Breaking News

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார மையங்களை உருவாக்கும் திட்டம் அரசுக்கு இருக்கிறதா?தொல்.திருமாவளவன் கேள்வி

நிர்வாகி
0

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார மையங்களை உருவாக்கும் திட்டம் அரசுக்கு இருக்கிறதா?  நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் கேள்வி


“தமிழ்நாட்டில் மக்கள்தொகை அதிகமுள்ள மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் 30 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால், அந்த மாவட்டத்தில் மொத்தமே 64 ஆரம்ப சுகாதார மையங்கள் தான் உள்ளன. அதைப் பற்றிய விவரங்கள் என்ன?


கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார்கோயிலில் ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கும் திட்டம் அரசுக்கு இருக்கிறதா?” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான  தொல்.திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினார்.


அதற்கு 22.11.2019 அன்று பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல இணைஅமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே அவர்கள்
“கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள் உள்ளன, 29,02,078 மக்கள் வாழ்கின்றனர்.


கடலூர் மாவட்டத்தில் பின்வரும் சுகாதார நிறுவனங்கள் உள்ளன:
‘ 64 ஆரம்ப சுகாதார மையங்கள்
7 நகர ஆரம்ப சுகாதார மையங்கள்
319 துணை சுகாதார மையங்கள்
1 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை
8 தாலுகா தலைமை அரசு மருத்துவமனைகள்
1 தாலுகா அல்லாத அரசு மருத்துமனை
1 காசநோய் மருத்துவமனை’.

'பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள்' என்பது மாநில விவகாரமாக இருப்பதனால், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட பொது சுகாதார வசதிகளை உருவாக்கும் முதன்மை பொறுப்பு மாநில அரசுக்கே இருக்கிறது. ஆனாலும், பொது சுகாதார வசதிகளை உருவாக்கும் (அ) மேம்படுத்தும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்திட தேசிய சுகாதார திட்டத்தின் (National Health Mission) மூலமாக மாநில அரசுக்கு ஆதரவளிக்கப்படுகிறது.


கடலூர் மாவட்டத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார மையங்களை உருவாக்கும் திட்டங்கள் ஏதும் தற்போது இல்லை என மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது” என பதிலளித்துள்ளார்.

Tags: செய்திகள்

Share this