Breaking News

அயோத்தி தீர்ப்பு அமைதி காக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது வேண்டுகோள்

நிர்வாகி
0
அயோத்தி தீர்ப்பு அமைதி காக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது வேண்டுகோள்


அயோத்தியில் ராம ஜென்ம பூமி மற்றும் பாபரி மஸ்ஜித் வளாகம் யாருக்கு உரிமைபட்டது என்பது குறித்து லக்னோ உயர் நீதிமன்ற கிளை வருகிற 24-ந்தேதி தீர்ப்பு வழங்க விருக்கிறது. அந்தத் தீர்ப்பை மதித்து அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹமது வேண்டுகோள் விடுத்துள் ளார்.

உரிமை வழக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி மற்றும் பாபரி மஸ்ஜித் வளாகம் யாருக்கு சொந்தம்? என்ற உரிமை பிரச்சினை குறித்து 4 வழக்குகள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டன.

இதற்கிடையில் 18 ஆண்டுகளுக்கு முன்பு 1992 டிசம்பர் 6-ம் தேதி சர்ச் சைக்குரிய அந்த வளாகத் தில் இருந்த பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனியாக வழக்கு நடைபெற்று வரு கிறது. இதற்கிடையில் பாபரி மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி வளாக உரிமை குறித்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன் றம் வருகிற 24-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, சர்ச்சைக் குரிய இடம் குறித்து இந்து அமைப்புகளுக்கும் - முஸ்லிம் அமைப்புகளுக் கும் சமரச தீர்வு ஏற்பட் டால் கடந்த 17-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க நீதிமன்றம் அறிவிப்பு விடுத் தது. ஆனால், இருதரப்பி னரும் சமரசத் தீர்வுக்கு சம்மதிக்கவில்லை. எனவே, வருகிற 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

நீதிபதிகள் எஸ்.யு. கான், டி.வி. சர்மா மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் இந்த தீர்ப்பை அறிவிக்க விருக்கிறது.

மத்திய அரசு வேண்டுகோள்

தீர்ப்பை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட வேண்டு கோளில், நீண்ட கால சட்ட நடைமுறைகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த தீர்ப் புக்கு மதிப்பளிக்க வேண் டிய அதே நேரத்தில், தொடர்ந்து நடைபெற இருக்கும் நீதிமன்ற நட வடிக்கையின் ஒரு கட்ட மாகவே இதைக் கருத வேண்டும். அனைத்து தரப் பினரும் இதை ஏற்காத பட்சத்தில், இந்த நடை முறை இத்துடன் முடிந்து விடுவது இல்லை.

தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கை தேவை என்று ஒரு தரப் பினர் கருதினால் அதற் கான சட்டரீதியான தீர்வு கள், வழிமுறைகள் ஏராள மாக உள்ளன. இதை கருத்தில் கொண்டு, நாட் டின் அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த தரப்பினரும், மற்றொரு தரப்பினரை, எந்த வகை யிலும் துன்புறுத்தும் வகை யிலோ, மனதை புண்படுத் தும் வகையிலான செயல் களிலோ ஈடுபடக் கூடாது என கேட்டுக் கொள்ளப் பட்டது.

இந்து - முஸ்லிம் அமைப்புகள்

தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும் அமைதி காக்கப்பட வேண்டும் என்று அயோத்தி ராமஜென்ம பூமி கோவில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் மகராஜ், ஷியா மதத் தலைவர் மௌலானா கல்பே ஜவாத், அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் ஃபிராங்கிமாலி ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

பி.ஜே.பி.யின் மூத்த தலைவரும், பாராளுமன்ற கட்சி தலைவருமான அத் வானி, அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து அவரது கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கியிருப்ப தாகவும், தீர்ப்பு எப்படி இருந்தாலும் மேல் விசாரணைக்காக இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் டுக்கு செல்வது உறுதி என்றும் கருத்து தெரிவித் துள்ளார்.

இ.அஹமது

தீர்ப்பு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே இணையமைச் சருமான இ.அஹமது கடந்த 18-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருக் கிறார்.

அதில் அவர் கூறியி ருப்பதாவது-

பாபரி மஸ்ஜித் உரிமை தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன் றத்தின் லக்னோ பெஞ்ச் வருகிற 24-ம் தேதி தனது தீர்ப்பை அறிவிக்க இருக் கிறது. அந்த தீர்ப்பை அனைத்துத் தரப்பு மக்களும் மதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்டுக் கொள்கிறது.

பாபரி மஸ்ஜித் இடஉரிமை தொடர்பாக என்று தாவா ஏற்பட்டதோ அன்றிலிருந்தே அந்த தாவாவை நீதிமன்ற முடிவுக்கு விட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது.

தற்போது அந்த தாவா தொடர்பான தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன் றத்தின் லக்னோ கிளை வெளியிட இருக்கிறது. இந்திய மக்களுக்கு நீதி வழங்குவதில் நீதிமன்றம் தான் உரிய அதிகாரப் பீடம் என்பதால் அந்தத் தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள் விடுக்கிறது.

அந்த தீர்ப்பு தொடர் பாக கருத்து வேறுபாடோ மனக்குறைவோ யாருக் காவது ஏற்பட்டால் அவர்கள் உச்சநீதிமன்றத் துக்கு மேல்முறையீடு செய்ய சுதந்திரம் இருக்கி றது. இந்த சூழ்நிலையில், அந்த தீர்ப்பு அமைதி யையும், சட்டம் ஒழுங்குக் கும் எதிராக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது.

நாகரீக சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் நீதிமன்ற தீர்ப்பை மதிப் பது கடமையாகும். இது போல் உணர்ச்சிபூர்வமான விவகாரங்களில் நமது மன வெளிப்பாட்டை கட்டுப் பாட்டுடன் வைத்திருக்க வேண்டும். இந்திய மக் களிடையே அமைதியை யும், ஒற்றுமையையும் ஏற்படுத்த அனைத்து தரப்பு மக்களும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இ.அஹமது தனது அறிக்கையில் கூறி யுள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இப்படி அனைத்து தரப்பினரும் அமைதியை காக்கும்படி வேண்டு கோள் விடுத்திருக்கும் நிலையில், உத்தரப்பிர தேசத்தில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகின்றன.

உ.பி. காவல்படையைச் சேர்ந்த 1 லட்சத்து 60 ஆயிரம் பேர்களும், சி.ஆர். பி.எஃப். வீரர்கள் 3,300 பேர் களும், கூடுதல் சி.ஆர்.பி. எஃப். படையினர் 4,400 பேர்களும், அதிரடி படை யினர் 3,300 பேர்களும் ஆக கிட்டத்தட்ட 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்டங் களிலும் நூற்றிற்கும் மேற் பட்ட தற்காலிக திறந்த வெளிசிறைகளும் அமைக் கப்பட்டுள்ளன. நேற்று அயோத்தி நகரில் மத்திய அரசின் துணை போர்ப் படையினர் முக்கிய வீதி களில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Share this