Breaking News

வெங்கடம்பேட்டையில் மஸ்ஜிதே இப்ராஹிம் அஹ்மத் அல்கமீரி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

நிர்வாகி
0
வெங்கடம்பேட்டையில் மஸ்ஜிதே இப்ராஹிம் அஹ்மத் அல்கமீரி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

உலமாக்கள் , ஜமாஅத்தார்கள் , சகோதர சமுதாய பெருமக்கள் திரளாக பங்கேற்பு.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வெங்கடம்பேட்டை நகரில் மஸ்ஜிதே இப்ராஹிம் அஹ்மத் அல்கமீரி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா 08/11/2019 வெள்ளி கிழமை காலை நடைபெற்றது .


புதிய பள்ளிவாசல் முத்தவல்லி அல்லாபக்ஷி தலைமை வகித்தார் .

களமருதூர் ஹாஜி ஏ.அஷ்ரப் அலி , களமருதூர் பொறியாளர் மவ்லானா ஏ. முஹம்மது ஜூபாரா , கோட்டகுப்பம் ஏ.அன்வர் பாஷா மற்றும் புதிய மஸ்ஜித் ஜமாஅத்தார்கள் முன்னிலை வகித்தனர் .


மஸ்ஜிதே இப்ராஹிம் அஹ்மத் அல்கமீரி பள்ளிவாசலை கடலூர் மாவட்ட அரசு காஜியும் , லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபு கல்லூரி முதல்வருமான மவ்லானா ஏ.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் திறந்து வைத்து ஜும்ஆ தொழுகை நடத்தி துஆ செய்தார்கள் .


திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தலைவர் ஹாஜி ஜெ. சம்சுதீன் அவர்கள் புதிய பள்ளியை வக்ஃப் செய்தார்கள் .


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் மவ்லானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ , லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபு கல்லூரி பேராசிரியர் மவ்லானா எஸ் . முஹம்மது அலி மன்பஈ ஹள்ரத் , மவ்லானா எம்.ஏ.முஹம்மது பஷீர் மன்பஈ ஆகியோர் சிறப்புரையாற்றினர் .


ஜமாஅத் பிரமுகர் எஸ். ஷாஜஹான் நன்றி கூறினார் .



Tags: சமுதாய செய்திகள்

Share this