கொள்ளுமேட்டில் இ.யூ. முஸ்லிம் லீக் கொடியேற்று விழா
கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேட்டில் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் நஜீர் அஹமது நினைவு கொடி கம்பத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் கொடியேற்றுவிழா மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் 30-08-2019 வெள்ளிக்கிழமை மாலையில் நடைப்பெற்றது.
விழாவுக்கு கொள்ளுமேடு ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அபுல் ஹசன் தலைமை வகித்தார் .கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ. அமானுல்லா , லால்பேட்டை நகர தலைவர் எம்.ஓ.அப்துல் அலி , நகர செயலாளர் முஹம்மது ஆசிஃப் , மதீனா பள்ளிவாசல் முத்தவல்லி ஹலீபுல்லா , கொள்ளுமேடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ வரவேற்றுப் பேசினார், மெளலானா நிஜார் அஹமது கிராஅத் ஓதினார் , இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் சிறப்புரையாற்றினார் , இ.யூ. முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மெளலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் கொடியேற்றி வைத்து துஆ செய்தார், அபுதாஹிர் நன்றி கூறினார் . இந்நிகழ்ச்சியில் அபுல் மல்ஹர் , ஷஃபீகுர் ரஹ்மான் , மெளலானா முஹம்மது ஷஃபீ மன்பஈ ,முனவர் ஷூஸைன் , யஹ்யா , சவுகத் அலி , முஹம்மது காஸிம் , முஜிபுர் ரஹ்மான் , மஸ்ஊத் , ஜுனைது , ஏ. உனபதுர் ரஹ்மான், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பொருளாளர் அஹமது , மாவட்ட இளைஞரணி பொருளாளர் முபாரக் , மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் முஹம்மது அப்பாஸ் , அப்துல் வாஜிது, லால்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் சைபுல்லா , லால்பேட்டை நகர மாணவர் அணி தலைவர் முஹம்மது அஸ்கர் , கொள்ளுமேடு மாணவர் அணி நிர்வாகிகள் சதாம் ஹுஸைன் , சைபுல்லா ,அஜிஹர், சல்மான் லால்பேட்டை நகர மாணவர் அணி நிர்வாகிகள் முஸா ஹிர் , ஜெமீல் , அஸார் , நிஜாம் மற்றும் கொள்ளுமேடு ஜமாஅத் நிர்வாகிகள் , சமுதாய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
Tags: வட்டார செய்திகள்