Breaking News

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 116-வது பிறந்த நாள் அனைத்து கட்சித்தலைவர்கள் மரியாதை

நிர்வாகி
0
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் அவர்களின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது அடக்கத்தலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க. மணி, தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டஅனைத்து கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

காயிதெ மில்லத் பிறந்த நாளை கல்வி விழிப்புணர்வு நாளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்து இம் மாதம் முழுவதும் மாண வர்களை ஊக்குவித்தல், ஏழை மாணவர்களுக்கு உதவி புரிதல் உள்ளிட்ட கல்விப் பணிகள் மேற் கொண்டு வருகிறது.

1896-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் 1909-ல் `பால்ய முஸ்லிம் சங்கம்� துவக்கி பொது நலப் பணிகளில் ஈடுபட் டார்.

1920, ஜூலை 20, 21 தேதிகளில் நெல்லையில் நடை பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மூதறிஞர் ராஜாஜியுடன் ஒத்து ழைத்து `பூரண சுதந்திரம் கோரும் தீர்மானம் நிறை வேற பாடுபட்டார்.

மவ்லானா அலி சகோ தரர்களுடன் தொடர்பு வைத்து `கிலாபத்' மற்றும் `ஒத்துழையாமை இயக்கங்களில் தீவிர பங்கு கொண்டார். 1937-ல் அகில இந்திய முஸ்லிம் லீகில் உறுப்பி னராக சேர்ந்த காயிதெ மில்லத், அடுத்த ஆண்டே மதராஸ் ஜில்லா தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட் டார்.

1945-ல் மதராஸ் சட்ட சபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

1948, 49 ஆண்டுகளில் இந்திய அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்து, இடஒதுக்கீடு, ஷரீஅத் பாதுகாப்பு உள் ளிட்ட பிரச்சினைகளில் இந்திய முஸ்லிம்களின் குரலாக ஒலித்தார்.

1952 -58 ஆண்டுகளில் ராஜ்யசபை உறுப்பினராக இருந்த காயிதெ மில்லத் , 1962, 67, 71-ம் ஆண்டு களில் கேரள மஞ்சேரி தொகுதியிலிருந்து 3 முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தொகுதிக்கு செல்லாம லேயே வெற்றி பெற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

1972-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி காலமானார். அன்னாரின் ஜனாஸா சென்னை வாலாஜா மஸ்ஜிதில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் விழா

இந்தியாவில் ஆட்சி மொழியாக தமிழ் வர வேண்டும் என அரசியல் நிர்ணய சபையில் வாதிட்ட காயிதெ மில்லத் பிறந்த நாளை தமிழக அரசு ஆண்டு தோறும் கொண்டாடி வரு கிறது.

கேரளாவிலும், தமிழகத் திலும் எண்ணற்ற கல்லூ ரிகள் தொடங்கப்படுவ தற்கு காரணமாக இருந்து அரும்பணியாற்றிய காயிதெ மில்லத் பிறந்த நாளை `கல்வி விழிப் புணர்வு நாளாக� இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனுசரித்து வருகிறது.

இன்று அவரது 116-வது பிறந்த நாளையொட்டி சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள வாலாஜா மஸ்ஜிதில் உள்ள அவரது அடக்கத்தலத்தில் அனைத்து கட்சித் தலைவர் கள் மரியாதை செலுத்தி னர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலை 11 மணிக்கு நேரில் வருகை தந்து மலர்ப்போர்வை வைத்து மரியாதை செலுத் தினார். அவருடன் ஓ. பன்னீர் செல்வம், கே.ஏ. செங்கோட்டையன் உள் ளிட்ட தமிழக அமைச் சர்கள், சபாநாயகர் ஜெயக் குமார், துணை சபாநாயகர் தனபால், மதுசூதனன், அன்வர் ராஜா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டமன்ற தி.மு.க. கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் காலை 9 மணிக்கு நேரில் வருகை தந்து மலர்ப்போர்வை வைத்து மரியாதை செலுத் தினார்.

அவருடன் மேயர் மா. சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர்கள் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ., வி.எஸ். பாபு, ஆயிரம் விளக்கு உசேன், சேப் பாக்கம் மதன் மோகன், சைதை சுரேஷ், பிரபாகரன், இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட ஏராளமா னோர் வருகை தந்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க. மணி, தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஹாரூண் மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் தனித்தனியாக வருகை தந்து மரியாதை செலுத்தினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூ பக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச். அப்துல் பாசித், திருப்பூர் அல்தாப், மாநிலச் செயலாளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், காயல் மகபூப், கமுதி பஷீர், அணிகளின் மாநில அமைப்பாளர்கள் திருப் பூர் சத்தார், கே.எம். நிஜா முதீன்,

வடசென்னை மாவட் டத் தலைவர் எம். ஜெய் னுல் ஆபிதீன், செயலாளர் ஏ.எச்.எம். இஸ்மாயில், காஞ்சி மாவட்டத் தலைவர் எம்.எஸ். அப்துல் வஹாப், தென்சென்னை மாவட்ட செயலாளர் பூவை எம்.எஸ். முஸ்தபா, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் காயல் அஹமது சாலிஹ், செயலா ளர் மீஞ்சூர் சிக்கந்தர், வேலூர் மாவட்டத் தலை வர் கே.எல். முஹம்மது ஹனீப், செயலாளர் கே. ஜான் பாட்சா, கடலூர் மாவட் டத் தலைவர் கே.ஏ. அமா னுல்லா, எம்.எஸ்.எஃப்.

முஸ்லிம் மாணவர் பேரவை நிர்வாகிகளான ஷாநவாஸ், பாம்புக் கோவில் சந்தை சையது பட்டாணி, லால்பேட்டை யு. சல்மான் பாரிஸ், வடசென்னை மாவட்ட நிர்வாகிகளான ரப்பானி அப்துல் குத்தூஸ், கே.எம். யாசீன், எம். மகபூப் பாட்சா, பெரம்பூர் உஸ் மான் அலி, எம். கஜினி முஹம்மது, திரு.வி.க. நகர் பிலால், நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், எண்ணூர் இப்ராஹீம்,

மகாகவி பாரதி நகர் ஷாஹான், கமருதீன், ஏ.கே. ரபீ, ஜாகீர், துறைமுகம் அப்துல் கபூர், அப்ஸல், ஜே.ஜே. நகர் பாபு, அல்லா பக்ஷ், செரியன்நகர் ரஹீம் பாய், உமர் பாய்,

தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளான கவிஞர் ஷேக் மதார், மேத்தப்பிள்ளை மரைக் காயர், சுல்தான் முகைதீன், ரஹமத்துல்லா ஜமாலி, சேப்பாக்கம் அய்யூப்கான், சைதை முஹம்மது ரியாஸ், பூவை எம்.எஸ். காதர், ஏ.எம்.ஒய். அப்துல் ரஹ் மான், எம். சித்தீக், வேலூர் நகர துணைத் தலைவர் என். ஜியாவூதீன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகபூப் பாட்சா, காலித்கான்,

அறமுரசு அப்துல் காதர், காஞ்சிபுரம் ஷேக் அப்துல் காதர், முஸ்தபா மற்றும் லால்பேட்டை ஹஜ்ஜு முஹம்மது, உத்தமபாளை யம் சுல்தான் மொய்தீன்,

இராமநாதபுர மாவட்ட துணைத் தலைவர் பனைக்குளம் அபூ முஹம் மது உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண் டனர்.

Tags: சமுதாயசெய்தி

Share this