Breaking News

தமிழ் நெறியும் - இஸ்லாமிய நெறியும் - தலைவர் பேராசிரியர் ஆய்வு கட்டுரை

நிர்வாகி
0
தமிழ் நெறியும் - இஸ்லாமிய நெறியும் - தலைவர் பேராசிரியர் ஆய்வு கட்டுரை

யோகி சுத்தானந்த பாரதியரின் எழுச்சிக் கவிதை இது
எண்ணுறும் போது தமிழையே யெண்ணீர்@
இசைத்துழி தமிழையே யிசைப்பீர்@
பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே
பழுதறப் பண்ணியின் புறுவீர்@
உண்ணுறும் போதும் உறங்கிடும் போதும்,
உயிர்உளந் துடித்திடும் போதும்,
கண்ணினு மரிய தமிழையே கருதிக்
காரிய வுறுதிகொண் டெழுவீர்!
சுத்தானந்தரின் சித்தாந்தமாக இக் கவிதை பிறந்திருக்கிறது. இக் கவிதையின் நோக்கம் இன்றைக்குத் தமிழகத்திலும் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், தமிழை ஒரு மொழியாகக் கருதுபவர் அல்லர். தமிழைத் தன்னுயிராக, தன்னுயிரை இயக்கும் உந்து சக்தியாகக் கருதுபவர் ஆவார்.
கோவையில் இந்த மாதம் 23 முதல் 27 முடிய நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கத்தினை கலைஞர் அருமையான பாடலாக வடித்துத் தந்திருக்கிறார். அதில் தமிழைப் பற்றிய அவரது உள்ளக் கிடக்கை - அவரின் உள்ளுணர்வு மிகத் தெளிவாகப் பளிச்சிடுகிறது. அப்பாடலில் வரும் இந்த வரிகள்-
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி - நம்மொழி - அதுவே
செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்!
மனிதனுக்குரிய வாழ்வியலை வகுத்துத் தந்திருக்கும் மொழி தமிழ் என்கிறார்!
இந்த இனிய தமிழ் மொழிக்கு ஆதியும் அந்தமும் இல்லை என்று வியந்து கூறுகிறார்!
உலக மொழிகளுக்கெல்லாம் உயிராக இருக்கின்ற ஒப்பில்லா மொழி தமிழே என்கிறார்!
ஓதி வளரும்| என்பதால் தமிழ்மொழியே உலக வேதமாக உயர்ந்திருப்பதுபோல தமிழ்ச் செம்மொழியை உச்சியில் வைத்து மெச்சுகிறார்!
கலைஞரின் இந்த நோக்கத்தை உலகறியச் செய்யும் வகையில் தான் கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது.
என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ்செய்யு மாறே||
என்று திருமூலர் பாடினார்.
படைத்த படைப்பெல்லாம் மனுவுக்காக@ மனுவைப் படைத்தான் தனை வணங்க|| என்று தக்கலை பீரப்பாவின் சொல்லோவியம் கூறுகிறது. அதற்கேற்ப, படைத்த இறைவனைத் தமிழால் துதித்துப் போற்றிப் புகழும் கலையை இன்றைக்கு உலகம் காணப் போகிறது என்பதை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிக்கவிருக்கிறது.
உலக வரலாற்றில் செம்மொழி தமிழுக்காக நடைபெறும் உலக மாநாடு போல எப்பொழுதும் எங்கும் எந்தவொரு மொழிக்கும் நடைபெற்றதில்லை. இனியும் வேறொரு மொழிக்கு இத்தகைய மாநாடு நடப்பது இயலாத ஒன்று. எல்லா மொழிகளுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை தமிழுக்கே இருக்கிறது. அது யாது எனில், எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டு அமைந்திருப்பதுபோல, எல்லா மொழிகளும் தமிழையே மூல மொழியாகக் கொண்டு சமைந்திருக்கின் றன என்பதே ஆகும். இது வெறும் ய+கமோ, கற்பனையோ, புனைந்துரையோ அல்ல. அகில உலகத்து அறிஞர் உலகம் ஆய்ந்து அறிந்து தெளிந்து தேர்ந்து கண்டறிந்துள்ள சரித்திரச் சத்தியமாகும்.
யாமறிந்த மொழிகளிலே தமிழைப் போல் இனியாவது
எங்கும் காணோம்|| என்றும், ஹதேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்| என்றும் பாட்டுக்கொரு புலவன் பாரதியார் போன்றோர் பாடுவதன் சிறப்பு என்னவெனில், தமிழ்மொழி, மொழி யாக உயர்ந்தது என்பது, தமிழ் மொழியில் உள்ள தத்துவங்கள் உயர்ந்தவை - உலகிற்குத் தேவையானவை என்பதையே குறிக்கிறது.
