Breaking News

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் மின்நிறுத்த நேரம் மாற்றம்

நிர்வாகி
0
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் 2 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் நேரம் அக்டோபர் 1-ம் தேதி முதல் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.




÷சிதம்பரம் நகரம் நடராஜா மின்னூட்டிப் பகுதிகள்- காலை 8 மணி முதல் 10 மணி வரை, சிதம்பரம் டூரிசம் மின்னூட்டிப் பகுதிகள்- மாலை 4 மணி முதல் 6 மணி வரை, அண்ணாமலைநகர், மாரியப்பாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, அம்மாபேட்டை, மணலூர், வண்டிகேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்- காலை 8 மணி முதல் 10 மணி வரை, பு.முட்லூர், புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்- காலை 10 மணி முதல் 12 மணி வரை, ஸ்ரீமுஷ்ணம் நகரம், சேத்தியாத்தோப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்- காலை 10 மணி முதல் 12 மணி வரை.

Share this