Breaking News

தமிழ் கணினி வல்லுனர் மர்ஹூம் அதிரை உமர்தம்பி

நிர்வாகி
0
அன்பு சகோதரர்களே,


அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் இணையத்திலும், தமிழ் மக்களின் இதயத்திலும் தமிழுக்கென்று தனி ஆசனம் தந்து காத்து வருபவர்கள் பலர் நம் போற்றுதலுக்குரியவர்கள். கணினி உலகில் விரிந்து, பரந்து விருட்சமாய் வியாபித்து நிற்கும் அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்த தகைமையுடையோர்களில் ஒருவர் தான் “யுனிகோட் உமர் தம்பி”.

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

தாம் மறைந்தாலும் தம் தாய் மொழி இவ்வுலகில் ஜீவிக்க வேண்டும் என்ற உமர் தம்பியின் தீரா வேட்கை இன்று நம் கண் முன் கணினித் தமிழாய் காட்சி தருகிறது. அதுவே அவருடைய வெற்றிக்கு சாட்சி.

உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி தமிழ் உலகுக்கு ஒரு கோரிக்கையுடன் எங்கள் வலைப்பூக்களில் பதிவாகி உள்ளது, சென்று பாருங்கள்

தமிழ்மணம் இணையத்திலும் ஒரு தனியிடம் கொடுத்து அங்கீகரித்து வருகிறார்கள்



http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html

http://bluehillstree.blogspot.com/2010/04/blog-post_17.html

http://vettippechu.blogspot.com/2010/04/blog-post.html

http://kavimathy.blogspot.com/2010/04/blog-post_19.html

http://adiraixpress.blogspot.com/2010/04/blog-post_3868.html

http://haisathaq.blogspot.com/2010/04/blog-post_24.html

http://kalaisaral.blogspot.com/2010/04/blog-post_21.html

http://anboduungalai.blogspot.com/2010/04/blog-post_27.html   and more...

தங்கள் கருத்தை பதியுங்கள், மற்ற தமிழ் இணைய ஆர்வளர்களுக்கும் உங்கள் தமிழ் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். உங்கள் வலைப்பூவிலும் பதியுங்கள், மற்ற தமிழ் நெஞ்சக்களையும் அவர்கள் வலைப்பூக்களில் பதிய சொல்லுங்கள். தமிழக முதல்வர் அவர்களின் கவணத்துக்கு கொண்டு செல்லுவதற்கான முயற்சி. இதை ஒரு வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

கணினித்துறையில் தமிழுக்காக பல சேவைகள் செய்து இணையத்தில் தமிழை வாழவைத்து தன்னலமில்லாமல் ஒரு மவுனப்புரட்சி செய்த ஒரு தமிழருக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறிய அங்கீகார கிடைப்பதற்கான ஒரு பிரச்சார முயற்சி (campaign).

மேலும் தகவலுக்கு என் ஈமெயில் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன் தாஜூதீன்


அதிரை உமர்தம்பி அவர்களின் மருமகன்


tjdn77@gmail.com


Dubai, mobile: 0097150-8858480

Share this