Breaking News

அபுதாபியில் எழுச்சியுடன் நடைபெற்ற முஸ்லிம் லீக் கருத்தரங்கம்!

நிர்வாகி
0

அபுதாபியில் எழுச்சியுடன் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க கருத்தரங்கம்! அப்துல் ரஹ்மான் எம்.பி.பங்கேற்பு!!

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற பேரமைப்பான அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க கருத்தர்ங்கம் 09/10/2010 சனிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பின் துவங்கியது.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் மூத்த தலைவர் களமருதூர் அல்ஹாஜ் ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் -

துவக்கமாக ஹாபிழ்.முஹம்மத் இத்ரீஸ் மரைக்காயர் கிராஅத் ஓதினார்.

பனியாஸ் நிருவன நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ்.அப்துல் ஹமீத் மரைக்காயர்,அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா வரவேற்றுப் பேசினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது,ஊடகத்துறை பொருப்பாளர் முதுவை ஹிதாயத்,மூத்த வழக்கறிஞர் இஜாஜ் அஹமத்,இந்தியன் பள்ளி தலமையாசிரியர் ஷேக் அலாவுத்தீன்,காயிதெமில்லத் பேரவை துணைத்தலைவர் ஷம்சுதீன்,கேரள முஸ்லிம் கலாச்சர மைய பொதுச் செயலாளர் ஷர்ஃபுத்தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் சிரப்புரையாற்றினார்.

காயிதெமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும்,மாநில மாநாட்டின் விழாக் குழுத்தலைவருமான அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலை ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.

இராமநாதபுரம் எம்.எஸ்.பரகத் அலி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியை அமீரக காயிதெமில்லத் பேரவையின் அபுதாபி மண்டலச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.

நிகழ்சிக்கு தலமை வகிக்க இருந்த அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி சிங்கப்பூர் சென்று திரும்பும் சமயத்தில் விமானத்தை தவர விட்டதால் நிகழ்ச்சி சிறக்க வாழ்த்து தெரிவித்திருந்தார்.அதே போல் நோபள் மரைன் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ்.ஷாஹுல் ஹமீது தாயகம் சென்றிருந்ததால் அவரும் நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களின் ஜமாஅத் நிர்வாகிகள், நல சங்கங்களின் பொருப்பாளர்கள்,இளைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்த்தது.

நிகழ்ச்ச்சியில் கலந்துக்கொண்ட சமுதாய ஆர்வலர்கள் பலரும் அமீரகம் முழுதும் பரந்து வாழும் சமுதாய இளைஞர்கள் தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் அடக்கமான பணியையும்,பாணியையும் இணைய தளங்களின் வாயிலாக பார்க்கத் துவங்கியிருப்பது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தனர். சமுதாயம் என்றுமில்லாத அளவிற்க்கு இன்று உன்னிப்பாக கவனிக்க துவங்கியதின் பலன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அமீரகமும் உறுதி செய்தது அல்ஹம்துலில்லாஹ்..!

Share this