Breaking News

அயோத்தி வழ‌க்‌கி‌ல் ‌தீ‌ர்‌ப்பு‌க்கான தடை ‌நீ‌க்க‌ப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பக்கர்Brothers.kollumedu
0
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை த‌ள்‌ளிவைக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் இ‌ன்று விசாரிக்‌கிறது. அ‌ப்போது ‌தீ‌ர்‌ப்பு மேலு‌ம் ‌த‌ள்‌ளிவை‌க்க‌ப்படுமா? அ‌ல்லது‌ ‌தீ‌ர்‌ப்பு‌க்கான இடை‌க்கால‌த் தடை ‌நீ‌க்க‌ப்படுமா எ‌ன்பது இ‌ன்று தெ‌‌ரி‌யவரு‌ம்.

கடந்த 24ஆ‌ம் தே‌தியே இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முதல் நாள் உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் சந்திர திரிபாடி என்கிற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தாக்கல் செய்த சிறப்பு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதால், தீர்ப்பு கூறுவதை த‌ள்ள‌ிவைக்குமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இப்போது மீண்டும் இந்த மனு மீது இ‌ன்று ‌விசாரணை நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிட வேண்டும்; ஏன் என்றால் இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் ஒருவர் அன்றைய தேதியில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அவருடைய இடத்துக்கு மற்றொருவர் நியமிக்கப்பட்டால் இந்த வழக்கு விசாரணை மீண்டும் முதல் கட்டத்திலிருந்து தொடங்கப்பட வேண்டியிருக்கும் என்பதால் அதிக கால தாமதம் ஆகும் என்று மனுதாரர் முகம்மது ஹசீம் அன்சாரி வலியுறுத்தி‌யிரு‌ந்தா‌ர்.

ஆனால் நீதித்துறையைச் சேர்ந்தவர்களோ குறிப்பிட்ட அந்த நீதிபதிக்குப் பணி நீட்டிப்பு செய்துவிட்டு பிறகு அவரையும் கொண்டே தீர்ப்பைப் பெறலாம் என்கின்றனர்.

இத‌னிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறலாம் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடக்கூடிய வாய்ப்பும் இருப்பதால் விழிப்புடன் இருக்குமாறு எல்லா மாநில அரசுகளுக்கும், மத்திய ஆட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியிருக்கிறது.

visit:கொள்ளுமேடுXpress

Share this