Breaking News

அமீரக காயிதெ மில்லத் பேரவை ஓர் பார்வை

நிர்வாகி
0
நமது தாய் சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு தொடர்ந்து செய்து வரும் பொது, அரசியல், மார்க்க பணிகள் மற்றும் சேவைகள் என்றும் அழியாத வரலாற்று சான்றுகளாக உள்ளன. இன்று எத்தனையோ கட்சி, கழகம், இயக்கம், ஜமாத் என்று பல பிரிவினைகள் செய்து சமுதாய பெயரில் வந்தாலும், இவர்களின் பிரதான நோக்கம் சுயவிளம்பரம், அதன் தலைவர்களை முன்னிலைப்படுத்தி சொந்த லாபம் அடைவதற்காகவே இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விசயம்.


எந்த வித பகட்டு தோரனை மற்றும் ஆரவாரம், ஆர்பாட்டமற்ற அமைதி வழியில் எத்தனையோ நன்மையான காரியங்களை சமுதாயத்திற்கு செய்து இன்றும் மக்கள் மனதில் நீக்காமல் இடம் பிடித்த சமுதாயத்தின் மாபெரும் இயக்கம் தான் நமது இந்திய யுனியன் முஸ்லிம் லீக்.

தமிழகத்தில் அனைத்து ஊர் ஜமாத்தினர்களும் என்றும் சொந்தமாக உறவாடும் இயக்கம் முஸ்லிம் லீக். வரலாறு தெரியாத விவேக இல்லாதவர்களுக்கு எத்தனையோ முஸ்லிம் லீக் சாதனை தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. முஸ்லிம் லீக் பணி, சேவை என்பது அல்லாஹ்வின் திருப்பொருத்ததை வேண்டி செய்யப்படுவது தான், செய்த காரியங்களை பத்திரிகையிலும், இணையத்திலும் பெரிதாக்கி காட்டி பெருமை அடிப்பது நமது நோக்கம் அல்ல.

வெளிநாட்டிற்கு வேலை மற்றும் தொழில் என்று சென்றவர்கள் தங்களின் தாய் சபைக்கு தாம் வசிக்கும் நாட்டில் ஒர் அமைப்பு வேண்டும் என்ற கருத்தில் முஸ்லிம் லீக் சார்பாக காயிதெ மில்லத் பேரவை தொடங்கி பல்வேறு சமுதாய நலப்பணிகளும், பொதுப்பணிகளும் தொடர்ந்து தமிழகத்திற்கும், வசிக்கும் நாட்டில் இருப்பவர்களுக்கும் செய்துவருகிறார்கள். இந்த காயிதெ மில்லத் பேரவை தாய் சபையின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு ஆகும். இந்த அமைப்பு தமிழகத்தில் ஒரு மாவட்ட அளவில் தகுதி பெற்றது.

சமுதாய இயக்கம் என்றால் முஸ்லிம் லீக் ஒன்று மட்டுமே இருந்த காலத்தில் அமீரகத்தில் முஸ்லிம் லீக் சார்பாக காயிதெ மில்லத் பேரவை தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக சகோதரர் இராஜகிரி தாவுது பாட்சா அவர்களும், அமைப்பின் பொது செயலாராக சகோதரர் முத்துபேட்டை அப்துல் ரஹ்மான் அவர்களும் இருந்தார்கள். காயிதெ மில்லத் பேரவையின் கிளைகள் துபை, அபுதாபி (அல்அய்ன் உட்பட), சார்ஜா, ராசல் கைமா, அஜ்மான் என்று விரிவுப்படுத்தப்பட்டன. பத்து ஆண்டுகளுக்கு முன் காயிதெ மில்லத் பேரவை நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டு அதன் தலைவராக முத்துபேட்டை அப்துல் ரஹ்மான் அவர்களும், பொது செயலாராக குத்தாலம் லியாக்கத் அலி அவர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். தமிழகத்திலிருந்து அமீரகம் வரும் அரசியல், கல்வி, பொது சமூக பிரதிநிதிகளுக்கு வரவேற்பு பொது கூட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவர்களிடையே கருந்துகளை பரிமாற்றி கொள்ள வாய்ப்பளித்தார்கள்.

தமிழக பிரதிநிதிகள் முதல் அனைவர்களுக்கும் அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சேவையை நன்கு அறிந்தவர்கள்.



அத்துடன் இந்திய தூதரகத்தில் இருக்கும் இந்திய சேமநல குழுவில் காயிதெ மில்லத் பேரவை இணைத்து கொண்டு பல்வேறு சமுதாய நலப்பணிகளை செய்தார்கள். அமீரகத்தில் பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட காலத்தில் தூதரக ஒத்துழைப்புடன் பாஸ்போர்ட் இல்லாமல் இருந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பை பயன்படுத்தி அமீரகத்தை விட்டு தயாகம் திரும்ப வெளியில் செல்லுவதற்கான தற்காலிய அனுமதி சீட்டு வழங்க பரிந்துரை செய்ததுடன், அதை குறித்த நேரத்தில் வாங்கி கொடுத்து இன்னல் பட்ட தமிழர்களை இந்தியா அனுப்ப உதவி செய்தது. அத்துடன் விமான பயணசீட்டு வாங்க முடியாத நிலை இருந்தவர்களுக்கும் அதை பெற்று தரும் உதவியையும் காயிதெ மில்லத் பேரவை செய்தது.

