Breaking News

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., கோர்ட்டில் ஆஜர்

நிர்வாகி
0
தேசிய லீக் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.


காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட் டையைச் சேர்ந்தவர் அகமதுல்லா. இவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி கடலூர் சி.ஜே.எம். கோர்ட் டில் புகார் மனு கொடுத் தார். அதில், கடந்த அக் டோபர் 7ம் தேதி நடந்த லால்பேட்டை பேரூராட்சி 3வது வார்டு உறுப் பினர் தேர்தலில் தேசிய லீக் கட்சி சார்பில் போட் டியிட்ட சிராஜூதீனுக்கு முகவராக நான் பணியாற் றிக் கொண்டிருந்தேன்.

 பகல் 12 மணிக்கு நடந்த தகராறில் காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் முன்னிலையில் மனிதநேய கட்சியினர் 5 பேர் என்னை தாக்கினர்.இரவு 11 மணிக்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசார் என்னை தேடி லால் பேட்டை வந்து, என்னையும், எனது தம்பி அமீர் உல்கக்கையும் தாக்கி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தாக்கியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசரித்த நீதிபதி சண்முகநாதன், இன்ஸ் பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் ஆகியோர் மீது அத்துமீறி நுழைந்து தாக்கியது (448), ஆபாசமாக திட்டியது (294), இரும்பு பைப்பால் தாக்கியது (324) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணைக்காக இருவரும் 2ம் தேதி கோர்ட் டில் ஆஜராக உத்தரவிட்டார்.அதன்படி இன்ஸ்பெக் டர் மற்றும் சப் இன்ஸ் பெக்டர் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். அவர்களிடம் வழக்கின் நகல் வழங்கிய நீதிபதி சண்முகநாதன், வழக்கின் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Share this