அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை
நிர்வாகி
0
அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் 14..7.2010 மாலை சி.என்.என் டி.வி சேனல் செய்தியினைப் பார்த்துக் கொணடிருந்த எனக்கு ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறிமி மிகவும் வீராவேசமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அது என்ன பேச்சு என்று கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கும். 2001 செப்டம்பர் மாதம் 9ந்தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தினை விமானகங்கள் மூலம் மோதி தகர்த்து அதன் மூலம் 2000 பேர்களுக்கு உயிர் சேதமிட்ட இடத்தின் அருகில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கலாமா என்ற கருத்தாய்வுக் கூட்டத்தில் தான் அந்த சிறுமி ஆவேசமாக பேசினாள். அவளுக்கு முன்பு பேசிய அமெரிக்கர்கள் முஸ்லிம்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள், ஆகவே அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பேசினார்கள. ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் இந்த 15 வயது சிறிமி, ‘தன்னுடைய பெற்றோர்களும், உறவினர்களும் கூட அந்த சம்பவத்தில் இறந்து தான் அனாதை முஸ்லிம் சிறிமியாக இருப்பதாகவும் அதற்காக எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று கூறி முஸ்லிம் அமைதியாக வழிபடுவதிற்கு பள்ளிவாசல் கட்ட இடம் மறுப்பது என்ன நியாயம் என்று கேட்டது, சிலப்பதிகார இலக்கியத்தில் தன்னந்தனியாக கணவன் கோவலனை இழந்த கண்ணகி மதுரை பாண்டியமன்னர் தர்பாரில் நியாயம் கேட்டது போன்ற இலக்கிய உண்மை நிகழ்ச்சியாக இருந்தது. அந்தப் முஸ்லிம் சிறிமி பேசியதினைக் கேட்டு வாயடைத்த கருத்துக் கேட்க வந்த அமெரிக்க நடுவர்கள் கருத்துக் கேட்டும் நிகழ்ச்சியினை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
1) அந்த சிறிமி பேசிய பின்பு அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகளை சேகரித்து உங்களுக்கு வழங்கலாம் என் ஆசைப்பட்டு இந்தக் கட்டுரை எடுதுகிறேன்:
அமெரிக்காவில் இஸ்லாமிய கம்யூனிட்டிகள் 1920ல் தோன்றி வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தி தங்களுடைய சமூக பிரச்சனை பற்றி விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் 1950 ஆம் ஆண்டில் தான் ‘நேஷன் ஆப் இஸ்லாம’ என்ற அமைப்பினை அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஹார்லீன் நகரத்தில் ஆரம்பித்து ஒரு பள்ளிவாசலினை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் இன்று ஆயிரத்திற்கு மேலான பள்ளிகள் உள்ளன. அமெரிக்காவில் மிக பெரிய பள்ளிவாசல் அடிராய்டு நகரில் உள்ள இஸ்லாமிக் செண்டரில் 1962லிருந்து 1965வரை உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அமெரிக்கா- ஆப்ரிக்க முஸ்லிம் மக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பின்பு எகிப்து, சௌதி அரேபியா, ஈரான் மற்றும் லெபனீஸ் அரசுகளின் பண உதவியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்து இன முஸ்லிம் மக்களும் தொழும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இஸ்லாமியர் மதசேவைக்காக ‘கவுன்சில் ஆப் மஸ்ஜித்’ அமைக்கப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சர்வேயின் படி 33 சதவீத தெற்கு ஆசிய மக்களும், 30 சதவீத அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவரும், 25 சதவீத அரபிய மக்களும் தொழுகைக்காக பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதிற்காக இன்னமும் இமாம்கள் எகிப்து, துருக்கி, பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறார்கள். அத்துடன் ‘இமாம்கள் கவுன்சில்’ 1972 ஆம்; ஆண்டு நிறுவப்பட்டு இமாம்களுக்கான பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் வசிக்கும் மார்க்க அறிவாளிகளே தொழுகை நடுத்தும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள கம்யூனிட்டி சபை கட்டிடங்களும் மார்க்க மற்றும் பொது கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் சிறுவர் மார்க்கக் கல்வி கற்க ஏற்பாடும், முதியோர் மார்க்க கல்விக்கும், இஸ்லாமியர் அல்லாதவர் இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வே படி அமெரிக்கா முஸ்லிம்களில் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை ஐந்து வேளை தொழுகின்றனர். ஆனால் அமெரிக்கா கிறித்துவர்கள் 40 சதவீதம் கிறத்துவ சர்ச்சுகளுக்குச் செல்கின்றனர்.