செம்மொழி மாநாட்டின் மைய நோக்கப் பாடலில் கலைஞரும் இதனை விவரித்திருக்கிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே யாவரும் கேளிர்!
உண்பதுநாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றே யென
உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம்!||
கலைஞரின் இப்பாடல் வரிகளில் தமிழ் மொழி என்பது தமிழ் நெறியின் பாற்பட்டது என்பது தெளி வாக்கப்பட்டிருக்கிறது.
சங்க நூற்களில் ஒன்றான பழமொழியில் ஒரு பாடல் உண்டு அதில்,
எந்நெறி யானும் இறைவன் தன் மக்களைச் செந்நெறிமேல் நிற்பச் செயல் வேண்டும்| என்னும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இங்கே இறைவன்| என்றது நாடாளும் மன்னனைக் குறித்தது. நாடாள்கிற தலைவன், தனது நாட்டு மக்களை எப்படியாவது செந்நெறி|யில் செலுத்தப் பாடுபட வேண்டும் என்பதே இப் பாடலின் பொருளாகும்.
தமிழ் நெறி என்னும் செந்நெறியை - நன்னெறியை - அந்தப் பெருநெறியை - அகிலத்தாருக்கு ஏற்ற அந்த ஒரு நெறியை தமிழகத்தில் மட்டுமின்றி, தாயகமான பாரதத்தில் மட்டுமின்றி, பாருலகம் எங்கணும் பரப்பும் உன்னத நோக்கத்தில் விளைந்ததே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.
தமிழ் நெறியின் பிழிவாக கலைஞரின் மையநோக்கப் பாடல் அமைந்திருக்கிறது. அதனை இன்னும் விரிவாக வும், விளக்கமாகவும் உணரும் வகை காண்பது அவசியமாகும்.
பிறப்பால் எல்லோரும் சமம்!
யாதும் ஊர், எல்லோரும் உறவுக்காரர்கள்!
தமிழ்நெறியின் தலையாய கோட்பாடுகள்தாம். ஆனால் பைந்தமிழ் இன்றைக்கு ஐந்தமிழாக வளர்ந் திருக்கிறது. இயல், இசை, நாடகத் தமிழாக -முத்தமிழாக இருந்தது முன்னொரு காலத்தில்@ பின்னர் ஆன்மீகத் தமிழ் வளர்ந்தது@ இன்றைக்கு அறிவியல் தமிழ் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நெறியை விவரிக்கும்போது, முத்தமிழில் உள்ளதை மட்டுமே கொண்டு விடாமல், ஆன்மீகத் தமிழில் இருந்தும், அறிவியல் தமிழில் இருந்தும் நெறிகளை இணைத்து விளக்குவது முக்கியத்துவம் பெறுகிறது. ஹஒன்றே குலம் ஒருவனே தேவன்| என்பது ஆன்மீகத் தமிழ் வளர்ச்சியால் பெற்ற அறுதி பெற்ற சூத்திரமாகும். இன்றைய அறிவியல் தமிழ் வளர்ச்சியால், தமிழ் நெறி வளமும், செழுமையும் பெற்றிருக்கிறது. இதனையே கலைஞரும் தனது பாடலில்
போரைப் புறந்தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி|| என்று பாடுகிறார்.
என்றுமுள தென்றமிழின் இனிமையான நெறியில் இன்றைக்கு உலகம் ஏற்கும் உயரிய கோட்பாடுகளைப் பார்க்கிறோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்|
யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா|
ஒன்றே குலம்@ ஒருவனே தேவன்|
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புமின்|
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்
தமிழ்நெறியின் சாறும் சாராம்சமும் இதுவே! இதுவே உலகப் பொதுநெறி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
முந்தைய காலத்தில் தமிழகத்தில் நபிகள் நாயகம் (ஸல்-அம்) அவர்களின் பிறந்த நாள் பெருவிழா சீரோடும், சிறப்போடும் ஊர்தோறும் நடைபெறும் பழக்கம் இருந்தது. தமிழறிஞர்கள் மீலாதுந் நபி விழாக்களில் பங்கேற்பர். பெரியார், ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், தமிழ்த் தென்றல் திரு.வி.க., சுப்பிரமணிய பாரதியார், பிற்காலங் களில் கலைஞர் போன்ற பெருமக்கள் மீலாது மேடை களில் உரையாற்றுவர்.
