Breaking News

இலங்கை வெலிகமையில் மீலாது விழா மௌலானா தளபதி ஏ. ஷபீகுர்ரஹ்​மான்,பேராசிரியர் அப்துஸ் சமத் பங்கேற்ப்பு

நிர்வாகி
0
இலங்கை வெலிகமையில் மீலாது விழா மிக விமர்சையாக நடந்துக் கொண்டிருக்கிறது.
19 .02 .2011 இன்று காலை 10.00 மணிக்கு துவங்கிய கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த தின விழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது இந்தியாவிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணிச் செயலாளர் மௌலானா தளபதி ஏ.ஷபீகுர்ரஹ்மான் மன்பயீ அவர்கள் இலங்கை வெலிகமா வந்தடைந்தார்கள்.அவர்களுடன் லால்பேட்டை ஜெ.எம்.ஏ. அரபிக்கல்லுரி பேராசிரியர் அப்துஸ் சமத் அவர்களும் பாடகர் அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி அவர்களும் வந்துள்ளார்கள்.
பன்னாடுகளிலிருந்து வருகைப்புரிந்துள்ள அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் சங்கைக்குரிய அஸ்சையிது கலீல் அவுன் மௌலானா அவர்களின் இல்லத்தில் குழுமியிருக்கிறார்கள்.
இலங்கை வாழ் தமிழ் மக்களும் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்தும் முஸ்லிம் சகோதரர்கள் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.. காதர் மொகிதீன் அவர்கள் வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்

Tags: சமுதாயசெய்தி

Share this