Breaking News

தமிழக முதல்வருக்கு முஸ்லிம் பெண்மணியின் கண்ணீர் கடிதம்.....

நிர்வாகி
0
அன்புள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு

எனது கணவன் அப்துல் மஜித் வயது 43 த.பெ. யூசுப் தண்டனை எண்- 3239 என்பவர் கடந்த 1991-ல் கோவையில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டபின் 1998-ல் என்னை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த நான்கு மாதங்களுக்குள் சம்மந்தமில்லாமலேளே வேறு வழக்கில் எனது கணவரை கைது செய்து அவ்வழக்கில் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது. ஆனால் 1991-ல் நடைபெற்ற கொலை வழக்கில் எனது கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. நானும் நீதிவேண்டும் மேல் நீதிமன்றம் வரை என் கணவரின் விடுதலைக்காக என் குடும்பத்தினர் மற்றும் என் பெற்றோர் எனக்கு வழங்கிய அனைத்து பொருட்களை விற்று வழக்கை நடத்தியும், எனது கணவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டு விட்டது. இவ்வளவு முடிவுற்றபோது எனது கணவர் கோவை சிறையில் 15 ஆண்டுகளை கடந்து விட்டார்கள்.


இதற்கிடையில், கடந்த 2006 மற்றும் 2007ல் 10 ஆண்டு சிறைவாசம் முடிந்தவர்களையும், 2008 அண்ணா நுற்றாண்டு விழாவின்போது 7 ஆண்டு முடிந்தவர்களையும், தாங்கள் பெரும் கருணையுடன் விடுவித்தபோது வேறு வழக்கு மற்றும் மத சம்மந்த காரணம் காட்டி எனது கணவரின் விடுதலையை மறுத்து விட்டார்கள்.
நீதிமன்றத்தின் மூலமும், தங்களின் கருணை மூலமும் விடுதலை பெறுவார் என்ற எதிர்பார்த்து என் சக்திக்கு மீறி, ஒரு பெண்ணாகிய நான் பட்டபாடு துன்பமும் வேதனையும் எந்த பெண்ணும் பெறக் கூடாது என்பதுதான் என் பிரார்தனையாகவே இருக்கும்படி என் வாழ்வு அமைந்துவிட்டது.
துன்பப்படுவோரின் துயர் துடைக்க குறிப்பாக பெண்களின் கண்ணீர் துடைக்க, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் தந்ததோடு, கணவனால் கைவிடப்பட்டோருக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி அவர்களின் துயரத்தை போக்கியதோடு, உணவில்லாமல் எந்த ஒரு பெண்ணும் குழந்தையும் தமிழகத்தில் வாழக்கூடாது என்பதற்காக ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி தந்ததோடு, விறகை எரித்து அதனால் பெண்கள் விடும் கண்ணீரை துடைத்திட இலவச காஸ் அடுப்பபையும் பெண்களின் வேதனையை துன்பத்தை துடைத்து தாங்கள், தந்தையில்லாமல் இருக்கும் தாயாரும் சிறுநீரகக்கோளாரால் பாதிக்கப்பட்டும் ஆதரவு வழங்குவார் என்ற அண்ணன் கால் ஊனத்தால் கஷ்டப்பட்டும், இருக்கும் 12 வயது மகனை படிக்க வைக்கவும், அவனுக்கும், எங்களுக்கும் அன்றாடாம் வாழ தேவைப்படும் உணவிற்காக தையல் தொழில் செய்து அல்லல்பட்டும் துன்பமே வாழ்வாய் வாழ்ந்த வரும் என் கண்ணீரை துயரை வேதனையை நீங்கள் என் கணவரின் விடுதலை மூலம் துடைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எங்களின் என்றும் முதல்வராகிய உங்களிடம் கோருகிறேன்.
எவ்வளவோ அரிய பல எண்ணற்ற சரித்திர சாதனைகளுக்க சொந்தக்காரராகிய தாங்கள் எளிளோரின் துயர் துடைப்பதற்காகவே 5-வது முறையும் முதல்வராக பொறுப்பேற்று மக்களுக்காக உழைத்து வரும் தாங்கள், தமிழின் மேல், தமிழ்மொழியின் மேல் பற்று கொண்டு தமிழுக்காகவே தங்களை ஒப்படைத்துக் கொண்டு அதற்காகவே நாங்கள் வாழும் கோவையிலேயே உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திடும் தாங்கள் கணவன் இருந்தும் இல்லாமல், வாழ்வே கேள்விக்குறியாய், எப்போதும் துன்பத்தோடும் துயரத்தையும் நீண்ட காலமாகவே அனுபவித்து இதிலிருந்து நமக்கு இறப்பு மடடுமேதான் விடுதலைபோலும் என்ற மனநிலைக்கு என்னை கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டாலும், நீங்கள் இருக்கிறீர்கள் எனற் நம்பிக்கையில் உங்களால் என் கணவர் நிச்சயம் விடுதலையாகி எங்கள் வாழ்விலும் ஒளி வீசும் என்ற நம்பிக்கைதான் என்னை வாழவைத்து வருகிறது.
உலகத் தமிழ்ர்களெல்லாம் இம்மாநாட்டல், உங்களால் மகிழ்வுறம் போது எனது கணவரின் விடுதலை மூலம் நாங்களும் மகிழ்வுற்று நீண்டகால துன்பத்திலிருந்து இன்பம் கண்டிட எங்களின் மேல் கருணைகாட்டி எனது கணவருக்கும் அதுபோல் அவர்யுடன் உள்ள மற்ற சகோதரர்களையும் பொதுமன்னிப்பு விடுதலை வழங்கிட கனிவுடன் வேண்டுகிறேன். துயருறும் என்னைப் போன்ற பெண்களின் கண்ணீர் துடைத்திடவும் உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்....

இப்படிக்கு
யாஸ்மின்
கோவை

Share this