Breaking News

ஓபன்பண்ணா! ஒரு பெரிய மலை!!

நிர்வாகி
0

"கதைச் சொல்லல் - கதைகேட்டல்’ என்பதன் கலை வடிவமே இறுதியில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் திரைப்படமாக உருவெடுத்தது எனலாம். சமுதாயம் மேம்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தவறுகளைச் சுட்டிக்காட்டி; சிரிக்கவைத்துச் சிந்திக்கத் தூண்டுவதாக இதழ்களில் கருடத்துப்படங்கள் இடம்பெறுகின்றன அது கூட கதை சொல்வதின் உத்தியே..


இன்றைய நவீன, அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் ,மொபைல், டேப்களில், கம்யூட்டரில் கேம் விளையாடுவதில் குழந்தைகள் மூழ்கி விடுகிறார்கள். குழந்தைகள் ஆரோக்கியமான உடல் விளையாட்டிலிருந்தும், உணவு எடுத்துக் கொள்வதிலிருந்தும், குடும்ப உருப்பிணர்களிடமிருந்தும்
விலகி நிற்கிறார்கள்.


தற்ப்போதய சூழலில் இதை முழுவதும் தடுப்பது இயலாதென்றாலும் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு கதைசொல்லல் மூலம் இதை ஓரளவு குறைக்க முடியும். குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளோடு நேரம் ஒதுக்குவது மிகக் குறைவு. ஒவ்வொரு குழந்தையும் தான் எத்தனை மனிதர்களைப் பார்த்தாலும், ரசித்தாலும் மகிழ்ந்தாலும் தன் அப்பா! மட்டுமே தனக்கு கதாநாயகனாக தெரிவார்.


"அந்த தந்தை என்ற ஹுரோ" சொல்லும் எல்லாமே, அவர்களுக்குச் சாகசங்களாகவே இருக்கும். காடு, மலை, நதி,கடல், வனம், இப்படி பிரபஞ்சத்தின் ஏதோ ஒன்றைக் களமாக வைத்து அவர்களுக்குப் பிரமிப்பூட்டும் அந்த கதையை, ஒரு புறாவை வைத்தோ, அந்த புறாக்களின் கூட்டை வைத்தோ அல்லது அழகான ஒரு செம்பருத்தியின் அழகான செடியை வைத்தோ கதையின் கருவாக்கலாம். அந்த கருவில் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒரு முட்டையிலிருந்து வெளிவந்து தானே இந்த உலகத்தின் சுதந்திர பறவை என்பது போலக் கிழக்கும் மேற்கும் தாவிக்குதிக்கும் சிட்டுக்குருவி போலக் குழந்தைகளுக்குக் கதைகளின் மூலம் தன் நம்பிக்கையூட்டலாம். அந்த கதைகளில் அறிவியல், சமூகம் வரலாறு, பூலோகம், என அதை நவீனப்படுத்தி கதையாக்க வேண்டும். பெரும்புயலில் சிக்கித்தவிக்கும் பெருமரங்கள் இடிப்பொடிந்து விழ" ஒரு சிறு வேரைக் கொண்டு புயலை எதிர்த்து நிற்கும் புற்களின் கதையை சமூகத்தின் தற்ப்போதய சிக்கலோடு இணைத்து கதையாக்க முடியும்
இந்த கதைசொல்லல் என்பது நம் குழந்தைகளோடு நம்மைப் பிணைத்து விடுகிறது. குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் நினைவாற்றலும் அதிகரிக்கிறது.
அந்த கதைகள் கனவாகக் காட்சி தருகிறது, அந்த கனவு! அந்த மகிழ்ச்சி! பின்னொரு நாளில் அவர்களால் சமூகத்தில் காட்சிப்படுத்தப் படுகிறது.


சிறுவயதில் கதைகேட்ட புகழ்பெற்ற நிறைய மனிதர்களை வாசித்திருக்கிறேன், தந்தையிடம், தாயிடம், தாத்தா, பாட்டி இப்படி அவர்களின் நெஞ்சருகில் கதைகேட்டு உறங்கிய ஸ்பில்பெர்க்கையும், லீ கூவான் யூ, ஜான் பெர்க்கின்சன் இன்னும் கூடுதலாய் தன் சமூகத்தின் ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும் சிறுவயதில் கதை எனும் சொற்களால் கேட்டு தன் சுவாசத்தின் வழி மூளை நரம்புகளின் 176000 கிலோ மீட்டர் கடத்திச்சென்று பெருமூளை புறணியின் சுவர்களில் சேமித்து வைத்து, அதை! அதே பெருமூச்சுடன் தன் சமூகத்தின் கண்ணீரை பரியேரும் பெருமாளாக நமக்குக் கதை சொன்ன மாரி செல்வராஜ் வரை!
கதை கேட்ட குழந்தைகள் தான்.


B.ரஹமத்துல்லா.

Tags: கட்டுரை

Share this