Breaking News

வாழ்வது ஒரு குடும்பம்... விடிவது நம் தலையில்...

நிர்வாகி
0
இன்று நாடெங்கும் காட்டுத்தீ போல் பரவி - பரவலாக பேசப்படும் பிரச்சணை விலைவாசி உயர்வு. இதற்கு காரணம் ஆண் லைன் வணிகம் என்று ஒரு சாராரும், மத்திய அரசு தான் காரணம் - மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் விலைவாசி உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கலைஞரும் கொக்கரிக்கிறார்கள்.


அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணை என மக்களின் அன்றாட வாழ்கைக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. விண்ணை தொட முயலும் இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பெரிதாக எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. அவ்வபோது மத்திய அரசு - "விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிக்கை விடுவதோடு சரி, வேறெந்த உறுப்படியான நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை.

தமிழ் தாயின் மூத்த தலைமகன் என தனக்குதானே பட்டம் சூட்டிக்கொள்ளும் கருணாநிதி, தமிழீழ பிரச்சணையில் கூட காங்கிரஸ் அரசை நேரடியாக சாடிடாத போதும், விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என கூறும் அளவிற்கு, விலைவாசி உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களின் குரல்வலையை நெறிக்கிறது.

"விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று, இது உலகளாவிய சிக்கல்" என நாடாளுமன்றத்தில் பிரதீபா பட்டேல் தெரிவித்தார். குடியரசு தலைவர் அறிவித்தது போல் அத்தியாவசிய பொருட்களின் விலை 20% உயர்ந்திருப்பது ஒன்றும் தவிர்க்க முடியாதது அல்ல. வல்லரசு பட்டியலில் சேர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் இந்தியா, அது இடம்பெற்றுள்ள ஜி-20 நாடுகளில் பெரும்பாலானவற்றில் 10 % மேல் விலை உயர்வு இல்லை. இந்தியாவில் மட்டும் தான் டிசம்பர் 2009 மாத முடிவின் படி விலைவாசி உயர்வு சராசரியாக 15 %. அதுவும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு சராசரியாக 25 விழுக்காட்டை தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, உலக எண்ணெய் சந்தையில் ஒரு லிட்டர் கச்சா எண்ணையின் விலை 21 ரூபாய் 46 காசு. அரசு கணக்குப்படி சுத்தகரிக்க இதற்கு மேல் 10 % செலவாகும். இதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல் 23 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் எரத்தாழ 50 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. எனவே எண்ணெய் விலை உயர்வுக்கும், உலக சந்தை நிலவரத்திற்கும் சம்பந்தம் இல்லை. பெட்ரோலிய பொருட்களின் மீது இந்திய அரசின் வரி எரத்தாழ 35 % ஆகும். இதுவே பெட்ரோலிய பொருட்களின் இந்திய சந்தையின் விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.

நெல் கொள்முதல் விலையை 5 அன்ன்டுகளில் 80 % உயர்த்திக் கொடுத்ததால் தான் அரிசி விலை இந்த அளவிற்கு உயர்ந்து விட்டது என அரசு கூறுவது நியாமற்றது, உண்மைக்கு புறம்பானது. கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் நெல் கொள்முதல் விலை 15 % உயர்ந்துள்ளது. ஆனால் வெளிசந்தையில் அரிசியின் விலை 16 ரூபாயிலிருந்து 45 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 150 % மேல் உயர்ந்துள்ளது. இத்தனைக்கும் தமிழகத்தில் நியாயவியாலி கடைகளில் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் போதே இந்த நிலை!

மத்திய அரசின் தேசிய ஊராக வேலை வாய்ப்பு திட்டம் ஒரு நல்ல திட்டம் தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த திட்டத்தை தமிழகம் போன்று விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் நடைமுறைபடுத்துவது விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. இங்கு இத்திட்டத்தை நடைமுறைபடுத்தினால், விவசாயிகள் நிரந்தர வருவாய் கிடைக்கிற தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்திற்கு சென்றுவிடுகிறார்கள். இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கிறது. விலைவாசி உயரும் காலங்கள் மற்றும் விவசாயம் செழிக்கும் காலங்களிலாவது தேசிய ஊராக வேலை உறுதி தெயிடை நிறுத்தி வைக்கவேண்டும். இலவசங்களையும், கவர்ச்சி திட்டங்களையும் அறிவித்து ஆட்சி கட்டிலில் அமர்வது, கோடி கொடியை பணத்தை குவிப்பது மட்டும் குறியாய் இருந்தால் நாட்டின் விலைவாசி உயர்வை கட்டுபடுத்தவே முடியாது.

சாமானிய மக்கள், இலவசம் என்று ஒன்றே வாழ்கையில் இல்லை என்பதை புரிந்துகொண்டால், பாதி பிரச்சணை தீரும்!

விவசாயகடன் ரத்து - இதனால் குறுநில விவசாயிகளில் 5 % மக்கள் மட்டும் பயன்பெறுகிறார்கள். இதனால் பெரிதும் பயனடைவது பெருநில முதலைகளும், ஆட்சிகட்டிலில் தொடர்ந்து அமர்ந்திட துடிக்கும் அரசியல்வாதிகளும் தான். வங்கி கடனை ரத்து செய்தால், வங்கியின் கணக்கை நிவர்த்தி செய்யபோவது யார்? அரசு தான் மக்களின் வரிப்பணத்தில் செய்யவேண்டும்...

குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கெல்லாம் இலவச தொலைகாட்சி பெட்டி - தொலைகாட்சி பெட்டியை வாங்க கருணாநிதி என்ன செய்வார்? தன் சட்டை பையிலா கைவிடுவார்? இங்கும் மக்களின் வரிப்பணம் தான் வேலை செய்யும்... கட்டிய வரிப்பணத்திற்கும், ஓட்டிற்கு வாங்கும் பணத்திற்கும் கிடைக்கும் இலவச தொலைகாட்சியில் ஆயிரம் ரூபாய்க்கு சன் டைரக்ட் வாங்கிகொண்டு கலைஞர் டிவியில் "மானாட மயிலாட" பார்க்கலாம்... ஒரு ரூபாய் அரிசியை நெய்ய புடைத்து சோறாக்கி, சாம்பாருக்கு 99 ரூபாய்க்கு பருப்பு வாங்க வேண்டும்.

ஒரு ரூபாய் அரிசி, விவசாயகடன் ரத்து, இலவச தொலைக்காட்சி பெட்டிகளாளெல்லாம் மத்தியிலும், மாநிலத்திலும் வாழ்வது ஒரு குடும்பம் தான்! ஆனால் விடிவது என்னவோ நம் தலையில்... விலைவாசி உயர்வின் வேரருக்கும் சக்தி பொது மக்களாகிய நம் கையில் தான் இருக்கிறது....

_நசீருத்தீன்

Share this