Breaking News

கலைஞர் வீடு வழங்கும் திட்டம்: பேரூராட்சியில் கணக்கெடுப்புப் பணி

பக்கர்Brothers.kollumedu
0
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக பேரூராட்சியில் கணக்கெடுப்புப் பணி துவங்கப்படவுள்ளது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2011 முதல் 2016 வரையுள்ள 5 ஆண்டு காலங்களில் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பேரூராட்சிகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை செயல்முறைப்படுத்துவதற்காக, குடிசை வீடுகள் கணக்கு எடுக்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள குடிசை வீடுகளின் சுவர்கள் எத்தகையதாக இருப்பினும், அனைத்து ஓலை கூரைகள் உள்ள குடிசை வீடுகளும் கணக்கெடுக்கப்படும்.

ஒவ்வொரு பேரூராட்சி பகுதியில் உள்ள குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணி அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலரின் மேற்பார்வையில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை ஒவ்வொரு வார்டு வாரியாகவும், வார்டில் உள்ள தெருக்கள் வாரியாகவும் மேற்கொள்ளப்படும். இந்த விரைவான கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ள பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி கணக்கெடுப்புப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிசையின் உரிமையாளர், வசிப்பவர்கள் பின்னணியில் குடிசை உள்ளவாறு குடிசையையும் சேர்த்து கணக்கெடுப்பாளர்களால் புகைப்படம் எடுக்கப்படவுள்ளது. கணக்கெடுக்கும் பேரூராட்சி பணியாளர்கள் தங்கள் பகுதிக்கு வருகை தரும்போது கணக்கெடுப்பு பணிக்கு தகவல்கள், ஆவணங்களை கொடுத்து கணக்கெடுப்பு முழு அளவில் நடைபெற ஒத்துழைப்பு நல்கிட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: தினமலர்
visit: கொள்ளுமேடுxpress

Share this