Breaking News

லால்பேட்டையில் பயணிகள் நிழற்குடை கட்டித்தரப்படுமா?

நிர்வாகி
0
லால்பேட்டையில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த் துள்ளனர்.


பஸ் நிறுத்தம்

கடலூர் மாவட்டம் லால் பேட்டையில் சிதம்பரம்- காட்டுமன்னார்கோவில் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது.இந்த பஸ் நிறுத்தத்தில் லால்பேட்டை மதர்சா நிர்வாகத்தினால் பொதுமக்கள் நலன் கருதி காயிதே மில்லத் பயணிகள் நிழற்குடை கட்டி கொடுக்கப்பட்டது.இந்த கட்டிடம் கட்டி கடந்த 50 ஆண்டுகள்ஆகிறது.இந்த பயணிகள் நிழற்குடையை லால்பேட்டை தோப்பு தெரு, சிங்காரவீதி, கொல்லிமலை மேல்பாதி, கீழ்பாதி, எள்ளேரி, மானியம் ஆடூர் ,நெய்வாசல் , தொருக்குழி உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் படுத்தி வருகின்றனர்.இந்த பகுதி மக்கள் அனைவரும் இங்கு வந்து தான் காட்டு மன்னார் கோவில், சிதம்பரம், திருச்சி, சேத்தியாத்தோப்பு போன்ற ஊர்களுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர்.


பயணிகள் நிழற்குடை


இதனால் நாள்தோறும் சுமார் 500-க் கும் மேற்பட்டவர்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்கின்றனர்.ஆனால் இந்த பயணிகள் நிழற்குடை நெடுஞ்சாலை துறையினரால் சாலை அகலப்படுத்தும் போது இடிக்கப்பட்டது.அதன்பிறகு அதனை ஒரு கூரை கொட்டகையாக அப்பகுதி வணிகர்கள் அமைத்து வைத்திருந்தனர்.


அதில் தான் தற்போது பய ணிகள் நின்று செல்கின்றனர்.அதுவும் மழைக்காலங்களில் இந்த கூரை முழுவதும் சேதமாகி விட்டது.இதனால் மழை நீர் முழுவதும் இந்த பயணிகள் நிழற் குடைக்குள் வருகிறது.இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அந்த கூரை கொட்டகையிலும் நிற்க முடியவில்லை.


தற்போது வெயிலிலும், கடும் மழையிலும் காத்து நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட் டுள்ளது.


ஆகவே இப்பகுதி மக்கள் நலன் கருதி லால்பேட்டையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


தகவல் :A.H.நஜீர்அஹ்மத் அபுதாபி

Tags: லால்பேட்டை

Share this