Breaking News

ஊடகம் மீது தாக்குதல் நடத்திய RSS க்கு கண்டனம். தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பை விசாரிக்க வேண்டும் - பாப்புலர் ஃபரண்ட்

நிர்வாகி
0
டெல்லியில் உள்ள ஹெட்லைன்ஸ் டூடே தொலைகாட்சியின் தலைமை அலுவலகத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்கியதற்கு பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த வன்முறை செயல் மற்றும் அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ். ஜனநாயகத்தையோ அல்லது அரசியல் சாசனத்தையோ மதிக்காததை உறுதி செய்துள்ளது. சங்கபரிவார தீவிரவாத நடவடிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து ஊடக தர்மத்தை நிலைநிறுத்திய ஹெட்லைன்ஸ் டூடே தொலைக்காட்சியின் முயற்சிகளை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது. சங்கபரிவார கும்பல் பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிந்தும், மீடியாக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் கண்டுகொள்வதில்லை.
நந்தித்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் குண்டுவெடிப்பு, மலேகோன் குண்டுவெடிப்புகள், கான்பூரில் பஜ்ரங்க்தள் நிர்வாகி வீட்டில் குண்டுவெடிப்பு, தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு, கோவா குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு,அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு என பல குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்வா அமைப்புகள் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிந்தும், அவர்கள் மீது காவல்துறை பெரிய அளவில் எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ். போன்ற ஹிந்துத்வா அமைப்புகள் முன்எச்சரிக்கையாக கண்காணிப்பட்டிருந்தால், இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.


அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ராமச்சந்திர கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகிய ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் RSS தீவிரவாத செயல்களை திட்டமிடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஹெட்லைன்ஸ் டூடே ஒளிபரப்பிய வீடியோவில், சங்க பரிவார் கும்பல் இந்திய துணை ஜனாதிபதியை கொள்ள சதி செய்தது, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை வழி நடத்தியது, பி.ஜே.பி. தலைவர்கள் முஸ்லிம்களைக் கொள்ள ரகசிய இயக்கம் உருவாக்க திட்டம் தீட்டியது, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்த்ரேஷ் குமாரின் தொடர்பு ஆகியவற்றை வெளிச்சதிற்கு கொண்டுவந்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மறைமுக கொள்கையை புரிந்து கொள்ள போதுமானதாக உள்ளது. இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைத்துள்ளது. இதனை உடனடியாக அரசு கவனித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்.ஐ விசாரிக்க தயக்கம் காட்டிவருவது வருந்தத்தக்கது. வலுவான பல ஆதாரங்கள் வெளிவந்த நிலையிலும், ஹிந்துத்வா பயங்கரவாததிற்கெதிரான எந்த நடவடிக்கைனயயும் மத்திய அரசு எடுக்கவில்லை. RSS யின் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் 1993 க்குப் பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களையும் மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று இத்தருணத்தில் மீண்டும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது.

Tags: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Share this