Breaking News

பெங்களூரு தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரி பொன் விழா துவக்கவிழா..

நிர்வாகி
0
பெங்களூரு ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் 50-வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியின் துவக்க விழா மற்றும் கல்லூரியின் பள்ளிவாசல் விரிவாக்கப் பணி விழா ஆகியவை கடந்த 6ம் தேதி வெள் ளிக் கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற் றது.




முதல் அமர்வு இவ்விழாவிற்கு கல்லூரி யின் முதல்வர் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜ்ரத் தலைமை தாங்கி னார். ஆல் இந்தியா பர்ச னல்லா போர்டு தலைவர் மௌலானா ஷாஹ் ஸய்யித் முஹம்மது ராபிஃ ஹசன் நத்வி முன்னிலை வகித்தார்.



ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல்லா போர்டு செயலாளர் மௌலானா சைய்யத் நிஜாமுத்தீன், மௌலானா ஹகீம் முஹம்மது அப்துல்லா முகீஸீ, வாணியம்பாடி தாருல் உலூம் மஃஅதனில் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது வலியுல்லாஹ் ரஷாதி, மௌலானா அப் துல் கரீம் ரஷாதி, பெங்க ளூரு ஜாமிஆ மஸ்ஜித் இமாம்மௌலானா முஹம்மது ரியாலுர் ரஹ்மான் ரஷாதி, திருச்சி மௌலானா முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி ஆகி யோர் உரையாற்றினர்.



இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மதரஸாவின் சேவை, அல்லாமா அமீரே ஷரீஅத் மௌலானா அபூ ஸவூத் ஹஜ்ரத் (ரஹ்) அவர்களின் தூய எண்ணத் துடனான மார்க்க சேவை, இக்கல்லூரியின் முதல்வர் முஃப்தி மௌலானா அஷ் ரப் அலி ஹஜ்ரத் அவர் களின் மார்க்க சேவை ஆகி யவை பற்றி விரிவாக ஆங் கிலத்தில் உரையாற்றினார்.



கல்லூரியின் இணையதளம் துவக்க விழா



பெங்களூரு ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் இணைய தளத்தை மாநிலங் ளவை துணைத் தலைவர் ரஹ்மான் கான் துவக்கி வைத்தார். இதில், கல்லூரியின் துவக்கம் முதல் பொன் விழா வரையிலான நிகழ்சி களின் தொகுப்புகள், கல்லூ ரியின் பாட திட்டங்கள் ஆகியவை இடம் பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.



இதனைத் தொடர்ந்து கல்லூரியின் பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டு சுமார் 4ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத் தக் கூடிய அளவிற்கு விரி வாக்கம் செய்யப்பட்டுள் ளது.



பள்ளியினை திறந்து வைத்து மக்கா முகர்ரமா வின் மதரஸா சவ்லதிய்யா அரபிக் கல்லூரியின் முதல் வர் மௌலானா மாஜித் மஸ்ஊத் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜும்ஆ குத்பா மற்றும் தொழுகை நடத்தி னார்.



இரண்டாம் அமர்வு



பொன்விழா நிகழ்ச்சி களின் முதல் நாள் நிகழ்ச்சி யின் இரண்டாம் அமர்வு மாலை மக்ரிபு தொழுகைக் குப் பிறகு துவங்கியது. சமுதாய தலைவர்கள், கர்நாடக அரசியல் பிர முகர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், உலமாக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநிலங்களவை துணைத் தலைவர் கே.ரஹ் மான் கான் தலைமை தாங்கி னார்.



இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மத்திய ரயில்வே இணை யமைச்சர் கே.ஹெச். முனி யப்பா, கர்நாடக மாநில அமைச்சர்கள் மும்தாஜ் அலி கான், ஆர். அஷோக், சட்டமன்ற உறுப்பினர்கள் கமருல் இஸ்லாம், ஜமீர் அஹ்மது கான், ரவ்ஷன் பேக், தன்வீர் சேட்,



மேலவை உறுப்பினர் கள் நஸீர் அஹ்மது, அப் துல் அளீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.எம். இப்ராஹீம் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பல முக்கிய பிரமு கர்கள் கலந்து கொண்ட னர்.



மூன்றாம் அமர்வு



இரவு 9.30. மணிக்கு கல்லூரியின் மாணவர் களுக்கு பரிசளிப்பு நிகழ்ச் சியாக துவங்கியது. மௌ லானா ஹகீம் முஹம்மது அப்துல்லாஹ் முகீஸி தலைமை தாங்கி கல்லூரி தேர்வுகளில் முன்னிலை வகித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பு ரையாற்றினார்.



இவ்விழாவில் மௌ லானா காலித் சைபுல்லா ரஹ்மானி, மௌலானா முஹம்மது அய்யூப் ரஹ் மானி, மௌலானா முஹம் மது லுத்புல்லாஹ் ரஷாதி ஆகியோர் உரையாற்றினர்.

Tags: சமுதாயசெய்தி

Share this