திரு.வி.க. அவர்கள் எழுதிய
அரபிய நாட்டில் தோன்றி
ஆண்டவன் ஒருவன் என்னும்
மரபினை வாழச் செய்த
மகமது நபியே போற்றி||
-என்னும் பாடல் வரிகள் மீலாது விழாக்களில் பெரிதும் போற்றப்படும். சீர்காழியில் நடைபெற்ற மீலாது விழாவில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. அவர்கள் கூறினார்.
தமிழ் நெறியே இஸ்லாமிய நெறியாக மலர்ந்திருக்கிறது. ஒன்றே குலம்@ ஒருவனே தேவன்@ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்@ யாதும் ஊர், யாவரும் கேளிர்@ -
என்னும் இந்தத் தமிழ்நெறித் தத்துவம், தமிழகத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்தது. நபிகள் நாயகம் அவர்கள், தமிழக எல்லைக்குள் அடங்கிக் கிடந்த இந்த தமிழ் நெறியை இஸ்லாம் என்னும் பெயரில் உலகமெங்கும் பரவிடச் செய்துவிட்டார். அதனால்த hன் நபிகள் நாயகத்தை தமிழரின் நாயகம் என்று போற்றுகிறோம்| என்று விதந்து விதந்து பேசியிருக்கிறார்.
செம்மொழித் தமிழை - அதன் மூச்சாக உள்ள தமிழ் நெறியை உலகம் முழுவதிலும் பரப்புரை செய்வதன் மூலம் இஸ்லாமிய நெறியை மானிடர்க்கு எடுத்தோதிய நிலையைக் காண முடியும். அதனால்தான் கண்ணியத் தென்றல் காயிதெ மில்லத், இந்திய அரசியல் சாசன சபையில் உரையாற்றும்போது, பாரத நாட்டுக்குரிய ஆட்சி மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொன்மையும், இலக்கண இலக்கியச் செழுமையும் திட்பமும், நுட்பமும், ஒட்பமும் நிறைந்த தமிழ், அதில் உள்ள மானிடருக்குரிய பொதுமைத் தத்துவங்களுக்காகவே முதன்மைப்படுத்தப் பட்டு வருகிறது. இதே காரணம் பற்றியே சந்தனத் தமிழறிஞர் சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள், ஹஇஸ்லாம் எங்கள் வழி- இன்பத் தமிழ் எங்கள் மொழி| என்னும் முழக்கத்தை எழுப்பினார். இன்றைக்கு இஸ்லாம் தமிழர்க்கு வந்த மதமல்ல, சொந்த மதம் என்று நெஞ்சுயர்த்திப் பேசுவ தற்கு எது காரணம் எனில், தமிழ் நெறியின் தனித்துவமே ஆகு.ம். இறைக்கோட்பாட்டில் இஸ்லாமிய நெறி, மிகக் கண்டிப்பாக இருக்கிறது. இறைவன் ஒருவனே. அவன் ஆணோ, பெண்ணோ வேறு எதுவுமோ அல்ல. எல்லா வற்றையும் படைத்துப் பக்குவப்படுத்திப் பரிபாலித்து வருபவன். அந்த இறைவனை இஸ்லாமிய நெறியில் அல்லாஹ்| என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. அவனுக்கு தொண்ணூற்றொன்பது அழகிய திருநாமங்கள் உள்ளன. இறைவனை அல்லாஹ் என்றும் அழைக்கலாம். அவனுக்குள்ள திருநாமங்ளைக் கொண்டும் அழைக்கலாம். உதாரணமாக அர் ரஹ்மான் எனலாம். அர் ரஹீம் எனலாம். இப்படி இஸ்லாமிய இறை கோட்பாடு விவரிக்கப்படுகிறது.
தமிழ் நெறியே இஸ்லாமிய நெறி எனவும், இஸ்லாமிய நெறியே தமிழ் நெறி எனவும் ஒப்பிட்டுக் கூறினால், அதற்கான ஆதாரச் சான்றுகளைக் கண்டறிய வேண்டு மல்லவா?
தமிழ்நெறியில் இறைக்கோட்பாடு ஒருவனே தேவன் என்பதுதான். அந்த ஒருவனை ஹஅவன்| என்று அழைப்பது தமிழ் மரபு. ஹஅவனன்றி ஓர் அணுவும் அசையாது|, ஹஎல்லாம் அவன் செயல்| என்பன பழமொழிகள் ஆகும். அரபி மொழியில் - இஸ்லாமிய மரபில், இறைவனை ஆண்பாலில் அவன் என்றழைக்கப்படுகிறது. ஹஹ{வ| என்னும் சொல் ஹஅவன்| என்னும் பொருளுடையது. இச் சொல்லே ஹ_| ஆகி திக்ரு மந்திரமாகியிருக்கிறது. திருக்குர்ஆன் வசனம் ஹ{வல்லாஹ{ அஹது| என்பதி லும் ஹ{வ| இடம் பெற்றிருப்பதை அறியலாம்.
