமீனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வின் மிகுதியான வேட்கையால் உந்தப்பட்டவர்கள் தான் இன்று வெஞ்சிறைகளில் சொல்லொண்ணா துன்ப துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

வாடிக்கொண்டிருப்பவர்கள் அப்படியே கிடக்கட்டும் நம் வேலையே நமக்கு பெரிது என ஐந்தறிவு கொண்ட படைப்புகள் கூட விட்டிடாது தன்னுடன் உள்ள சக இனத்திற்கு ஆபத்தென்றால் அணைத்து அறனாக, துணையாக நின்று ஆபத்தை அகற்றிட ஆலாய் பறக்கும். மனிதன் மட்டுமே இதில் ஏன் விதிவிலக்காக இருக்கின்றான். விரல் விட்டு எண்ணும் ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர ஆபத்து காலத்தில் உதவுபவனே நண்பன் நட்புக்கு இலக்கணமாக கூறிடும் பழமொழி இது. ஆழ்ந்து காலங்களில் ஓட்டி உறவாடிய நட்பு விட்டு விலகிடும் போது நட்பு என்பது அர்த்தமற்ற சொல்லாகி மனிதப் பண்பாடுகளும், மதிப்பீடுகளும் கேலிக்குரியதாகவும், நகைப்பிற்குரியதாகவும், இன்றைய பொருள் முதல் வாத உலகில் காணப்படுகின்றன.

மனிதன் பிறகு நண்பன் என்பதெல்லாம் இரண்டாவது முதலில் நாம் ஒரு முஸ்லிம் ஷரியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அத்துனைபேருமே முஸ்லிம்கள், சகோதரர்கள் அதில் எத்தகைய பாரபட்சமும், வேற்றுமையும் கிடையாது. இனம், குலம், ஊர், தேசம், மொழி என எதுவும் நம் சகோதரத்துவத்திற்கு இடையூறாக இருந்திடக்கூடாது. இனம், குலம், ஊர், தேசம், மொழி என இவையனைத்தும் கடந்து ஒருவன் ஈமான் கொண்டால் சகோதரத்துவ எல்லைக்குள் ஒரு முஸ்லிம் வந்துவிடுகிறான். ஏற்றத்தாழ்வோ, வேறுபாடோ எதுவுமில்லாமல் அனைவரும் சகோதரர்களே என்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிம்களின் உள்ளங்களில் குடிகொண்டிருந்தால் அதுவே உண்மையான ஈமானாகும்.

இவ் இறைக்கொள்கை ஒவ்வொருவரையும் இணைக்கும் பாலமாக இருக்கின்றது. கொள்கைக்காகத்தான் ஒவ்வொருவரும் சகோதரர்கள், கொள்கை நம்மில் குடிகொள்ளாவிடின் நீங்கள் யாரோ‚ நான் யாரோ‚ கொள்கையாகவே நம் உறவு, தொடர்பு, பிணைப்பு, இணக்கம் சகோதரத்தும் என அனைத்தும் நாடுகளை கடந்து, தேசங்களைக் கடந்து, எல்லைகளைக் கடந்து நம் உறவுகள், நேசம், இணக்கம் இருந்திடுவது இன்றைய காலத்தின் கட்டயமாக இருக்கின்றது. இழந்துவிட்ட நம் கண்ணியம், உயர்வு, மேன்மை மீட்டிட புது இரத்தம் பாய்ச்சி புத்துயிர் ஊட்டி நல்லதோர் புணர் நிர்மாணத்திற்கு எல்லைகளை கடந்த நம் உறவுகள் உதவும்.

உம்மாவின் இன்றைய தலையாய உம்மத்தின் நலன் காக்க களமிறங்கியதால் சிறைபட்டு சிறைச்சாலைகளில் முடங்கிக் கிடக்கும் நம் கொள்கை சகோதரனை மீட்டிடுவதே‚ முடங்கி கிடப்பவரை விடுதலையடைய நீ என்ன செய்தாய் என்ற கேள்வி ஒவ்வொரு சுதந்திரவானுக்கும் உண்டு. இவர்களை மீட்டிடுவதில் உங்களின் பங்களிப்பு என்ன? என்ற வழியில், எவ்வழி சாத்தியமோ அந்த வழியில் முயற்சிப்பது. முயற்சி செய்பவர்களுக்கு உதவுவது.

ஆகவே, தமிழகத்தில் சிறைவாசிகளை மீட்டிடவேண்டி சிறுபான்மை உதவி அறக்கட்டளை (CTM) என ஓர் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. சட்டரீதியான போராட்டங்களை மேற்கொண்டு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை விடுதலை அடையச் செய்திருக்கின்றது. இன்னும் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெஞ்சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் கிடைக்கப்பெற்றால் அனைவரையும் அடிமைத்தனத்திலிருந்து அகற்றிட கடும் முயற்சி எடுப்போம். இன்ஷா அல்லாஹ்

இவன்


கோவை தங்கப்பா


94436 54473CHARITABLE TRUST FOR MINORITIES



96, Vincent Road


Coimbatore – 641001


Website:  www.ctmkovai.com


Phone : 0422 2037673


Mobile : +919786093544


Our Banker : ICICI BANK LTD.,MILL ROAD Br


Coimbatore-1


S.B. A/C. NO. 605301208490

Share this