Breaking News

லால்பேட்டையில் நடைபெற்ற மருத்துவ முகாம்

நிர்வாகி
0
லால்பேட்டை_துபை_ஜமாத் ஸ்பான்ஸரில் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் அல்ஜமா பைத்துல்மால் இணைந்து நடத்திய இருதய நோய்களுக்கான மாபெரும் இலவச_மருத்துவ_முகாம் நேற்று முபாரக் ஜூம்ஆ ஷரீப் மஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் லால்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த ஏராளமானோர்
கலந்துக்கொண்டு BP, Sugar, ECG, Echo உள்ளிட்ட இலவச சிகிச்சைகள் மற்றும் இருதய டாக்டர்களின் ஆலோசனைகள் பெற்றனர்.

இதில் 18 நபர்களுக்கு இருதய நோய்களுக்கான அறிகுறிகள் இருந்ததால் வரும் திங்கள்கிழமை இலவச மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவுள்ளனர்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்த அல்ஜமா பைத்துல்மால் நிர்வாகிகளுக்கும் மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் லால்பேட்டை துபாய் ஜமாத் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this