Breaking News

செம்மொழியா... செவ்வியல் மொழியா?: மணவை முஸ்தபா

நிர்வாகி
0
தமிழை செம்மொழி என்பதா அல்லது செவ்வியல் மொழி என்று அழைப்பதா என்ற குழப்பம் சமீபகாலமாக நீடித்து வந்தது. சங்க இலக்கியம்,தொல்காப்பிய இலக்கணம் முதலாக மொழி ஞாயிறு பாவணர் வரை அனைவருமே தமிழை செம்மொழி என்றே அழைத்து வந்துள்ளனர். "செம்மையாய் அமைந்த மொழி' என்பது அதன் பொருளாகும்.


கிளாசிக்கல் எனும் ஆங்கில வார்த்தையை அப்படியே மொழி பெயர்க்கும் போது, செவ்வியல் என்று மொழி பெயர்க்கிறார்கள். கிளாசிக்கல் லிட்டரேச்சர் என்பதை செவ்வியல் இலக்கியம் என்று மொழி என்று மொழி பெயர்க்கலாம். ஆனால் செவ்வியல் மொழி என்றால் புதுவகை இயல் மொழி என்றே எண்ணத் தோன்றும். ஆனால் செம்மொழியில் உள்ள செம் என்பது செம்மை என்பதன் சுருக்கமாகும். செம்மையாய் அமைந்த மொழி என்று பொருள். இதனால்தான் கிளாசிக்கல் லாங்குவேஜ் என்பதை செம்மொழி என்று கூறுவதே பொருத்தம்.

Share this