அபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா மிகச் சிறப்போடு நிகழ்ந்தேறியது
நிர்வாகி
0
அமீரகத் தலைநகர் அபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா நிகழ்வுகள் மிகச் சிறப்போடு நிகழ்ந்தேறியது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கொறடா மற்றும் கௌரவ ஆலோசகர்,தமிழக முஸ்லிம்களின் தேசியப் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஜனாப்.நவாஸ் கனி MP அவர்கள் ஏற்புரை நிகழ்த்த...
சென்னைப் பல்கலைக் கழக இஸ்லாமிய துறையின் முன்னாள் தலைவர்,பன்னூல் ஆசிரியர்,அரபித்துறை வித்தகர் மெளலானா டாக்டர். சைய்யத் கராமத்துல்லாஹ் பஹ்மனி ஸாஹிப் அவர்கள் சிறப்புறையாற்ற..
சாதனைத் தமிழர், நோபில் மரைன் குழுமத்தின் தலைவர்,சமுதாயப் புரவலர் அல்ஹாஜ் ஷாகுல் ஹமீது ஸாஹிப் அபுதாபி பனியாஸ் மெட்டீரியல் நிறுவன அதிபர் சமுதாய புரவலர் அல்ஹாஜ் ஹமீது மரைக்காயர் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் ஜனாப் குத்தாலம் லியாகத் அலி ஸாஹிப்,ஈமான் துணைத் தலைவர் முஹிப்புல் உலமா மஃரூப் காக்கா ஆகியோர் வாழ்த்துரை வழங்க...
இளம் எழுத்தாளர் அய்மான் துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் அவர்கள் எழுதிய விடியலைத் தேடி நூல் வெளியீடு என சிறப்போடு நிகழ்ந்தேறிய இந்நிகழ்வில் ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரித் தலைவர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், துபை ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜனாப் ஹமீது யாசின் மற்றும் நிர்வாகிகள்,அமீரக காயிதே மில்லத் பேரவையின் துணைத் தலைவர் முஹம்மது தாஹா, பொதுச் செயலாளர் ஜனாப் ஹமீது ரஹ்மான், துணைப் பொதுச் செயலாளர் பரக்கத் அலி மற்றும் நிர்வாகிகள், தொழிலதிபர் சமுதாய புரவலர் கல்லிடை முஹம்மது முஹைத்தீன் அவர்கள், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் அப்துல் மாலிக், மர்ஹபா சமூக நலப் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் ரஃபி அஹமத், நஜீர் அஹமத்,அமீரக மதிமுக தலைவர் பாலமுருகன்,அய்மான் சங்கத்தின் முன்னோடித் தலைவர்கள், உலமாக்கள், சமுதாயப் புரவலர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமுதாயப் பிரமுகர்கள், சகோதர சமுதாய சொந்தங்கள் என பல தரப்பினரும் சங்கமித்து சிறப்பித்தனர்.
Tags: உலக செய்திகள்