தற்போது கிட்டத்தட்ட 2000 பள்ளிவாசல்கள் உள்ளன. அதனில் 200க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் கலிபோர்னியா, நிய+யார்க் மாநிலங்களில் உள்ளன. 100லிருந்து 200 வரை பள்ளிவாசல்கள் டெக்ஸாஸ,; புளோரிடா, இல்லினோஸ், ஓகியோ, மிக்சிகான், பென்சில்வேனியா, நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் உள்ளன, 50திலிருந்து 100வரை பள்ளிவாசல்கள் வாசிங்டன், டென்னசி, அரிசோனா, ஓக்லாமா போன்ற மாநிலங்களில் உள்ளன.
2) அமெரிக்காவில் இஸ்லிமிய சமூதாய ஆரம்பமும் வளர்ச்சியும்:
முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினவர் அமெரிக்க மண்ணில் காலடி வைக்கும் போது இஸ்லாமியர் வந்தனர் எனக் கூறப்பட்டாலும் 1860ஆம் ஆண்டில் குடியேறிய சிரியா மட்டும் லெபனான் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக இருந்தனர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பா, ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் குடியேறினர். முதன் முதல் அமெரிக்க முஸ்லிம்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சார்ந்த அடிமைகள் தான் என்றால் மினையாகாது. அவர்கள் பெரும்பாலோனோர் படித்தவர்கள். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்கா வெள்ளையினத்தினவரிடமிருந்து கறுபு;பின மக்களை விடுதலைக்காகவும் அவர்கள் உரினைமக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அமெரிக்கா-ஆப்பிரிக்கா முஸ்லிம் தலைவர் எலிஜா முகம்மது ‘நேஷன் ஆப் இஸ்லாம’; இயக்கத்தினை ஆரம்பித்து வெள்ளை நிற அமெரிக்க மக்களுடன் கறுப்பின மக்களுக்காக சமாதானத்தில் இஸ்லாம் மதத்தினை பரப்ப வழிவகுத்தார். எலிஜா முகம்மது கறுப்பின அமெரிக்கருக்கு தனி கறுப்பின இஸ்லாமிய மாநிலம் கேட்டார். அந்த இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பல் வேறு குற்ற பின்னணியில் சிறையில் வாடும் கறுப்பினத்தவரை திருத்தி இஸ்லாத்தினைத் தழுவ தனி அமைப்பான ‘ரிகேபிளிட்டேஷன் ஆப் அமெரிக்கா பிளாக்’ ஏற்படுத்தினர். ஜெயிலில் வாடும் கறுப்பின மக்களை சந்தித்து கீழ்கண்ட உபதேசங்கள் செய்கின்றனர்:
1) கறுப்பராக பிறந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் அது இழிவல்ல. ஆகவே தாழ்வு மனப்பான்மையினை விட்டொழிக்க வேண்டும்.
2) நீங்கள் எந்த முஸ்லிமையினையும் அழுக்கான உடையிடனோ அல்லது முகச்சவரம் செய்யாத நபரையோ உடல் சுத்தமில்லாத நபரைவேயா பார்க்க முடியாது.
3) எந்த் முஸ்லிமையும் குடிபோதைக்கு ஆளாவதினைப் பார்க்க முடியாது.
4) எந்த முஸ்;லிமும் போதை தரும் புகைப்பான்களை உபயோகிப்பதினைக் காண முடியாது.
5) எந்த முஸ்லிமும் அநாகரிக ஆடல்களில் ஈடுபட்டதினை பார்க்க முடியாது.
6) எந்த முஸ்லிமும் தன் மனவியினைத் தவிர வேற்றுப் பெண்களில் உடல் ரீதியான தொடர்பு கொள்வதினைக் காண முடியாது.
7) எந்த முஸ்லிமும் சிறிய வருமானம் தரும் வேலை செய்யாமல் கூட வாழ பிச்கையெடுப்பதினைக் காணமுடியாது.