இயற்கை மற்றும் விபத்தில் இறப்பவர்களின் உடலை எந்த வித சாதி, மத வேறுபாடு இல்லாமல் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும் அறப்பணிகளை தொடர்ந்து இந்திய தூதரக மூலம் செய்து வருகிறது. இதன் மூலம் அனைத்து தரப்பினர்களின் நன்மதிப்பை காயிதெ மில்லத் பேரவை பெற்று வருவது பெருமையான விசயம்.

பேரவையின் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, தமிழக முஸ்லிம் லீக் நிர்வாகத்தில் முனைப்புடன் செயலாற்றினார்கள். அதன் தொடர்ச்சியாக நடந்த காயல்பட்டினத்தில் நடந்த பொதுக்குழுவில் சர்வதேச காயிதெ மில்லத் பேரவையின் ஒருங்கிணைப்பளராக தேர்வு செய்யப்பட்டார்கள். அதன் பின் வளைகுடா நாடுகளில் காயிதெ மில்லத் பேரவை தொடக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்ஹாங் போன்ற நாடுகளில் பேரவை எற்படுத்தப்பட்டது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பளராக பேரவையின் தலைவர் அப்துல் ரஹ்மான் நிறுத்தப்பட்டு, அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவர் பேராசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் பெயரில் இன்று சமுதாயத்தின் குரலாக தமிழத்திலும், தலைநகர் டில்லிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

தற்போது அமீரக காயிதெ மில்லத் பேரவை நிர்வாகம் சில வருடங்களுக்கு முன் புதிய நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டு இதன் தலைவராக குத்தாலம் லியாக்கத் அலி அவர்களும், பொது செயலாளராக திருப்பனந்தாள் முகம்மது தாஹா அவர்களும் தொடர்ந்து பேரவையின் செயல்பாடுகளை முனைப்புடன் செய்து வருகிறார்கள்.

இந்த புதிய நிர்வாகம் பல வகையில் அமீரகத்தில் இருப்பவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக இரத்த தானம் முகாம், மருத்துவ மனையில் நீண்ட கால நோயாளியாக இருப்பவர்களுக்கு உதவி மேலும் சிறு குற்றம் செய்த காரணத்தால் அமீரக சிறைச்சாலையில் உள்ளவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை முறையாக இந்திய தூதர மூலம் பெற்று கொடுத்தால் என்று ஆதரவு கரம் நீட்டி சிறப்பாக மக்கள் சேவையாற்றி வருகிறார்கள். இந்த சேவைகள் எதுவும் சுயவிளம்பரம் செய்யாமல் அமைதியாக தேவையை உணர்ந்து உதவி வேண்டி இருப்பவர்களுக்கு தொடர்ந்து இந்த புதிய தலைவரும், பொது செயலாளரும் செய்து வருகிறார்கள்.

எப்படி இந்தியாவில், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை நோக்கமாக கொண்டு அனைத்து தரப்பின் அன்பையும் ஆதரவையும் கொண்டு செயல்படும் இயக்கமாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தாய் சபை இருக்கிறதோ, அதன் தலைவர் வழிகாட்டுதலின் பெயரில் அமீரக காயிதெ மில்லத் பேரவை அனைத்து தரப்பு மக்களின் தேவையை உணர்ந்து செயல்படுகிறது. பல முறை இந்திய தூதரக அதிகாரிகளின் பாராட்டை பெற்ற ஒரே அமைப்பாக அமீரக காயிதெ மில்லத் பேரவை சேவையாற்றி வருவது நமக்கு எல்லாம் பெருமை தரும் விசயம் தான்.

அமீரக காயிதெ மில்லத் பேரவை சமுதாய நாளிதழ் தொடர்ந்து தடைப்பாடமல் வெளிவரவும், பல்வேறு முஸ்லிம் லீக் மற்றும் சமுதாய வரலாறு நூல்கள் வெளிவர முஸ்லிம் லீக் பதிப்பகத்துடன் சேர்ந்து செயல்படுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளித்து இதற்கு தேவைவுடையவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

தமிழகத்தில் நடக்கும் அனைத்துவித சமுதாய அரசியல் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களுக்கு நேரடி களப்பணியாற்றிய பெருமைக்க நிர்வாகிகளை கொண்டது இந்த அமீரக காயிதெ மில்லத் பேரவையாகும்.

இன்று உலகம் முழுவதும் இந்த காயிதெ மில்லத் பேரவை தொடங்க காரணமாக இருந்த அமீரக காயிதெ மில்லத் பேரவையின் பணிகளும், சேவைகளும் சிறப்பாக நடந்து வருகிறது.

தினசரி பேரவை விபரங்களுக்கு பார்க்க.. http://quaidemillathforumuae.blogspot.com/

Tags: சமுதாயசெய்தி

Share this