Breaking News

லண்டன் தமிழ்ச் சங்கத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களின் புகைப்படம் திறப்பு!

நிர்வாகி
0

லால்பேட்டை இணையதளம் முயற்சி வெற்றி!பொன்விழா கண்ட லண்டன் தமிழ்ச் சங்கத்தில் தேசிய தலைவர்கள் மற்றும் தமிழக வரலாற்று தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் தகுதி வாய்ந்த தலைவர் காயிதெமில்லத் அவர்களின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என்ற விவாதம்அரசியல் நிர்ணய சபையில் எழுந்தபோது இலக்கிய வளமும்,இலக்கண நயமும் பெற்று விளங்கும் என் தாய்மொழி தமிழுக்கு மட்டும் தான் அந்த தகுதி இருக்கிறது ஆகவே தமிழையே இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்று வாதிட்ட காயிதெமில்லத் அவர்களை கடல் கடந்து வாழும் தமிழர்களும் நினைவு கூறும் வகையில் பல்வேறு வகையில் அவர்களின் சிறப்பை உணரத் துவங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
அந்த வரிசையில் லண்டன் தமிழ்ச் சங்கம் செய்துள்ள இந்த காரியம் உலகெங்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ச் சங்கங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
அதன் திறப்பு விழா நிகழ்ச்சி 14.05.2011 சனிக்கிழமை மாலை லண்டன் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது
இதற்க்காக பெரும் முயற்சி மேற்கொண்ட லால்பேட்டை இணைய தளத்தின் ஆசிரியர்.எம்.ஜெ.ஃபத்தஹுத்தீன்,அப்துல் இலியாஸ்,மற்றும் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஷாஜஹான் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் பாராட்டுதலுக்கிரியவர்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கத்தின் செயளாலர் அ. உதய குமரன், துணை தலைவர்கள் ஆன்டனி ஜோசப், கந்தசாமி.
மற்றும் இந்திய தமிழ் முஸ்லிம் நலச் சங்கத்தின் அமைப்புக்குழு உருப்பினர் லால்பேட்டை அப்துல் இலியாஸ் ,அபுசுஹுது,முஹம்மது புஹாரி,முஹம்மது மஃரூப்,ரிள்வானுல்லாஹ், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
லண்டன் தமிழ் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள காயிதெமில்லத் அவர்களின் புகைப்படம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலமையகமான காயிதெமில்லத் மன்ஸிலில் இருந்து வடிவமைத்து அனுப்பபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:அபூ அத்தியா

Tags: செய்தி

Share this