Breaking News

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முஸ்லிம்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்; தலைவர் பேராசிரியர் வேண்டுகோள்

நிர்வாகி
0
வரலாறு படைக்கும் வகையில் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் நடத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முஸ்லிம்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைமைய கமான காயிதெ மில்லத் மன்ஸிலில் 25-05-2010 (செவ்வாய்) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசுகையில் குறிப்பிட்டதாவது-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் ஜூன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ம் தேதி முடிய நடைபெறுகிறது. புதிய வரலாறு படைக்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமான மிகச் சிறப் புடன் முதல்வர் கலைஞர் அவர்களால் நடத்தப்படு கிறது. சூன் 23-ம் தேதி இம் மாநாட்டை இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் துவக்கி வைக்கிறார். உலகம் முழுவதிலு மிருந்தும் ஏராளமான தமிழறிஞர்கள் இம் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

தமிழுக்கு பெருமை சேர்க்கும் இம் மாநாட்டில் கருத்தரங்கம், கவியரங்கம், ஆய்வரங்கங்கள் நடை பெற உள்ளன. ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவைகளிலிருந்து புதைந்து கிடக்கும் எண்ணற்ற செய்திகள் வெளிச் சத்திற்கு கொண்டுவரப்பட உள்ளன.

செம்மொழித் தமிழும் - அரபியும்

செம்மொழிகளான தமிழுக்கும் - அரபிக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் ஆய்வு செய் யப்பட்டு அவை வெளி உலகிற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்பது நம்மு டைய அவா. முதல்வர் கலைஞர் அவர்களை இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் நாம் சந்தித்த போதும் இதனை தெரிவித் தோம். அவரும் அதை மனநிறைவோடு ஏற்றுக் கொண்டார்.

இம் மாநாட்டில் செம் மொழி ஹதமிழும் - அரபியும் ஒரு ஒப்பாய்வு
என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை நான் சமர்ப் பித்துள்ளேன். கடந்த காலங்களில் ஹஇஸ்லாம் தமிழர்க்கு வந்த மதமல்ல. - அது சொந்த மதம்
என்ற தலைப்பில் ஆய்வு மேற் கொண்டதை அடிப்படையாக வைத்து பல புதிய செய்திகளை வெளிக் கொணர்ந்துள்ளேன்.

தமிழுக்கு அனைத்து சமயத்தைச் சார்ந்தவர்களும் மிகப் பெரிய அளவில் சேவை புரிந்துள்ளனர்.

இஸ்லாம், கிறிஸ்தவம் என எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல குறிப்பாக தமிழுக்கு முஸ்லிம் களின் பங்களிப்பு அளப்பரியது. அந்த ஆய்வரங்கத்தில் ஹசமயம் வளர்த்த தமிழ்
என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடப் பட்டது. அதனையும் ஏற்றுக் கொண்டு சூன் மாதம் 25-ம் தேதி இஸ்லாம் வளர்த்த தமிழ்
என்ற தலைப்பில் உரை யாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

பைந்தமிழ் ஐந்தமிழே!


பைந்தமிழ்
என்று போற்றப்படும் தமிழ் உண்மையில் ஐந்தமிழ்
ஆகும். இயல், இசை, நாடகத்துடன் ஆன்மீகம், அறிவியல் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண் டும். எனவே, இந்த மாநாடு எல்லா வகையிலும் சிறப் புப் பெற்றதாக அமைய விருக்கிறது.

எனவே, இந்திய ய+னி யன் முஸ்லிம் லீகின் இந்த நிர்வாகிகள் கூட்டத்தின் வாயிலாக சமுதாயத்துக்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், இம் மாநாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முஸ்லிம் சமுதாயம் பெருமளவில் பங்கேற்க வேண்டும். எல்லா வகையான ஒத்து ழைப்பு களையும் அளிக்க வேண்டும். அதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அனைத்து நிர்வாகிகளும் முழுமையான ஒத்துழைப் புக்களையும் வழங்க வேண்டும்.

இவ்வறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கேட்டுக் கொண்டார்.

கலந்து கொண்டோர்

இக் கூட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநில துணைத் தலைவர் கள் அரூர் அப்துல் ஹாலிக், சேலம் எம்.பி. காதர் உசேன், கோவை எல்.எம்.எம். அப்துல் ஜலீல், திருப்ப+ர் பி.எஸ். அம்சா, நெல்லை கோதர் முகைதீன், மாநிலச் செயலாளர்கள் தளபதி மவ்லவி தளபதி ஷபீகுர் ரஹ்மான், இராம நாதபுரம் எம்.எஸ். ஏ.ஷாஜ ஹான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மஹப+ப், கமுதி பஷீர்,

அணிகளின் அமைப் பாளர்கள் திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், வழக்கறிஞர் ஜீவ கிரிதரன், கே.எம். நிஜாமு தீன், மில்லத் எஸ்.பி. முஹம் மது இஸ்மாயில், ஓசூர் ஹபீபுர் ரஹ்மான்,

சிறப்பு அழைப்பாளர் களாக எம். அப்துர் ரஹ் மான் எம்.பி., நெல்லை துராப்ஷா, கம்பம் சாகுல் ஹமீது, ஆலந்தூர் அப்துல் வஹாப், திருவள்ளூர் காயல் அஹமது சாலிஹ், சென்னை இஸ்மத் பாஷா, ஈரோடு தாஜ் முகைதீன், வாணியம்பாடி நரி முஹம் மது நயீம், இப்ராஹீம் மக்கீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: முஸ்லிம் லீக்

Share this