இமாம்களுக்கு அரசு ஊதியம் மத்திய அரசு பரிசீலனை
நிர்வாகி
0
புதுடெல்லி, ஆக.22-
அரசு உதவி பெறும் மசூதிகளின் இமாம்களுக்கு அரசு ஊதியம் வழங்குமாறு கடந்த 1993-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது. ஆனால் இந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பாராளுமன்றத்தில் நேற்று லாலுபிரசாத் இப்பிரச்சினையை எழுப்பினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்? என்று அவர் கேட்டார். அவருக்கு சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறுகையில், `கோர்ட்டு தீர்ப்பை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும். உரிய நடவடிக்கை எடுக்கும்' என்று உறுதி அளித்தார்.
நன்றி :தினத் தந்தி