Breaking News

காட்டுமன்னார்கோவிலில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் பழைய தாசில்தார் அலுவலக கட்டிடம்

நிர்வாகி
0
காட்டுமன்னார்கோவில், ஏப்.9-

காட்டுமன்னார் கோவி லில் சமூக விரோதிகளின் கூடாரமாக பழைய தாசில்தார் அலுவலகம் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தாசில்தார் அலுவலகம்

காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் தாசில்தார் அலுவலகம் இயங்கி வந்தது.அந்த அலுவலகம் கடந்த 1910-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டிடமாகும். தாசில்தார் அலுவலகம் திறக்கப்பட்ட நாள் முதல் இது வரை 56 தாசில்தார்கள் பணியாற்றி உள்ளனர்.

இதில் வட்ட வழங்கல் துறை, சமூக நல பாதுகாப்பு துறை, பதிவேடுகள் பாதுகாப்பு அறை, வட்டாட்சியர் நீதி மன்றம் போன்ற பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வந்தது.தினந் தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு பட்டா மாற்றம்,சாதிச்சான்று, இருப்பிடச்சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்காக வந்து கொண் டிருந்தனர்.

பாராக மாறியது

ஆனால் போதுமான இடவசதி யின்மையாலும், பழமையான கட்டிடமாக இருந்ததால் அவற்றை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.இதனால் புதிய தாசில்தார் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதற்காக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முயற்சியால் ரூ.1 கோடியே ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன்பிறகு புதிய தாசில்தார் அலுவலகம் கட்டி திறக்கப்பட்டது.

தற்போது புதிய தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. பழைய தாசில்தார் அலுவலக கட்டிடம் கிடப்பில் போடப் பட்டது.இதை அறிந்த சமூக விரோதிகள் இரவு நேரங்களில் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

சிலர் இந்த கட்டிடத்தை மது குடிக்கும் பாராக மாற்றி வைத் துள்ளனர்.

அங்கு குப்பைகளும், மது பாட்டில்களும் கிடக்கிறது. கட்டிடங்களையும் சேதப் படுத்தி வருகின்றனர்.காட்டு மன்னார் கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.அதனை இந்த பழைய தாசில்தார் அலுவலக கட்டிடத்திற்கு மாற்றினால் பெரும் பயன்உள்ளதாக இருக்கும்.இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த முயற்சி எடுத்து பழைய தாசில்தார் அலுவலக கட்டி டத்தை சீரமைத்து கோர்ட்டு இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நன்றி:தினதந்தி

Share this