லாயிலாஹ இல்லல்லாஹ{ என்னும் இஸ்லாமிய மூல மந்திரம்| - வணக்கத்திற்குரியோன் இல்லை, அல்லாஹ் வைத் தவிர என்னும் பொருளுடையது. திருவாசகத்தில் இறைவனை, ஒன்று நீயல்லை யன்றி யொன்றில்லை|, நீயலாற் பிறிதுமற்றில்லை| என்றே வருணிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நெறிப்படி, இறைவனைப் பற்றி அறிய லாம், ஆனால் இறைவனை நேரில் அறிய ஒண்ணாது@ மனிதர் மட்டுமின்றி, வானவரும் இறைவனின் ப+ரணத் துவத்தை அறிய இயலாது தமிழ்நெறியில்,
உணர்வினால் உணரவொண்ணா ஒருவர்| என்றும், முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்| என்றும், நின்னை ஐம்புலன்கள் காண்கிலா| என்றும் வானவரும் தாமறியாதவன்| என்றும், தேவர்கோ வறியாத தேவ தேவன்| என்றும், ஒரு நாமம் ஓர் உருவம்| ஒன்றுமி லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தௌ;ளேணம் கொட்டாமோ| என்றும் விளக்கப்பட்டுள்ளமை காண வேண்டும்.
இறைவனின் தன்மைகளில் இஸ்லாமிய நெறிக்கும் தமிழ் நெறிக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்க்கும் போது, இறைவனுக்குள்ள அல்லாஹ்| என்னும் பெயரிலும் இரண்டு நெறிகளுக்கும் இடையில் ஒற்றுமை உள்ளனவா என்று வினாத் தொடுக்கலாம்.
அல்-இலாஹ் என்பதே அல்லாஹ்| ஆயிற்றென்பர். அல்லாஹ்வுக்குரிய மூலச் சொல் அல்,இல், எல் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இச் சொல் தமிழிலும் உள்ளது என்பதை இலக்கியத்திலும், வரலாற்றிலும் ஆய்வறிஞர்கள் எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். எல்லே இலக்கம்| என்பது தொல்காப்பிய சூத்திரம் ஹல்| என்பதற்கு ஒளிக்கடவுள் என்று பொருள் விரித்தனர். ந,சி, கந்தையா பிள்ளை அவர்கள், மேற்கு ஆசிய, அரேபிய, இலங்கை மக்கள் எல்| தொடர்பான பெயர்களைக் கடவுளுக்கு இட்டு வழங்கினார்கள் என்று தனது ஆய்வில் கூறியுள்ளார். தமிழ்| என்னும் சொல் பிறந்ததே எல்|லி லிருந்துதான் என்கிறார் அவர். சூரியக் கடவுளை தாமம், எல், சிவன் என்னும் பெயர்களால் ஆதிமக்கள் அழைத் தனர் எனவும், பின்னர் தாமம் என்பதோடு எல்லையும் சேர்த்து வழங்கியதால் தமெலாகிப் பின் தமிழ் ஆயிற்று என்றும் அவர் தெரிவிக்கிறார். நாட்டுக்குப் பெயர் மக்கள் வழிபடும் கடவுள் பெயர்த் தொடர்பாகத் தோன்றுதலும், பின்பு நாட்டின் பெயரால் மக்களும் மொழியும் அறியப்படுதலும் இயல்பு| என்றும் கந்தையா பிள்ளை அவர்கள் விளக்கம் தந்துள்ளார். ஆகவே, இஸ்லாமிய நெறி போற்றும் அல்லாஹ் என்னும் சொல்லின் மூலம் தமிழ் என்பதும், தமிழ்| என்னும் சொல்லுக்குள்ளேயே அல்லாஹ் என்னும் சொல்லும் அடங்கியிருக்கிறது என்பதும் தெளிவாகின்றது.
அல்லாஹ் என்பதற்குப் பொருந்தி வரும் தமிழ்ச் சொல் கடவுள்| எனலாம். கட+உள் ஸ்ரீகடவுள் என்பர்.
