Breaking News

காட்டுமன்னார் கோவில் -சேத்தியாத்தோப்பு வீராணம் ஏரிக்கரை சாலையில் வழிப்பறி கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது

நிர்வாகி
0
காட்டுமன்னார் கோவில் -சேத்தியாத்தோப்பு வீராணம் ஏரிக்கரை சாலையில் வழிப்பறி கொள்ளையர்கள் நட மாட்டம் அதிகரித்து உள் ளது.இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் அச்சத்துடன் உள்ளனர்.

வழிப்பறி கொள்ளையர்கள்

காட்டுமன்னார்கோவிலில் இருந்து சேத்தியாத்தோப்புக்கு வீராணம் ஏரிக்கரை சாலை வழியாக இரவு 11 மணிக்கு பிறகு பஸ் வசதி கிடை யாது. இதனால் சேத்தி யாத்தோப்பில் இருந்து காட்டுமன்னார் கோவி லுக்கும், காட்டுமன்னார் கோவிலில் இருந்து சேத்தியாத் தோப்பிற்கும் பொதுமக்கள் செல்ல முடியாது.

இதனால் பொதுமக்கள் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் செல்வர்.பெரும்பாலானவர்கள் மோட் டார் சைக்கிளில் சென்று வரு கின்றனர்.இதில் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்வோரை வழிப்பறி கொள்ளையர்கள் குறி வைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.லிப்ட் கேட்பது போல் நின்று கொண்டு அந்த வழி யாக செல்வோரை தாக்கி அவர்கள் அணிந்திருக்கும் நகை, பணம், மோட்டார் சைக்கிளை திருடிச்செல்ல திட்டம் வகுத்து வருகின்றனர்.

தாக்க முயற்சி

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேத்தியாத்தோப்பில் இருந்து காட்டுமன்னார் கோவிலுக்கு வர பஸ் இல்லாமல் காத்திருந்த உதவி தலைமை ஆசிரியரை மெடிக்கல் உரிமையாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வர சென்றபோது, அவரை 3 பேர் கொண்ட கும்பல் அவரை கூளப்பாடி அருகே கேட்பது போல் வழி மறித்து லிப்ட் நடித்து கொள் ளையடிக்க முயன்றனர்.

அவர் தப்பி சென்று சேத்தி யாத் தோப்பு போலீசில் புகார் செய் தார்.அதையடுத்து போலீசார் உதவியுடன் அவர் காட்டு மன்னார் கோவிலுக்கு வந்துள்ளார்.இப்படி காட்டுமன்னார் கோவில் - சேத்தியாத்தோப்பு வீராணம் ஏரிக்கரை சாலையில் கொள்ளை யர்கள் தலை தூக்க ஆரம்பித்து உள்ளனர்.இதை போலீசார் கவனித்து ரோந்துப்பணியை மேற் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Share this