8) ஏந்த முஸ்லிமும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதினைக்காண முடியாது.
மேற்கொண்ட போதனைகள் மூலமே பல்லாயிரக்கணக்கான அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினர். அதில் ஒருவர்தான் உலகக் குத்துச்சண்டை பதவியிலிருந்து பாலியில் குற்றச்சாட்டில் ஜெயிலில் வாடிய மைச் டைசன.; இன்று இஸ்லாத்திற்கு மாறி மாலிக்காக வெளி வந்துள்hர்.
எலிஜா முகம்மது 1965 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின்பு அவருடைய மகனார் வாலாஸ் கறுப்பின முஸ்லிம்களுக்கு தனி மாநில கொள்கையினை கைவிட்டு கறுப்பினர் அல்லாத மக்களையும் நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார். அந்த அபை;பிற்கு மேற்கத்திய ‘வேர்ல்டு கமிட்டி ஆப் இஸ்லாம’ என்று பெயர் சூட்டினார். அதன் பின்பு அந்த அமைப்பிற்கு ‘அமெரிக்கன் முஸ்லிம் மிஷன்’ என்று மாற்றப்பட்டது.
3) குடிபெயர்ந்த அமெரிக்க முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள்:
1) ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தாரும் 100 டாலரிடமிருந்து 250 டாலர் வரை வருடத்திற்கு செலுத்தி ஒவ்வொரு கம்யூனிட்டி அமைப்பிலும் உறுப்பினராகி உள்ளனர்.
2) தங்கள் குழந்தைகளை இஸ்லாமிய மார்க்க போதனைகளை வாரத்தில் இருமுறை கற்க வழிவகை செய்கின்றனர்.
3) பள்ளிவாசல் நிதிக்காக விருந்துடன் கூடிய சிறப்பு முகாம் நடத்தி வசூல் செய்கின்றனர். ஒரு தடவை நான் அது போன்ற முகாமில் கலிபோர்னியா மாநிலம் பிரிமாண்ட் பள்ளிவாசலில் பங்கேற்றேன்.
அப்போது நான், நீ என்று ஆண்கள், பெண்கள,; சிறார்கள் போட்டிபோட்டு நன்கொடை செலுத்தியதில் ஒரு லட்சத்து பத்தாயிரம் டாலர் நன்கொடையாக கிடைத்தது.
4) வெள்ளிதோறும் பெண்கள் தங்கள் வீட்டில் தயார்செய்த பண்டங்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் விற்று அந்தக் பணத்தினை பள்ளிவாசலுக்காக நன்கொடையாக தருகின்றனர்.
5) சிறப்பு பேச்சாளர்களின் பேச்சினை ஏற்பாடு செய்து அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அது போன்ற மக்கா பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று முதலிடத்தில் தேறிய ஒருவருடைய கம்யூட்டர் விளக்கத்துடன் கூடிய சொற்பொலிவினை நான் சானோஸ் கம்யூனிட்டி பள்ளியில் கேட்டேன்.
6) முஸ்லிம்கள் ஹலாலான உணவினையே சாப்பிடுகின்றனர். பெரும்பாலான கறிக்கடைகள் பாகிஸ்தானியர் மற்றும் ஆப்கானிஸ்தியர் தான் நடத்துகின்றனர். கலிபோர்னியாவிலுள்ள சாப்ட்வேர் தலைமையிடமான சானோசில் ஒரு சைனீஸ் முஸ்லிமின் ஹலால் ஹோட்டலில் அத்தனைக் கூட்டம் என்றால் பாருங்களேன்.
7) கம்யூனிட்டியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ‘பாட்லாக்’, ‘பார்க்யூ’ என்ற முஸ்லிம் குடும்பங்கள் கூடி பொது பார்க்கில் விருந்துண்கின்றனர். அப்போது குடும்ப உறுப்பினரிடையே கலந்துரையாட ஏதுவாக உள்ளது. ஆனால் அப்படி நடக்கும் விருந்தோம்பல் நிகழ்வுகளில் கூட ஒவ்வொரு நாட்டிலும் அல்லது மாநிலத்தில் வந்தவர்களுக்கிடையே மட்டும் பழகும் பழக்கமாக இருந்து வருகிறது. எல்லை தாண்டி குடும்பப் பழக்கங்கள் வேரூன்றவில்லை.
