டிசம்பர் 06 உரிமை மீட்பு போராட்டம் காட்டுமன்னார்குடியில் ஏராளமான தமுமுகவினர் கைது
நிர்வாகி
0
தமுமுக சார்பாக டிசம்பர் 06 பாபரி மஸ்ஜித் உரிமை மீடபு போராட்டம் மாவட்ட தலைவர் அப்துல் சமது அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்குடியில் நடைப்பெற்றது.
மமக இலக்கிய அணி மாநில செயலாளர் தாஹிர் பாஷா,தலைமை கழக பேச்சாளர் ரெக் ரஃபி,விசிக மாநில வழக்கறிஞர் செயலாளர் தோழர்.பார்வேந்தன்,இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான்,தமிழக வாழ்வுரிமை கட்சி மாணவரணி தலைவர் தோழர் ரவி பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள்,கழக தொண்டர்கள் என அனைவரும் பெருந்திறளாக கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவிதத்தனர்.
Tags: லால்பேட்டை செய்திகள்