Breaking News

மர்ஹபா சமூக நலப் பேரவையின் ஆலோசனைக் கூட்ட அறிக்கை

நிர்வாகி
0
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)

தோன்று புகழ் அனைத்திற்கும் சொந்தமானவன்! நீதித் திருநாளின் நிலையான பெருந்தலைவன் வல்ல ரஹ்மானின் வற்றாத பெருங்கருணை மற்றும் திருப் பொருத்தம், பொது நலச் சேவையில் போராடும் போராளிகளுக்கும், அதில் பங்களிப்பு அளிக்கக் கூடிய அனைவருக்கும் கிடைக்கட்டுமாக! என்ற பிரார்தனையுடன்...!


அல்லாஹ் நாடியதை யாராலும் தடுக்க முடியாது!!!

தடுக்க நினைத்ததை யாராலும் வெற்றி கொள்ள இயலாது!!!

கடந்த 11.10.2019ல் நடைபெற்ற மர்ஹபாவின் தலைமை நிர்வாகக் குழுவின் தீர்மாணத்தின்படி, வல்ல ரஹ்மானின் அளப்பெறிய கருணையினைக் கொண்டு அபுதாபியில் வசிக்க் கூடிய சமூக / சமுதாய சிந்தனையுடைய ஆர்வலர்களில் ஒரு சிலரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் 25.10.2019 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் – ஸலாம் வீதி ஹாஜி S.A. முஹம்மது தையுப் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது.


இக் கூட்டத்தினை ஹாஃபில் அனீசுர்ரஹ்மான் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.


வரவேற்புரையை மர்ஹபாவின் ஒருங்கிணைப்பாளர் S.A. ரஃபி அஹமது அவர்கள் வழங்கி, மர்ஹபாவின் செயல்பாடுகள் குறித்த விளக்கமளித்தார்.


சதகாவின் சிறப்பு மற்றும் பயன் குறித்து மௌலவி உபைதுர்ரஹ்மான் மிஸ்பாஹி சிறப்புரை வழங்கினார்.


மர்ஹபா மூலம் 2016 முதல் 2019 வரை வழங்கப்பட்ட உதவிகளின் விபரத்தை மர்ஹபாவின் ஒருங்கிணைப்பாளர் N. முஹம்மது சித்தீக் சமர்ப்பித்தார்.


மர்ஹபாவின் ஒருங்கிணைப்பாளர் M. ஷூஐப் அவர்கள் தலைமை உரையில், நடப்பு நிலையிலும், எதிர் காலத்திலும் மர்ஹபாவின் சேவைப்பயணம் எப்படி அமையப்பட வேண்டும் என்பது குறித்து விளக்க உரை அளித்தார்.


நன்றி உரையினை ஹாஜி S.A. முஹம்மது தையுப் கூற, மௌலவி உபைதுர்ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களின் துஆவுடன் சிறப்பாக நிறைவுற்றது.


இக் கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த அபுதாயில் வசிக்கும் சமூக / சமுதாய சிந்தனையுடைய புதிய அங்கத்தினர்கள், மிகுந்த ஆர்வத்தோடும், பெரும் எழுச்சியோடும் தங்களது ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கி மன நிறைவை அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!


ஆலோசிக்கப்பட்ட  விஷயங்களும், எடுக்கப்பட்ட தீர்மாணங்களும்

Ø  மர்ஹபா மூலம் வருடந்தோரும் உதவி செய்வதற்கான இலக்கு, தொகை, அதன் உட்பிரிவுகள் இவைகள் குறித்து ஆலோசிக்ப்பட்டு தீர்மாணிக்கப்பட்டது.


Ø  மர்ஹபாவை சிறு குழுவிற்குள் முடக்கி விடாமல், அமீரகம் தழுவிய அளவில் விரிவடைய செய்ய வேண்டும்.


Ø  இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கும் வகையில் மர்ஹபாவை விரிவுபடுத்த வேண்டும்.


Ø  அபுதாபி மற்றும் இதர மண்டலங்களுக்கு பொருப்புதாரிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.


Ø  மண்டல பொருப்புதாரிகள் மற்றும் புதிய அங்கத்தினர்கள் மூலம் பெருவாரியான உறுப்பினர்கள் மர்ஹபாவில் இணைக்கப்பட வேண்டும்.


Ø  புதிய பொருப்புதாரிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்பட வேண்டும்.


Ø  சேவையை நோக்கமாகக் கொண்டு அமீரகத்தில் சிறு சிறு குழுக்களாக இயங்கும் இளைஞர் குழுக்கள் (Youngsters Group) மற்றும் பட்டாளங்களில் மர்ஹபாவின் உதவிகள் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்து அவர்களை மர்ஹபாவுடன் இணைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Ø  எதிர்காலத்தில் தமிழகத்தில் சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் (Lawyers), பத்திரிக்கையாளர்கள் (Journalists) மர்ஹபாவால் உருவாக்கப்பட வேண்டும்.


Ø  வேலை வாய்ப்பிற்கு பயனளிக்க கூடிய பல பயிற்ச்சி மையங்கள் (Training Centres) மர்ஹபாவால் துவங்கப்பட வேண்டும்.


Ø  வரும் டிசம்பர் (2019) மாத தேசிய தின விடுமுறையில் ஒன்று கூடல் (Get Together) நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும்.


Ø  குறுதிக் கொடை (Blood Donation) அளிக்கும் நிகழ்வு இவ்வருட (2019) இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும்


Ø  மர்ஹபாவின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்த தெளிவான செயலாக்கத்தை அமீரகத்தில் வாழும் தமிழ் சமூக உறவுகளிடம் கொண்டு செல்லும் முயற்சி உறுதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடரப்பட வேண்டும்.


மர்ஹபாவின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து வெகுவாக பாராட்டப்பட்டது. அமீரகத்தில் உதவும் கரங்களுக்கான அமைப்பாக மர்ஹபா உருவாக எல்லோரும் துஆ வெய்வோமாக!


இன்ஷா அல்லாஹ், மர்ஹபாவின் முயற்சிகள், சேவைகள், ஆலோசணைக் கூட்டங்கள் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடரும்…. நல்ல முயற்சிகளுக்கு வெற்றி கிட்டட்டும்....


இணைந்து இருப்போம்
நல் இதயங்களோடு…..

இங்ஙனம்

சேவைப்பணியில்
மர்ஹபா சமூக நலப் பேரவை

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this