Breaking News

லால்பேட்டையின் இன்றைய மாணவர்கள்,மற்றும் இளைஞர்களின் நிலை ஓர் ஆய்வு...

நிர்வாகி
0
லால்பேட்டை என்ற உடன் அனைவரின் கண் முன்னும் நிற்பது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியும்,ஊரின் நிலைகுலையாத ஒற்றுமையும் தான் என்றால் மிகவும் பொருந்தும்!


ஒரு காலம் இருந்தது அரசுப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்த போதும் எந்தக் குடும்பத்து பிள்ளைகளும் தொடர்ந்து மேற்படிப்புக்காக முயற்சிக்காத காலம்..

இன்று பள்ளிக்கூடங்கள் தரம் வாய்ந்தவைகளாகவும்,கல்லூரியை துவங்கக்கூடிய அளவிற்க்கு வளர்ச்சி பெற்றுள்ள கல்வி நிறுவனங்களையும் பெற்றிருக்கும் இவ்வூரில் கல்லூரி இல்லா விட்டாலும்,ஊரைச் சுற்றி பல கல்வி நிறுவனங்களும்,மூன்று மணி நேர பயணத்தில் தமிழகத்தின் மத்தியப் பகுதி திருச்சிக்கும்,ஐந்து மணி நேர பயணத்தில் தலை நகர் சென்னையிலும் சென்று தரம் மிக்க கல்லூரி,பல்கலைக் கழகங்களிலும் படிக்கும் கூட்டம் பெருகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்!

அவ்வாறு படிக்கச் சென்று, மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை திட்டமிடாமல்,படிப்புகளில் முழுகவனம் செலுத்தாமல்,வெளி நாடுகளில் இருந்தும் ஊரில் இருந்தும் பெற்றோர்கள் அனுப்பும் பணத்தை எவ்வழியில் செலவிடுகின்றனர்?என்பதை கண்காணிக்க முடியாமல் போவது ஒருபுறமிருந்தாலும்,பணத்தேவை வேண்டும் போதுஅதற்கு படிப்பு மிக அவசியமாகிறது என்பது விளங்க வைக்க முடியாத சூழலையும் பெற்று விடுகிறார்கள்.

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தினங்கள் லீவு கிடைத்து விட்டால் அதை கழிக்க பல நூறுகள் செலவு செய்து வீட்டிற்க்கு வரக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வாறான சூழலில் கல்வி பயிலும்போது கண்டிப்பாக ஓர்மையுடன் அவர்களின் மனதில் எந்த பாடமும் பதியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று!

இருந்தும் தந்தை,அண்ணன்,மாமா,மச்சான் போன்ற உறவு பெற்றவர்கள் இவர்களில் யார் மூலமாவது வெளி நாட்டில் இருந்து விசா வந்து விடும். படிப்பது ஊருக்காகவும் பேருக்காகவும் தான், நாம் தான் கை நிறைய கரண்சியை அள்ள ஃபாரீன் போகப் போகின்றோமே என்கிற கனவில் கல்வியை கோட்டை விட்டு விமானம் ஏறி வந்து விட்டதால் கிடைக்கும் வேளையை பார்க்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளாகி நிற்பது ஒரு புறம்,

நன்கு படிக்காத காரணத்தால் பல நிறுவனங்களில் நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாத சூழலால் நல்ல வேளை வாய்ப்புகளை இழந்து நிற்கிறது இன்னொரு கூட்டம்.





கல்வி+ஒழுக்கம் =வெற்றி Education is Liberation





எல்லாவற்றிர்க்கும் மூல காரணமாக அமைவது நல்லொழுக்கமும், நன்னடத்தை மிகுந்த வளர்ப்பும் தான்.இதில் எந்த குறைபாடும் இல்லை என்பதை மார்தட்டிக்கொள்ளும் எவரும் ஒரு நிமிடம் யோசிக்கட்டும்...?

தங்கள் குழந்தை செல்வங்கள் மீது அசாத்திய நம்பிக்கை இருக்கிறது என்கிற பெயரில்,தங்கள் பிள்ளைகள் இணைந்திருக்கும் நண்பர்களையும்,செல்லுகின்ற இடங்களையும் ஒரு முறையாவது கண்காணித்துள்ளோமா,கேட்டிருக்கிறோமா? என்றால் பெரும்பாலான பெற்றோர்களிடமிருந்து இல்லை என்கிற பதில் தான் மேலோங்கி நிற்கும்.

இது கண்டிப்பாக களையப்பட வேண்டிய ஒன்று!

தின்ந்தோறும் இல்லா விட்டாலும் வாரம் ஒரு முறையோ மாதம் இரு முறையோ அவர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் கண்காணிப்பு கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.அப்படி இருந்தால் தான் நாம் எதிர்பார்க்கும் பிள்ளைகள் எதிர்கால குடும்ப முன்னேற்றத்திர்க்காகவும், சமுதாயத்திற்காகவும் உருவெடுப்பார்கள்.

இவ்வளவு தகவல்களையும் தருவதற்க்கு காரணம்,தற்பொழுதுள்ள நிலையில் லால்பேட்டையில் இளைஞர்களும்,மாணவர்களும் பெரும்பாலானவர்கள் பொறுப்பற்று காலத்தை மட்டுமல்லாது காசுகளையும் வீணடித்துக் கொண்டிருக்கும் அவல நிலைதான் என்பதை கனத்த இதயத்தோடு பதிவு செய்கிறோம்.

கவனகுறைவான கல்வி கண்டிப்பாக பயன் தராது என்பது ஒருபுறமிருந்தாலும்,அவ்வளவு காலமும் காசும் வீண் என்பதும் மறுக்க முடியாத நிதர்சன உண்மை!!

இவ்விஷயத்தில் பெற்றோர்கள் உஷாராக இருந்து தங்களின் வாரிசுகளை வழி நடத்த முன்வர வேண்டும்!

Tags: கட்டுரை லால்பேட்டை

Share this