லால்பேட்டையில் ஜனவரி 30 மனித சங்கிலி போராட்டம் அனைத்து கட்சி கூட்டமைப்பு முடிவு
லால்பேட்டையில் அனைத்துக்கட்சி கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று 22.01.2020 நூர் மஹாலில் சரியாக மாலை 7 மணி அளவில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,மனிதநேய மக்கள் கட்சி,மனிதநேய ஜனநாயக கட்சி,எஸ்.டி.பி.ஐ. கட்சி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,இந்திய தேசிய லீக்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாத், நகர ஜமாத்துல் உலமா, மக்கள் நல அமைப்பு, இஸ்லாமிய தஃவா குழு, தொண்டு நிறுவனங்கள் வளைகுட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். * ஜனவரி 5 நடந்து முடிந்த மாநாடு நிகழ்வுகளை பற்றி இப்பொதுக்குழுவில் பேசப்பட்டது. * பொதுக்குழுவில் அனைத்து கட்சி கூட்டமைப்பு அடுத்தகட்ட செயல்திட்டங்களை பற்றி ஆலோசிக்கப்பட்டது. * 8 நபர்கள் கொண்ட செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட்டது. அனைத்துக்கட்சி கூட்டமைப்பு செயலாளர்கள் விபரம். TMMK M. கியாசுதீன் MMK K.நூருல் அலீம் SDPI M.நாஜிக் அஹமது INL A. நவ்வர் உசேன் IUML A.இனாமுல் ஹக் PFI மெளலவி A.பையாஜ் அஹமது TNTJ மாசுமுல்லாஹ் ஜமாத்துல் உலமா மௌலவி A.R.சலாவுதீன் H. ஜாபர் அலி (அனைத்துக்கட்சி கூட்டமைப்பின் பொருளாளா்)
வருகின்ற ஜனவரி 30 அன்று நமது ஊரில் அடுத்தகட்ட போராட்டமாக CAA NRC NPR போன்ற கறுப்புச் சட்டங்களை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இப்பொதுகுழுவிற்கு வருகை புரிந்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். இப்படிக்கு அனைத்துக்கட்சி கூட்டமைப்பு, லால்பேட்டை,
Tags: லால்பேட்டை