Breaking News

வீராணத்திலிருந்து செப்டம்பர் 3-ம் தேதி தண்ணீர் திறப்பு

பக்கர்Brothers.kollumedu
0
சிதம்பரம், ஆக. 31: வீராணத்திலிருந்து செப்டம்பர் 3-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது என தினமணி நாளிதழில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

வருகிற செப்டம்பர் 3-ம் தேதி காலை வீராணம் ஏரியில் உள்ள முக்கிய மதகான ராதா மதகிலிருந்து வேளாண் பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படும் என சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வீராணம் ஏரியிலிருந்து 28 மதகுகள் வழியாக படிப்படியாக பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் ஏரிப் பாசனத்தை நம்பியுள்ள 50ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பங்கேற்று ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீரை திறந்து விடுகிறார்.

Share this