நாம் மறந்த லால்பேட்டை...!
நிர்வாகி
0
அன்பிற்கினிய லால்பேட்டை சொந்தங்களுக்கு,
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.....!!!!
நமது ஊர் “லால்பேட்டை” தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் மறைக்க முடியா அல்லது மறுக்க முடியா அங்கம்.. ஏன் தமிழக முஸ்லிம் அரசியலில் மிகப் பிரதான இடம் லால்பேட்டைக்கு உண்டு என்பது யாராலும் மறுப்பு தெரிவிக்க இயலாது... நம்மில் எத்தனை நபர்கள் யோசித்து இருக்கிறோம், நம்மை விட செல்வத்திலும், கல்வியிலும், வசதி வாய்ப்புகளிலும் மேப்பட்ட எத்தனையோ முஸ்லிம் ஊர்கள் எடுத்துக் காட்டாக ( கீழக்கரை, அதிராம்பட்டினம், காயல்பட்டினம்) போன்ற ஊர்கள் எல்லாம் இருக்கும்போது.. அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பேறு வீராணம் ஏரிக்கரையிலே அமைந்திருக்கும் இந்த பேரூருக்கு மட்டும் என்று.. நம்மில் பலரும் மறந்து இருப்போம்... அதுதான் இறைவன் எதை தன்னுடைய அருள் மறையில் கூறினானோ... நமது வழிக் காட்டி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எந்த நடைமுறையை கற்றுத் தந்தார்களோ... . அந்த “ஒற்றுமை” என்ற அசுர பலம்தான் மேலே குறிப்பிட்ட அனைத்திற்க்கும் காரணம்.... இப்போது அது எங்கே இருக்கிறது???
பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கி எனது ஊரைச் சார்ந்த நினைவுகளை என் உள்ளத்திலே சுழல விடுகிறேன்... எங்கள் வீடுகளில் திருமறையின் சப்தங்கள், வேளை தோறும் பள்ளிகள் நிறைந்தன, தெருவெங்கும் இஸ்லாமிய நிகழ்வுகள், எந்த ஊரில் கலவரம் என்றாலும் பாதுகாப்புக் கருதி எல்லா பேருந்துகளும் எங்கள் ஊர் பஜாரில் அணி வகுத்து நின்றதை எனது பள்ளிக் காலங்களில் பார்த்திருக்கிறேன்.. காவல் துறை உள்ளே வர தயங்கிய நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கின்றன... என் வயதிற்க்கு இரண்டு அல்லது மூன்று ஊர் சண்டைகளை பார்த்திருக்கிறேன்.. அதில் ஒற்றுமையைக் கண்டு வியந்திருக்கிறேன்... இப்படி என் ஊர்ப் பற்றிய பசுமையான நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்... அனைத்திற்க்கும் லால்பேட்டைக்கு தகுதி உண்டு...
என் ஊரில் பஞ்சாயத்து போர்டுக்கு ( பேரூராட்சி ) தேர்தல் இருப்பது என்றே வெகு காலத்திற்க்கு பிறகுதான் தெரிந்துக் கொண்டேன்... 2001 என்று நினைக்கிறேன்.... அன்றைக்கு எனது ஊருக்குப் ப்டித்த சனிதான் இன்றும் ஆட்டுகிறது...