8) வெள்ளிக்கிழமையில் ஜூம்மா குத்துபா முடிந்த பின்பு நோயுற்றவர்களுக்கு, இறந்தவர்களுக்கு துவா செய்யவும், மருத்துவச் செலவு, ரத்தம் தேவைப்படும் நோயாளிக்கு உதவவும் வேண்டுகோள் விடப்படுகிறது. அங்கு இறந்தவர்களை அடக்ம் செய்யும் இடம் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. வசதியில்லாது இறந்தவரகளுக்கு அடக்கம் செய்ய கம்யூனிட்டிகள் வசூல் செய்து அடக்கம் செய்கிறார்கள்.
9) பெண்கள் நீண்ட கையுள்ள சட்டையினை அணிந்தும் மேலங்கி, தலை முக்காடும் அணிந்தும் காணப்படுகின்றனர். ஆனால் சில ஆண்கள் தான் சமூதாயம் கூடும் இடங்களுக்கு முனங்காலுக்கு மேலுள்ள அரைக்கால் சட்டையணிந்து வருகின்றனர். அதுவும் பெண்கள் கூடும் இடங்களுக்கு வருவது அந்த இளைஞர்களுக்கு மேலை நாகரிகமாக இருக்கலாம் ஆனால் என்னால் முகம் சுழிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழக முஸ்லிம் ஊர்களிலிருந்த முஸ்லிம் பட்டதாரிகள் ஊரில் கைலியும் தொப்பியும் அணிந்து விட்டு, அமெரிக்காவின் நகரங்களில் நாகரீகமென்று அரைக்கால் சட்டையினை அணிந்து வருவது அவ்வளவு இஸ்லாமிய பண்பாடுக்கு உகந்ததாக கருத முடியவில்லை.
10) சிறார்கள் அமெரிக்காவின் மேதாவி கலாச்சாரத்தில் ஈடுபடாமல் தங்கள் மதக்கோட்பாடோடு வாழ பெண்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
11) இஸ்லாமியர் கருத்துச்சுதந்திரத்துடன் வழிபாடு நடத்த பல இஸ்லாமிய நாடுகளில் கூட இல்லாதிருந்தும் அமெரிக்காவில் இருக்கிறது பாராட்டத்தக்கது.
12) இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு, தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் சமூதாய தொண்டுகளும் மற்றும் இனையதளங்களும் நடத்தி வருகின்றன.
4) மேற்கத்தியவர் பார்வையில் இஸ்லாமியர:; 1989ஆம் ஆண்டு ஈரானியர் புரட்சிப்படை அமெரிக்காவின் தூரகத்தினைக் கைப்பற்றி அமெரிக்கர்களை பயணக்கைதிகளாக வைத்த பின்னரும், அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 11.9..2001 ஆம் ஆண்டு தகர்க்கப்பட்ட பின்பும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாட்டோ நாடுகளின் கோபம் உலக முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது என்றால் அது மிகையாகாது. அந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே இஸ்லாமியர் வன்முறையாளர்கள் என்ற மாயைத்தோற்றத்தினை உருவாக்கி உள்ளது. அதன் விளைவு தான் அந்த நாடுகள் ஆப்பானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் படையெடுக்கத்தூண்டியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானையும், ஈரானையும் பயமுறுத்தும் பம்மாத்துக்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமா? பிரான்ஸ், ஹாலந்து, நிய+ஜிலாந்து, இட்டாலி போன்ற நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரவும், புர்கா போடவும் மறுக்கப்படுகிறது. ஆனால் கிறித்துவ இளைஞர்களும், பெண்களும் குளிர் காலத்தில் தலை மூடிய ‘ஹ_ட்’ கவச உடை அணிய அனுமதியள்ளது எவ்வாறு நியாயமாகும்? ஏன் இந்தியாவில் கூட முஸ்லிம் அல்லாத பெண்கள் வட மாநிலங்களிலும் முக்காடு போட்டும், இரு சக்கர வாகனத்தில் போகும் போது முகத்தினை மூடி செல்வதில்லையா? ஏன் இஸ்லாமியரை மட்டும் தனிமைப் படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியமே!
அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தகர்ப்பிற்கு பின்பு உலக முஸ்லிம்களைப் பற்றி தவறான தகவல்கள் எலக்ட்ரானிக் மீடியாவிலும், பத்திரிக்கைகளிலும் வராமலில்லை. பொதுவாக இஸ்லாமியர் வன்முறையாளர் என்ற கருத்தினை புகுத்தப் பார்க்கின்றனர். அதே வேளையில் அமெரிக்காவின் ஓக்லாமா சிட்டியில் ஃபெடரல் அரசு கட்டிடத்தினை குண்டு வைத்து தகர்த்த டிமோட்டி என்ற அமெரிக்கன் கிறித்துவ மதத்தினன் என்பதால் எல்லா கிறித்துவரும் தீவிரவாதிகள் என்று யாரும் சித்தரிக்க மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகள் என்று சாயம் பூசப்பார்;க்கிறார்கள். அவர்களெல்லாம் இஸ்லாம் அமைதியினைப் பேணிக்காக்கும் மதம் என்று அறியாதவர்கள். இஸ்லாம் மதமும், கிறித்துவ மதமும் சகோதர மதம். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சொல்லிக் கொள்ளும் முகமனான ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதே உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகுக என்று சொல்லப்படுவதே என்று அறியாதவர்கள். இஸ்லாமியர் மக்கள் ஒற்றுமைக்காகவும் ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்பும் முக்கிய கடமையாக கொள்பவர்கள். அதே தத்துவத்தினைத்தானே ரசூலல்லாஹ் மட்டுமல்லாமல் அவர்களுக்கு முன்பு வந்த கிறித்துவ, யூத மதத்தின் கடவுள்களாக கருதப்படும் அப்ரஹாமும், மோசசும், ஜீசசும் போதித்தனர். அவர்களெல்லாம் ரசூலல்லாஹ்வின் முன்னோடி நபிமார்கள் என்று குர்ஆனில் சொல்லப்பட்டதினை அவர்கள் அறியாதவர்களா?
பொதுவாக இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் கூட்டுப்படை வெற்றி பெற்ற பின்னரும் முன்னாள் காலணி ஆகிக்கத்தினால் விடுபட்ட நாடுகளில், அல்லது இஸ்ரேயில் போன்று திணிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஆட்சிக்கு ஆதரவாக அமெரிக்க-ஆங்கிலேய கூட்டுப்படை ஆதரவு அளித்து வருகிறது. அந்த திணிக்கப்பட்ட நாடுகளின் எல்லைகளை ஏற்காத நாடுகளில் வசிக்கும் எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்படி எதிர்ப்பு காட்டுபவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பதால் கூட்டுப்படை தன் நவீன ஆயுத பலத்தினைக் காட்டி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மறு காலணி ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது என்றால் மிகையாகாது. இதனை நான் சொல்லவில்லை அமெரிக்கா-கூட்டுப்டை எதிர்ப்பாளரான அமெரிக்க அறிஞர் நோம் சோம்கி சொல்கிறார் என் 7.8.2010 தேகியிட்ட ஹிந்துப ;பத்திரிக்கை தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் என்ன நினைக்கின்றனரென்றால் உலகத்தில் அவர்களைத் தவிர உயர்ந்த இனமில்லை என்றுதானே எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது பிரகடனப்படுத்திய குடிமக்களின் உயிருக்கும், உடமைக்கும், வழிபாடுக்கும் உத்திரவாதம் இஸ்லாமும் போதிக்கதானே செய்கிறது.
இஸ்லாமிய-இந்து மக்கள் சண்டைகள் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் அஷ்டுஸ் வார்ஷ்னே, இரு கமூகத்தினர் சண்டைகளைக் களைந்து சமரசம் ஏற்பட அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், அறிவு ஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், சினிமாத்துறையினர், விளையாட்டு சங்கத்தினர் முன்வந்து அதற்கான வழிவகை செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே முஸ்லிம் மக்களின் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க உணர்விற்கு எதிரான கசப்பினைப் போக்கி நல்லெண்ணம் உண்டாக்க வேண்டுமென்றால் கீழ்கண்ட வழிமுறைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்:
1) முஸ்லிம் நாடுகளின் வறுமையினை ஒழித்து அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு தன்னிறைவு பெற உதவ வேண்டும்.
