லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா
நிர்வாகி
0
லால்பேட்டையில் இருந்து புனிதமிகு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா புதுப்பள்ளிவாசலில் இன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு புதுப்பள்ளிவாசல் முத்தவல்லி வி.ஜே.குத்புத்தீன் தலைமை வகித்தார்.
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர் கடலூர் மாவட்ட காஜி மௌலானா ஏ.நூருல் அமீன் ஹள்ரத், புதுப்பள்ளிவாசல் இமாம் மௌலானா முஹம்மது முஹசீன்ஹள்ரத்.ரில்வனுல்லாஹ் ஹள்ரத்.ஜாமிஆவின் பேராசிரியர் மௌலானா முனவ்வார் ஹள்ரத்.அவர்களும்.
சிறப்பு விருந்தினராக
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரின்.முன்னாள் மாணவரும் மன்பஈ பேரவை பொருளாளர் முதுக்குளத்தூர் மௌலானா பஷீர் ஷேக் ஹள்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் லால்பேட்டை காட்டுமன்னார்குடி.ஆயங்குடி.கொள்ளுமேடு ஹாஜிகள்,மற்றும் சங்கைமிகு ஆலிம்கள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை செய்திகள்