Breaking News

ஜெயலலிதாவை சந்திக்கிறார் பீ.ஜெய்னுல் ஆபிதீன்

நிர்வாகி
0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க தவ்ஹீத் ஜமாஅத் நிறுவன தலைவர் பீ.ஜெய்னுல் ஆபிதீன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக அதன் மாநில தலைவர் பக்கீர் முகமது அல்தாபி தமிழ்நிருபர்.காம் செய்தியாளரிடம் கூறினார்.


“ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும். இதன் மூலம் அனைத்து துறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒடுக்கப்பட்டோரின் உரிமைப்பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதி நடத்துகிறோம். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 15 லட்சம் பேர் குடும்பத்துடன் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து கட்சியினரையும் அழைப்போம். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளோம்.அனுமதி கிடைத்தப்பிறகு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவன தலைவர் பீ.ஜெய்னுல் ஆபிதீன் சந்தித்து அழைப்பிதழை கொடுப்பார் என்றார்.

அதிமுக கூட்ட‌ணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேருமா? என்றதற்கு முதலில் மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்துக்கொண்ட பிறகே எதையும் கூற முடியுமென்றார்.
நன்றி:தமிழ் நிருபர்

Share this