2) முஸ்லிம் நாடுகளின் இறையான்மைக்கு உத்திரவாதம் தர வேண்டும்.
3) முஸ்லிம் மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்பட உடனே முழு ஒத்துழைத்து அதனை நிலை நாட்டவேண்டும்.
4) மதசம்பந்தமான போதனைகளை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மதரஸாக்களில் கல்வியினை கற்றுக் கொடுக்க கல்விக்கான உதவித் தொகையினை பின் தங்கிய முஸ்லிம் நாடுகளுக்குத் தரவேண்டும்.
5) நான் மேற்கூறிய யோசனைகளுக்கு அமெரிக்க முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் முதலில் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் என்ற நிலை மாறி அமெரிக்கா முஸ்லிம்களாக மாறி அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடு மக்களினன் தவறான எண்ணத்தினை மாற்ற கீழ்கண்ட வழிகளில் செயலாற்ற வேண்டும்:.
1) அமெரிக்கா முஸ்லிம்களில் 60 சதவீதம் வெளிநாடுகளிலிருந்;து வந்து குடியுரிமை பெற்றவர்கள். 40 சதவீதம் அமெரிக்கா-ஆப்பிரிக்கா இனத்தினர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும் கிறித்துவர்கள்-யூதர்களுடன் நல்ல உறவினை ஏற்படுத்தி அமெரிக்கா அல்லாத முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவினை நிலைநிறுத்தும் பாலமாக அமைய வேண்டும்.
2) அமெரிக்காவின் யூதர்கள் என்ன செய்ய வேண்டும்?
பாலஸ்தீன மக்கள் அமைதியுடனும், சொந்த நாடு, உரிமை, மற்றும் உடல், பொருள் உத்திரவாதத்துடன் வாழ முயற்சி எடுக்க வேண்டும்.. ஏனென்றால் எந்த வன்முறையும் இஸ்ரேயில் நாட்டினை விடுவிக்க முடியாது. அதேபோல பாலஸ்தீனர்களை தங்கள் சொந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக நிறந்திறமாக வெளியேற்றவும் முடியாது. ஆகவே இஸ்ரேயிலும், பாலஸ்தீன மக்களும் தன்னுரிமையுடன் வாழ அமெரிக்கா வாழும் கிறித்துவர்களும், யூதர்களும் வழிவகுக்க வேண்டும். அதற்கான முயற்சியினை அமெரிக்காவின் முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். அமெரிக்காவில் ஒரு பழமொழி சொல்வார்கள், நீங்கள் சிரியுங்கள், அடுத்தவரும் சிரிப்பார்’. அந்த பழமொழியே யூத மக்களுக்கும் பொருந்தும்.
3) அமெரிக்காவின் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சினிமாத்துறையினர் அமெரிக்கா படைகள் முஸ்லிம் நாடுகளில் தற்காலிக வெற்றியினை பிரதானப்படுத்தாது, எப்படி ஆப்பிரிக்கா மக்களை ‘டார்ஜன்’; படத்தின் மூலம் காட்டுமிராண்டிகள் போல எழுத்திலோ அல்லது எலக்ட்ரானிக் மீடியாவிலோ, அல்லது அமெரிக்கா கூட்டுப்படையின் தங்கள் நவீன போர் எந்திரங்கள் மூலம் எப்படி ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் வெற்றி கொண்டு முஸ்லிம்களை கோழையாக சித்தரிக்காது அவர்களும் தாங்கள் வாழும் கிரகத்தில் பிறந்த மனித பிறவிகள் தான் அவர்களுக்கும் கவுரவமாக, அமெரிக்காவின் 1776 ஆம் ஆண்டு சுதந்திர பிரகடனத்தில் கூறப்பட்டது போல சுதந்திரமாக வாழ அனைத்து உரிமைகளும் உண்டு என்பதினை உணர்ந்து செயலாற்ற வேண்டும். அவ்வாறு செயலாற்றினால் நிச்சயாக முஸ்லிம் மக்களின் வெந்த புண்ணிற்கு மருந்து போட்டது போல ஆதரவாக இருக்குமல்லவா? அதற்கான கருத்து ஒற்றுமையினை அமெரிக்க முஸ்லிம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
Tags: கட்டுரை