Breaking News

வீராணம் ஏரியில் மூழ்கிய அதிகாரி உடல் கிடைத்தது

பக்கர்Brothers.kollumedu
0

வீராணம் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய அண்ணாமலை பல்கலைக் கழக தனி அதிகாரியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.காட்டுமன்னார்கோவில் அடுத்த பூர்த்தங்குடியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் பழனிவேல் (30). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அதிகாரியாக இருந்தார். இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வீராணத்தில் குளித்தார். கந்தகுமரன் மதகு அருகே குளிக்கும்போது பழனிவேல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏரியில் படகு மூலம் தேடினர். இதற்கிடையே நேற்று பகல் ஒரு மணிக்கு பழனிவேல் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

Share this