நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கப்பல் மீது இஸ்ரேலின் கொடூர தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் - இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம்
நிர்வாகி
0
பாலஸ்தீன காஸா பகுதி மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற பிரீடம் பிளாடில்லா கப்பல் மீது சர்வதேச கடல் வெளிப்பகுதியில் இராணுவத் தாக்குதல் நடத்திய இஸ்ரேலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.
இந்த ரவுடி அரசாங்கம் 20-பேர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற 50-பேர் காயமடைந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கப்பலிலிருந்து 450-க்கு மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களை கைது செய்துள்ளது மனிதாபிமான அடிப்படையில் உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற மக்கள் மீதும் கப்பலின் மீதும் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறிய செயல் மனித குலத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்.
அமெரிக்காவின் துணை கொண்டு பாலஸ்தீன மக்களை அவர்களின் தாய்நாட்டிலேயே கருவறுக்க துடிக்கும் இனவெறி திட்டத்துடன் காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய சியோனிஸ அரசு பயங்கரவாதத்தை காட்டுகிறது. ஆனால் ஐ.நா. சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் இத்தகைய அடாவடித் தாக்குதல் நடப்பதை வேடிக்கை பார்த்து வருகிறது. சியோனிஸ கொடூரத் தாக்குதல்கள் பகிரங்கமாக சர்வதேச பார்வையாளர்களுக்கு வெட்ட வெளிச்சமான நிலையில் இந்திய அரசாங்க இஸ்ரேலுடனான அனைத்து சிவில் மற்றும் இராணுவ ஒத்துழைப்புகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளும் படியும் திரும்பப் பெற வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
இஸ்ரேலை கண்டித்து சென்னை நடந்த ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலை கண்டித்து கடையநல்லுரில் நடந்த ஆர்ப்பாட்டம்
Tags: ஆர்ப்பாட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா