பாபரி மஸ்ஜிதை இடித்த 42 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுக தொடர் முழக்க போராட்டம்
நிர்வாகி
0
பாபரி மஸ்ஜிதை இடித்த 42 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
தமுமுக தொடர் முழக்க போராட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் A.யாசர் அரபாத் வெளியிடும் பத்திரிகை அறிக்கை
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் இந்த டிசம்பர் 6 உடன் நிறைவடைகின்றது. பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட டிசம்பர் 6, 1992 அன்று பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படுமென அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டதுடன் மட்டுமில்லாமல் பாபர் பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகளும் சுதந்திரமாக உலா வருகின்றார்கள். பாபர் பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த சொத்து வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு செப்டம்பர் 30 அன்று வழங்கிய தீர்ப்பு நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான அநீதியான தீர்ப்பாக அமைந்துள்ளது. இச்சூழலில்
பாபர் பள்ளிவாசல் இடிப்பிற்கு காரணமானவர்கள் என்று நீதிபதி லிபரஹான் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ள 68 குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும்,
பாபர் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பாக ரேபேரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் குற்றவியல் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரியும்,
பாபர் பள்ளிவாசல் சொத்து தொடர்பான அலஹாபாத் உயர;நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் நியாயமான தீர்ப்பு விரைவில் வழங்க கோரியும்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழகத்தில் 42 இடங்களில் இன்று திங்கள் கிழமை டிசம்பர் 6 அன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த வரிசையில் இன்று கடலூர் மாவட்ட தமுமுக சார்பாக
கட்டுமன்னர்கோயில் நகரில் பேருந்து நிலையம் அருகில் கடலூர் மாவட்ட (தெற்கு) தமுமுகவின் மெஹரஜ்தீன் தலைமையில் நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்குக் கொண்டனர். இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் தமீமுன் அன்சாரி ஆகியோரும் பங்குக் கொண்டு கண்டன உரையாற்றி தங்கள் ஆதரவு முழக்கத்தை எழுப்பினர்.
தமுமுகவின் மாவட்டச் செயலாளர் கொள்ளுமேடு அமானுல்லாஹ் , மாவட்டப் பொருளாளர் முஹம்மது அய்யூப் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பேரூராட்சி மன்ற லால்பேட்டை ,கொள்ளுமேடு , ஆயங்குடி தலைவர்கள் , ஊர் ஜமாத்தினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆகியோரும் போராட்டத்தில் பங்குக் கொண்டனர்.
தகவல்: எகீன் அஹமது,

Tags: சமுதாயசெய்தி