Breaking News

லால்பேட்டையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தகுதித்தேர்வு நடைபெற்றது.

நிர்வாகி
0
இந்தியாவின் மிக உயரிய பொறியியல் கல்வியாக விளங்கும், மத்திய அரசின் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற கல்லூரிகளின் நுழைவுத்தேர்வு IIT-JEE 2022 மற்றும் மருத்துவ கல்லூரிகளின் நுழைவுத்தேர்வு NEET 2022, ஆகியவற்றுக்கு முஸ்லிம் மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு மிக உயர்ந்த நோக்கில் கடந்த சில வருடங்களாக ‘MS Education Academy - LATEEFI 40’ செயல்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அதற்காக ஹைதராபாத் நகரில் தரம் வாய்ந்த தங்கும் வசதியுடன், ஒரு மாணவருக்கு ரூ 5 இலட்சம் உதவிதொகை மற்றும் ஸ்காலர்ஷிப்புடன், இரண்டு வருடங்கள் ( +1 மற்றும் +2 ) கல்வி மற்றும் நுழைவுத்தேர்வு பயிற்சி இஸ்லாமிய சூழலில் முழுவதும் இலவசமாக தரப்படுகிறது.

அதற்கான தகுதித்தேர்வு நாடு முழுவதும் 120க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று நடைபெற்றது.
லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மெல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தகுதி தேர்வில், இவ்வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சிதம்பரம், பு.முட்லுர் மற்றும் விருத்தாசலம் மங்களூர் ஊர்களிலிருந்து 250க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி முஸ்லிம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழ் நாட்டிலேயே மிக அதிகமான பேர் நம் ஊரில்தான் தேர்வு எழுதினர்.



Tags: லால்பேட்டை செய்திகள்

Share this