லால்பேட்டைக்கு அரசு மருத்துவனை வேண்டி மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக சட்டன்ற உறுப்பினரிடம் கோரிக்கை...!
கடலூர் மாவட்டம் லால்பேட்டை தெற்கு தோப்பு பின்புறம் அமைந்துள்ள அரசு மருத்துவமனையும் மற்றும் கொத்தவால் தெருவில் அமைந்துள்ள அங்ஙண்வாடி மையம் ஆகியவை பல காலம் இயங்காமல் இருப்பதை சுட்டிகாட்டி மீண்டும் மக்கள் பயன்பெற புதுப்பித்து தரவும் அல்லது மக்கள் பயன்பெறும் வகையில் அரசு பொது மருத்துவமனை உருவாக ஏற்பாடு செய்ய வேண்டுமென காட்டுமன்னார் குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.N.முருகமாறன் M.L.A B.L அவர்களிடம் மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது .
அதற்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்:
லால்பேட்டை ஓர் பேரூராட்சியாகவும், இப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்களும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டு மற்ற மதத்தை சார்ந்த மக்களும் உள்ளார்கள். எனவே அவசியம் பொது அரசு மருத்துவமனை ஒண்றை நிறுவி தர வேண்டுமென அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், மேலும் இக் கோரிக்கையை தொடந்து அரசிடம் வலியுறுத்தி கேட்டு, விரைவில் பெற்று தர ஏற்பாடுகள் செய்கிறேன் என உறுதியளித்தார்.
அதே போன்று மேற்குறிப்பிட்ட இரண்டு சுகாதார நிலையையமும் மீண்டும் இயங்க வைக்க முடியாத சூழ்நிலை உள்ளது என குறிப்பிட்டார்.
அவரது ஒத்துழைப்பிற்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி பாராட்டி விடை பெற்றோம்.
இந்த சந்திப்பில் மர்ஹபா சமூக நலப்பேரவையின் ஒருங்கிணைப்பாளரகள் M.ஷூஐப்புத்தீன், S.A.ரஃபி அஹமது, ,மற்றும் T.ஜாக்கீர் ஹூசேன்,ஜின்னா,அஜிதுர்ரஹ்மான், K.சைபுத்தீன், கூட்டறவு சங்க தலைவர் A.S.நஜீர் அஹமது,மஜக மாவட்ட செயலாளர் O.ஜாக்கீர் ஹூசேன்,நெய்வாசல் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் T.முருகானந்தம் ஆகியோர் இருந்தனர்.
அல்லாஹ் அரசு பொது மருத்துவ மணை ஒன்று லால்பேட்டையில் அமைய துணை புரிவானக!
இங்ஙனம்
மர்ஹபா சமூக நலப் பேரவை
Tags: லால்பேட்டை செய்திகள்