Breaking News

லால்பேட்டையில் ஏ.டி.எம்.மையம் விரைவில் அமைக்கப்படும்

நிர்வாகி
0
லால்பேட்டை,ஜுன்.26

லால்பேட்டையில் ஏ.டி.எம்.மையம் விரைவில் அமைக்கப் படும் என்று இந்தியன் வங்கி மண்டல துணை பொது மேலாளர் முத்து கருப்பையா கூறினார்.

பாராட்டு விழா

கடலூர் மாவட்டம் லால் பேட்டையில் இந்தியன் வங்கியில் மேலாளராக பணி யாற்றி வந்தவர் முகமது இப் ராகிம்.இவர் பணிஓய்வு பெற்றதையடுத்து இவருக்கு பாராட்டு விழா ,பிரிவுபசார விழா ரம்ஜான் தைக்காலில் நடந்தது.

விழாவுக்கு இந்தியன் வங்கி மண்டல துணை பொது மேலாளர் முத்துகருப்பையா தலைமை தாங்கினார். தலைமை மேலாளர் முகமது ரபிக் முன்னிலை வகித்தார். விழாவை முகமது அன்சாரி தொடங்கி வைத்தார்.

ஏ.டி.எம்.மையம்

விழாவில் மண்டல துணை பொது மேலாளர் முத்து கருப்பையா கலந்து கொண்டு பேசுகையில்,வங்கியின் நோக்கமே சேவை செய்வது தான்.எல்லா வங்கிகளும் சேவை நோக்கத்தையே பிரதானமாக வைத்து செயல்பட்டு வருகிறது.இந்தியாவில் 1800 கிளைகள் உள்ளது.

நாங்கள் கிளை வங்கிகளில் பல்வேறு வசதிகளை செய்து தருகிறோம்.ஆகவே பொது மக்களும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதிக அளவு முதலீடு செய்ய வேண்டும்.எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 43 கிளை மேலாளர்களுடன் வங்கியின் செயல்பாடுகள் மற்றும் வங்கிக்கு என்ன வசதி செய்து தர வேண்டும் என்று ஆலோசனை செய்து வருகிறேன்.

இந்தியன் வங்கி நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.லால்பேட்டை இந்தியன் வங்கி வாடிக்கை யாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏ.டி.எம். வசதி விரைவில் அமைத்து தரப்படும் என்றார்.

கலந்து கொண்டவர்கள்

முன்னதாக அனைவரையும் லால்பேட்டை இந்தியன் வங்கி மேலாளர் கனகராஜ் வரவேற்று பேசினார்.விழாவில் பேரூராட்சிமன்ற தலைவர் சபியுல்லா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஷேக் ஆதம், ஐயுப், அப்துல்சமது, முத்தவல்லி முகமது எகையா, பக்கீர் முகமது, நஜீர்அகமது,  அன்சாரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாபுராஜன், சோழன், ராம்குமார் ,செல்வம், எள்ளேரி முக்கியஸ்தர்கள் அலாவுதீன், காஜா முகைதீன் மற்றும் லால்பேட்டை ஜமாத் தார்கள், வங்கி மேலாளர்கள் கோபிநாத், சீத்தாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this