Breaking News

லால்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு பேச்சுவார்த்தையில் முடிவு

நிர்வாகி
0
லால்பேட்டை, மே.11-
லால்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற் றும் பணி பேச்சு வார்த்தை மூலம் தற் காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு
கடலூர் மாவட்டம் லால் பேட்டை அரியா மதகு மூலம் சுமார் 750 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெற்று வந்தன. இந்நிலையில் இந்த வாய்க்காலில் சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியுள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர்சரியாக கிடைக் காமல் விவசாயிகள் மிகவும் சிரமபட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் லால் பேட்டை பகுதிவிவசாயி கள் புகார் தெரிவித் தனர். அதனை அடுத்து பொது பணி துறை யினர் ஆக்கிரமிப்பு செய்த வர்களிடம் கடந்த ஜனவரி மாதத்திற்க்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நோட்டிஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லை . இதனால் பொது பணி துறையினர் நேற்று ஆக்கிÛமிப்புகளை அகற்ற பொக்லைன் இயந்திரத்தோடு வந்தனர். அவர்களுடன் தாசில்தார்வீர பாண்டியன், இன்ஸ் பெக்டர் கோடிஸ்வரன் மற்றும் போலீசார்கள் வந்தனர். இதுபற்றி அறிந்த ஆக்கிரமிப் பாளர்கள் சம்மந்த பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் ஆக்கிரமிப்பு செய்ய வில்லை என்று கூறினர். அதனை தொடர்ந்து அவர்கள் அதி காரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை முடிவில் ஒரு மாதத்தில்ஆக்கிர மிப்பு களை அகற்றி விடுவதாக ஆக்கிரமிப் பாளர்கள் கூறினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தினர் இதனால் லால்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி : தினத் தந்தி  :

Tags: லால்பேட்டை

Share this