உள்| என்பதற்கு, வானிலும் ப+மியிலும், வானுக்கும் ப+மிக்கும் இடையிலும் உள்ளவை யாவையும் கடந்த ஒன்று என்றும், உள்ளுகின்ற - சிந்திக்கின்ற - கற்பனை செய்கின்ற எல்லாவற்றையும் கடந்த ஒன்றாக உள்ளது என்றும், மனித உள்ளத்திற்குள் அடங்கிடாத ஒன்றாகவும் இருக்கின்றது என்றும் விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.
விடுதலை ஏட்டில் ஹபா.ஜ.க.வின் புதிய தலைவரும் - முஸ்லிம்களும்| என்னும் தலைப்பில் ஜூன் 9-ல் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், சிறுபான்மையினர் தங்கள் மதங்களை இந்தியமயமாக்கிக் கொள்ள வேண்டுமாம். அவர்களின் கடவுள்களைத் தூக்கி எறிந்து விட்டு கிருஷ்ணனையும், இராமனையும் வணங்க வேண்டுமாம். இவ்வளவையும் சொல்லி விட்டு முஸ்லிம்கள் பக்கம் பச்சைக் கொடி காட்டுவது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?| - என்று சாடியிருக்கிறது. முஸ்லிம்களைத் தம் பக்கம் ஈர்க்கத் திட்டங்கள் தீட்டு வதாகக் தெரிவிக்கும் பா.ஜ.க. இப்படி கூறிக் கொண்டே முஸ்லிம்களை தம் பக்கம் ஈர்க்க முடியுமா? என்னும் விதத்தில் தலையங்கம் செல்கிறது.
நாம் கூற விரும்புவது எல்லாம் பா.ஜ.க.வின் திட்டம் பற்றியல்ல. தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்திய முஸ்லிம்கள் எல்லோருமே வணங்குகின்ற இறைவனை அல்லாஹ் என்று அழைக்கிறார்கள். அந்த அல்லாஹ் தமிழகத்தில் இருந்து வட இந்தியாவுக்குள் நுழைந்தது. பண்டிட் சுந்தர்லால் தமது ஹகீதா அண்ட் குர்ஆன்| என்னும் நூலில், ரிக் வேத காலத்தில் வாழ்ந்த இந்திய மக்களின் ஒரு சாரார் அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்தனர் என்கிறார். வடஇந்தியாவில் இருந்து அல்லாஹ் மத்திய ஆசியாவுக்குச் சென்றது. அரபகத்தில், எகிப்தில் நுழைந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு, எங்கிருந்து அல்லாஹ் என்னும் சொல் அரபுலகம் சென்றதோ, அங்கிருந்து இந்தியாவுக்குள், தமிழகத்துக் குள் வந்திருக்கிறது. ஆதியில் தமிழ் மக்களும், இந்திய மக்களும் வழிபட்ட அல்லாஹ்வை மீண்டும் வழிபடுகிறார்கள். உண்மையைச் சொன்னால், இராமனையும், கிருஷ்ணனையும் வணங்குவோர்தாம் இந்தியத் தத்துவத்திற்கு தமிழ்நெறிக்குப் புதியவர்கள். ஞாயம்படப் பேசினால், இராமனையும், கிருஷ்ணனையும் வணங்குவோர் அல்லாஹ்வை வணங்க முன்வருவதுதான் சரியான வாதமாகும். அதை நாம் கூறவில்லை. தறிகெட்டு நெறிகெட்டுப் பேசுவோர் இந்தச் சரித்திர மெய்ப்பாடுகளை உணர்ந்திடுதல் காலத்தின் கட்டாயமாகும்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை ஒட்டி தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு புதிய பரிணாமம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக முஸ்லிம் சமுதாயம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களை - புலவர்களை - காவியந் தந்த கவிஞர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இன்றைக்கு தமிழ் மொழியின் இலக்கணம் இலக்கியம், மொழிவளம், நூல் வளம் பன்னாட்டு மொழி களிடையில் தமிழின் முக்கியத்துவம் - இவற்றையெல் லாம் இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, இஸ்லாமிய நெறிக்கும் - தமிழ் நெறிக்கும் உள்ள ஒப்பாய்வுகளைத் துவங்கிட வேண்டும். தமிழின் தொன்மையோடு, இஸ்லாமிய நெறியின் தொன்மையும் இணைந்திருக்கிறது என்னும் வரலாற்று ஒற்றுமைகளை வெளிக் கொணரும் ஆய்வு நூற்கள் பலப்பல மலருதல் வேண்டும். இறையருளை அனைத்துக்கும் வேண்டுவோம்.
பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்து கலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பியல் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவேப+ந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே!
- வள்ளலார்

Tags: கட்டுரை

Share this