Breaking News

போலீஸ் பாதுகாப்புடன் உரூஸ் விழா: லால்பேட்டையில் கடையடைப்பு

நிர்வாகி
0
லால்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உரூஸ் விழா நடந்து வருகிறது. விழாவை கண்டித்து லால்பேட்டையில் நேற்று ஜமாத் சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையைச் சேர்ந்தவர் பைஜிஷா நூரி. இவரது நினைவு நாளை அவரது குடும்பத்தார் உரூஸ் விழாவாக கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு விழாவில் பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


10க்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப் பட்டது.இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி கோர்ட் உத்தரவுபடி கொடி ஏற்றுதல், கவாலி பாடுதல், சந்தனம் பூசுதல் ஆகிய நிகழ்ச்சிகள் இல்லாமல் உரூஸ் விழா கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டைப்போல் கோர்ட் அனுமதி பெற்று இந்த ஆண்டு உரூஸ் விழா நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. இந்த விழாவை கண்டித்து ஜமாத் சார்பில் லால்பேட்டையில் நேற்று கடையடைப்பு நடத்தப்பட்டது.

பிரச்னை ஏற்படாமல் இருக்க டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 நன்றி:தினமலர்

Share this