அன்று தான் சில பெரிய மனிதர்கள் (கயவர்கள்) இயக்கங்களின் பெயரால், கட்சிகளின் பெயரால் எனது ஊரின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்தார்கள்... இன்று ஊரின் நிலை என்ன சகோதரர்களே??? அளாளுக்கு இயக்கங்கள், தெருவுக்கு ஒரு கொடி, வெவ்வேறு கொள்கைகள்... வீடு தோறும் பிரச்ச்னைகள் இயக்கங்களின் பெயரால்... பாதை மாறும் இளைஞர்கள், கீழ்த்தரமான, காசுக்காக எதை செய்யவும் துனியும் சில பெரிய மனிதர்கள்.. இதில் எல்லாவற்றிற்க்கும் மேலாக மத ரீதியிலான மோதல்களுக்கு வித்திடக்கூடிய.. இஸ்லாத்திற்க்கு எதிரான காவிகளின் தோற்றம்.... தனி மனித ஒழுக்க சீர்கேடுகள்... இதில்தான் நம்முடைய லால்பேட்டை சுழன்றுக் கொண்டிருக்கிறது... ஷஹீத் அல்ஹாஜ் பழனி பாபா அவர்கள் இலங்கையில் பேருவலையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திலே பேசும்போது அவர்களுக்கு ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து கூறும்போது... என்ன சொன்னார் தெரியுமா???? “தமிழ்நாட்டில் லால்பேட்டை என்ற ஊர் இருக்கிறது என்றும்... அங்கே குடி கிடையாது, காவல் நிலையம் கிடையாது, விபச்சாரம் கிடையாது, தேர்தலுக்கு ஓட்டு கிடையாது, போஸ்டர் கிடையாது, மைக் கிடையாது, கழுத கத்தல் கிடையாது... அந்த ஊர் ஜமாத் ஒன்றுகூடி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று... ஒற்றுமை என்றால் அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்..... என் அன்பிற்கினிய லால்பேட்டையின் சகோதரர்களே... ஒரு காலத்தில் ஒட்டு மொத்த சமுதாயத்திற்க்கும் ஒற்றுமையினை கற்றுக் கொடுக்கும் பல்கலைக் கழகமாக இருந்தாய்....
ஆனால் இன்று....?????
நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்.....
இப்போதும் என் ஊரில் பேரூராட்சி மன்றத்திற்க்கு தேர்தல்....
போட்டி எத்தனைப் பேர்????? தலை சுற்றுகிறது....
இதில் வேறு போட்டியிடும் சில பெரிய மனிதர்கள் ( சமுதாய துரோகிகள்)... சொல்கிறார்கள்.. லால்பேட்டைக்கு சேவை செய்வதுதான் எங்கள் முதல் பனி என்று.... நான் கேட்கிறேன் அதில் எத்தனை பேருக்கு என் ஊரின் வரலாறு தெரியும்... எத்தனை பேருக்கு என் ஊருக்கு தமிழக முஸ்லிம் அரசியலில் இருந்த மறுக்க முடியா பங்களிப்பு தெரியும்.... இஸ்லாமிய இயக்கங்களின் பெயரால் நிற்க்கும் நம் சகோதரர்களைக்கூட ஒரு வகையில் ஏற்றுக் கொளளலாம்... ஆனால்.. இதய தெய்வத்தின் ஆசியோடும், கிட்னி தெய்வத்தின் ஆசியோடும், கருப்பு எம்.ஜி.யாரின் ஆசியோடும், முஸ்லிம்களின் துரோகி தி.மு.க வின் வேப்பாளர்கள் எல்லாம் நமது சமுதாயத்தின் குரல்களா???? உங்களுக்காக அவர்கள் செய்தது என்ன செய்து இருக்கிறார்கள்.. ஒருவர் “முஸ்லிம் தீவிரவாதி என்ன பட்டம் கொடுத்தார்.. இன்னொருவர் “ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது” என்றார்... நன்றாக சிந்தித்து பாருங்கள் இவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களா இந்த சமுதாயத்தின் குரல்கள்..... அதிகம் பேச நேரமில்லை... வேண்டுவது ஒன்றுதான்.... என் உள்ளத்தாலும், உடல் உழைப்பாலும் நாம் தொலைத்துவிட்ட லால்பேட்டையை புலர் நிர்மானம் செய்ய நினைக்கிறேன்... உங்களுக்கு என் கருத்தில் ஒற்றுமையிருந்தால் வாருங்கள்... களம் காணுவோம்... நம்மை நாம்தான் ஆழவேண்டும்... என் லால்பேட்டையின் சொந்தஙகளே... இதோ நான் புறப்பட்டு விட்டேன்..... நீங்கள்???????????
நேசமுடன்,
அ. ரைசுல் இஸ்லாம்
சிங்கப்பூர்.pelrais@gmail.com