Breaking News

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு:லால்பேட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு

நிர்வாகி
0
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு கூறப் படுவதையடுத்து முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான லால்பேட்டை, பகுதியில் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினர்.முக்கிய இடங்களில் போலீ சார் பாதுகாப்பு பணி யில் ஈடு படுத்தப்பட்டுள் ளனர்.


கொடி அணிவகுப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமியில் உள்ள இடம் யாருக்கு என்பதில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறப் படுகிறது.இதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லால்பேட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத் தினர்.

லால்பேட்டையில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச் சந்திரன் தலைமையில் போலீ சார் கொடி அணிவகுப்பு நடத் தினர்.அணிவகுப்பு வீராணம் ஏரி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கைக்காட்டி ,சிதம் பரம் மெயின்ரோடு, காயிதே மில்லத் சாலை, பஜார் தெரு வழியாக சென்று மீண்டும் ஏரிக்கரை வந்தனர்.

பாதுகாப்பு

அதையடுத்து முக்கிய மசூதிகள், கோவில்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின் றனர்.தொடர்ந்து பொதுமக்க ளுக்கு எவ்வித இடைïறும் கொடுக்காமல் , அனைவரும் அமைதியான முறையில் இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Share this